Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல கவர்ச்சி நடிகைக்கு கொலை மிரட்டல்…. மாட்டி கொண்ட நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

இந்தி படம் மற்றும் தொலைக்காட்சிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் உர்பி ஜாவித்.  இவருடைய சமூகஊடக பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் நிறைந்து, ரசிகர்களை கவர்ந்திழுக்கும். அதே நேரம் இவரை பிடிக்காத சிலரும் இருக்கின்றனர். இந்நிலையில் உர்பி ஜாவித்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசிய மர்மநபர், தொடர்ந்து உர்பி ஜாவித்துக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் உர்பி ஜாவித்துக்கு அந்நபர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசி உள்ளார். இது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

பிரபல கவர்ச்சி நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இந்த நிலையில் இவருக்கு தொலைபேசி மூலமாக மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கின்றார். அந்த மர்ம நபர் தொடர்ந்து நடிகைக்கு பாலியல் தொல்லை கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இதுக்குறித்து நடிகை காவல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசருக்கு வந்த புகார்… சிவசேனா மாநில செயலாளர் உட்பட 2 பேர் கைது.. மேலும் விசாரணை..!!

பெட்ரோல் நிலைய மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் சிவசேனா கட்சி மாநில செயலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள பழனிச்செட்டிப்பட்டியில் இருக்கும் கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் இருக்கின்றது. இங்கே மேலாளராக ஹரிங்டன் என்பவர் பணியாற்றும் நிலையில் அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் மேலாளராக பணியாற்றும் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு நாட்ராயன், ஸ்டாலின், குரு ஐயப்பன் உள்ளிட்ட மூன்று பேர் வந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்!…. பிரபல நடிகை பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல்…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் தன்னுடைய வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திர போஸ் சந்திரபோஸ் மீது கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதாவது தன்னுடைய வீட்டில் இருந்த விலை உயர்ந்த கடிகாரங்களை சுபாஷ் திருடி விட்டதாக பார்வதி நாயர் புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் படி நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நடிகை பார்வதி நாயர் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா நிலைமை தான் உனக்கும்”…. மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை….!!!!!

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் சென்ற மே மாதம் டெல்லியில் காதலனால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மற்றொரு பெண் அண்மையில் தன் மகனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி, டெல்லி முழுக்க வீசினார். இந்நிலையில் இந்த சம்பவங்களை  மேற்கோள் காட்டி, அதுபோன்று செய்துவிடுவேன் என தன்னுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை ஒருவர் மிரட்டி இருக்கிறார். மராட்டியம் துலே பகுதியைச் […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல்?…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறார். தற்போது மராட்டியத்தில் அவரது நடைபயணம் நடந்து வரும் நிலையில், ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என்று மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு இனிப்பு கடை வாசலில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் கடிதம் எழுதியவர்கள் யார்..? கடை வாசலில் வீசிச் சென்றது ஏன்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அடையாளம் […]

Categories
தேசிய செய்திகள்

“நான் வேலை வாங்கித் தருகிறேன்”… முன்னாள் அதிமுக எம்எல்ஏ கணவர் மீது புகார்… பெரும் பரபரப்பு…!!!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போக்குவரத்துக் கழகத்தில் ராமசாமி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி இசைக்கலையில் பட்டம் பெற்றுள்ளார். இவர் அரசு இசை ஆசிரியர் வேலை கேட்டு தாராபுரம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அரவக்குறிச்சி பெண் எம்எல்ஏ மரிய முள் ஆசியாவின் கணவர் எம் ஜெயலாணி(70) என்பவரை 2017 ஆம் வருடம் அணுகியுள்ளார். அப்போது ஜெயலானி தனக்கு அரசு உயர் அதிகாரி வரை தெரியும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வருக்கு கொலை மிரட்டல்…. 16 பேர் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

முன்னாள் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் காங்கிரஸ் எதிர்கட்சி தலைவராகவும் இருப்பவர் சித்தராமையா. இவர் சங்பரிவார் அமைப்பின் வீர் சவார்க்கரை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார். இதன் காரணமாக சித்தராமையாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு பாஜகவினர் சித்தராமையாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கருப்புக் கொடி ஏந்தியும் கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் குடகு பகுதிக்கு சித்தராமையா சென்றபோதும் அவருக்கு பல்வேறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வட்ட வழங்கல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மீனவர்”…. போலீஸ்சார் வலைவீச்சு….!!!!

வட்ட வழங்கல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மீனவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராம மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளுக்கு தேவையான மண்ணெண்ணெய் அரசு சார்பாக மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிலர் இந்த மண்ணெண்ணையை பாதுக்கி வைத்து கேரளாவுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த நிலையில் ராமன்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜேசுபாலன் என்பவர் அவரின் வீட்டில் சட்ட விரோதமாக மானிய […]

Categories
உலக செய்திகள்

கவலைப்படாதீங்க!… அடுத்து நீங்க தான்!…. ஹரி பாட்டர் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்….!!!!

உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான்ருஷ்டி (75) மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்கநாட்டின் நியூயார்க் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான் ருஷ்டி விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது மேடையில் திடீரென்று ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியிருக்கிறார். இதனால் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து சல்மான் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகிறார். இதற்கிடையில் சல்மான் மீது தாக்குதல் நடத்திய 24 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்…. துப்பாக்கி கேட்டு கமிஷனரிடம் விண்ணப்பம்…. அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சல்மான்கான் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் நேற்று மும்பையில் புதிதாக பணியமர்ந்துள்ள போலீஸ் கமிஷனர் பன்சால்கரை சந்தித்தார். அப்போது கமிஷனரிடம் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமை வேண்டும் என கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் சித்து முஸ்வாலா கடந்த மே மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவருடைய கொலைக்கு பின்னால் பஞ்சாப் மாநிலத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

தலையை எடுக்க வேண்டுமா….? லீனா மணிமேகலைக்கு கொலை மிரட்டல்…. திடீர் பரபரப்பு…!!!

காளி தெய்வம் சிகரெட் பிடிக்குமாறு போஸ்டரை வெளியிட்ட பெண்மணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை கவின்கலை படிப்பு படித்து வரும் லீனா மணிமேகலை செங்கடல், மாடத்தி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது காளி என்ற ஒரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் காளி தெய்வம் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்‌. […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் உடலில் இருந்து தலையை எடுக்கணுமா?… இயக்குநர் லீனா மணிமேகலைக்கு மிரட்டல்….!!!!

கவிஞர் மற்றும் இயக்குநருமான லீனா மணி மேகலை ஆவணப்படங்களை தயாரித்து இருக்கிறார். அதாவது மாடத்தி, செங்கடல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். கனடாவிலுள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கவின்கலை பயின்று வரும் அவர், கனடாவின் தாளங்கள் என்ற திட்டத்தின் கீழ் காளி தொடர்பான ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். இதையடுத்து இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதில் காளிவேடம் அணிந்த ஒரு பெண் சிகரெட் புகைப்பது போன்றும், ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இது இந்துக்கள் வணங்கும் காளி […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: பிரபல நடிகருக்கு கொலை மிரட்டல்…. பெரும் பரபரப்பு….!!!!

பாலிவுட் நடிகர் சல்மான்கான் தன்னுடைய குடும்பத்துடன் மும்பை, பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கேலக்சி என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகின்றார். இந்த நிலையில்  நேற்று காலை சல்மான் கானின் தந்தை சலீம்கான் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்ற போது, அவருடன் சென்ற பாதுகாவலரிடம் மர்மநபர் ஒருவர் கடிதம் ஒன்றை கொடுத்து விட்டு தலைமறைவானார். இந்த கடிதத்தை அவர் சலீம்கானிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை பிரித்து படித்த போது அதில் அவருக்கும் நடிகர் சல்மான்கானிற்கும் கொலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“எல்லோரும் மிரட்டுறாங்க”… மகன்களுடன் விஷம் குடித்த தாய்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

ஆக்கிரமிப்புகாரர்கள் மிரட்டியதால் மனமுடைந்த பெண் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்துள்ள ஈரியூர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் என்பவருக்கு அம்சா(30) என்ற மனைவியும், ரணீஸ்(11), சபரீஸ்வரன்(9) என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்த நிலையில் இதுகுறித்து அம்சா கீழ்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் அம்சாவை தரக்குறைவாக பேசி, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அம்சா தனது மகன்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின் வேலி அமைக்க கூடாது…. கொலை மிரட்டல் விடுத்த வனக்காப்பாளர்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே நாங்குநேரி வானமாமலை மடத்திற்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. இதனை தனி நபர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வந்துள்ளார். அந்த இடத்தில் வனவிலங்குகள் புகாதவாறு மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வனக்காப்பாளர் கருப்பசாமி தோட்டத்தில் அமைத்திருந்த மின் வேலிகளை சேதப்படுத்தியும் அதை தடுக்க முயன்ற பெண்ணை அவதூறாக பேசியும் தோட்ட மேலாளர் ஐயப்பனுக்கு கொலை மிரட்டலும் அளித்துள்ளார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து வனகாப்பாளர் கருப்பசாமி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிறைய கொலை மிரட்டல் வருது…. பெண் செய்த விபரீத செயல்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ஏ.ஜி.ஆர்.நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் பேபி என்ற சசிகலா(35) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மொபட்டில் வந்த சசிகலா திடீரென நுழைவு வாயில் அருகே வைத்து பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதுகாப்பு போலீசார் உடனடியாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்கள் வழியில் வந்தா அவ்வளவு தான்…. பெண் போலீஸ் வீட்டில் தாக்குதல்…. போலீசார் வலைவீச்சு….!!

பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டை அடித்து உடைத்து பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிலமலை பகுதியில் வசித்து வரும் பாண்டிசெல்வி(30) என்பவர் தேவாரம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று பாண்டிசெல்வி வேலைக்கு சென்ற சமயத்தில் 2 மர்மநபர்கள் அவருடைய வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பாண்டி செல்வி வீட்டு முன்பு இருந்த கண்ணாடியை உடைத்து கொண்டு வீட்டிற்குள் புகுந்தனர். மேலும் பாண்டி செல்வி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பணத்தை திரும்ப தா” நகைக்கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

நகை கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகைகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சுகுமார் என்பவரிடம் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் 2 லட்சத்தை மட்டும் திரும்ப செலுத்தியுள்ளார். இந்நிலையில் சுகுமார் பாக்கி பணத்தை தருமாறு சதீஷ்குமாரிடம்‌ கூறியுள்ளார். அதற்கு சதீஷ்குமார் பணம் வந்தவுடன் திருப்பி தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகுமார் நகைகடைக்குள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

” கொலை செய்து விடுவோம் ” மாணவரை மிரட்டிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் பகுதியில் தென்னம்பட்டி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 18 வயதுடைய சக்திதாசன் என்ற மகன் இருக்கிறார். இவர்  செய்யாறு பகுதியில் இருக்கும் ஒரு ஐ.டி.ஐ கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு பேருந்தில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அந்தப் பேருந்தில் அபினேஷ், யுவராஜ் ஆகியோர் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது பேருந்தில் பயணம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென நடந்த வாக்குவாதம்…. பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. தொழிலாளி கைது….!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள உலகநடை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வசந்தி தன் தந்தை ஊரான செங்கப்படைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் திடீரென வசந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வசந்தியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு…. பெண் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்…. கணவர் அதிரடி கைது….!!

கள்ளகாதலை கண்டித்த பெண் கவுன்சிலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கடமலை-மயிலை ஒன்றியத்தின் 5-வது கவுன்சிலராக உமா மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடமையிலைக்குண்டு பகுதியில் கணவர் வேல்முருகன் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வேல்முருகன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் உமா மகேஸ்வரியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் உமா மகேஸ்வரி […]

Categories
உலக செய்திகள்

இதான் காரணமா…? மகாராணியாருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்…. 2 வருட சதித்திட்டம்…. வெளியான ஷாக் தகவல்….!!

இங்கிலாந்து மகாராணிக்கு கிறிஸ்மஸ் தினத்தன்று கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் தனக்கு 2 வருடங்களுக்கு முன்பாகவே ராஜ குடும்பத்தின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தி மின்னஞ்சல் அனுப்பியதாக எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் மகாராணியான 2 ஆம் எலிசபெத்திற்கு கிறிஸ்மஸ் தினத்தன்று jaswant singh என்னும் 19 வயதுடைய நபர் கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த வீடியோ அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் saurav என்னும் எழுத்தாளர் இது தொடர்பான முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

சமூக வலைதளங்களில்…. முதல் மந்திரிக்கு கொலை மிரட்டல்…. பரபரப்பு சம்பவம்….. !!!!

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களின் மூலம் கேரள முதல்-மந்திரி பினராயிவிஜயனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. பாலக்காடு எலப்புள்ளி கிராமப் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ். 44 வயதுடைய இவர் பா. ஜனதா தொண்டர் ஆவார். இந்தநிலையில் ஜெயபிரகாஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்கள் மூலம் கேரள முதல்-மந்திரி எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஆபாசமாகவும் பேசி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதைப் பற்றி அறிந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் ஜெயப்பிரகாஷ் மீது […]

Categories
உலக செய்திகள்

“உங்களை தூக்கில் தொங்க விட்டு விடுவேன்….” எம்பிக்களுக்கு கொலை மிரட்டல்…. பிரபல நாட்டில் பரபரப்பு…..!!

அமெரிக்க எம்பிக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ட்ரம்பின் ஆதரவாளரான ரைடர் வினிகர் என்பவருக்கு 33 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹேம்ப்ஷயர் மாகாணத்தைச் சேர்ந்த ரைடர் வினிகர் என்பவர் அமெரிக்காவின் முன்னால் அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரம்புக்கு ஆதரவாக அவருக்குப் பின்னால் நிற்காவிட்டால் ஆறு எம்பிகளை தூக்கில் தொங்க விட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“என்னை நீ காதலிக்கணும்” வாலிபர் செய்த செயல்…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

காதலிக்க சொல்லி வங்கி பெண் மேலாளரை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வி.சி.வி. நகரில் நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சவுமியா என்ற மகள் இருக்கிறார். இவர் காஞ்சிக்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சவுமியாவின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தன்னை காதலிக்க சொல்லி வாட்ஸ்-அப் தகவல்களை அனுப்பியுள்ளார். அதற்கு சவுமியா மறுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

’காவல்துறையில் எங்களுக்கு உளவாளிகள் உள்ளனர்’…. பாஜக எம்.பி.க்கு மீண்டும் கொலை மிரட்டல்….. போலீஸ் விசாரணை….!!

காஷ்மீர் ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பாஜக எம்.பி. கவுதம் கம்பீருக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஒரே வாரத்தில் மூன்றாவது முறை பயங்கரவாதிகள் பெயரில் கொலை மிரட்டல் வந்துள்ளது. நேற்று நள்ளிரவு 1.37 மணிக்கு கௌதம் நம்பியிருக்கும் ஐஎஸ் ஐஎஸ் காஷ்மீர்@யாஹூ. காம் என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. அதில் “உங்கள் டெல்லி போலீசார் எதையும் முற்றிலும் ஒழிக்க முடியாது என்றும் எங்களின் உளவாளிகள் போலீஸ் துறையில் உள்ளனர். அதனால் உங்களை பற்றிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி…. மனைவிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஜாமீனில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மனைவிக்கு கொலை விடுத்ததால் காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள ஆண்டாவூரணி கிராமத்தில் ரவிசந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்துள்ளார். இதனையடுத்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்பு கொலை வழக்கில் மேல் முறையீடு செய்து கடந்த ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள்

லிவ்விங் டு கெதர் பானியல் சேர்ந்து வாழ்ந்த காதலர்கள்…. காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆணழகன் பட்டம் பெற்ற காதலன்…. காரணம் என்ன தெரியுமா….??

லிவிங் டுகெதர் பாணியில் சேர்ந்து வாழ்ந்த காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆணழகன் பட்டம் பெற்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் சந்தியா மோகன் (வயது 31) இவர் பூந்தமல்லி அனைத்து காவல் மகளிர் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பூந்தமல்லி காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29) இவர் அந்த பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு சந்தியாவுக்கு சமூக வலைதளம் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

“இனிமே நீ ராமர் வேடத்தில் நடிக்கக்கூடாது”…. ராமராக நடித்த… முஸ்லிம் வாலிபருக்கு கொலை மிரட்டல்…!!!

ராம்லீலா நாடகத்தில் ராமர் வேடமேற்று நடித்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த நபருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அப்பகுதியில் நடைபெறும் ராம்லீலா நாடகத்தில் ராமன் வேடம் ஏற்று நடித்து வருகிறார் டேனிஷ். இவர் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் ஆவார். முஸ்லிமை சேர்ந்த மற்றொரு நபர் இந்த வேடத்தில் நடித்து வருவதால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த நபருக்கும், கொலை மிரட்டல் விடுத்த நபருக்கும் ஏற்கனவே வாடகை பிரச்சினை சம்பந்தமாக மோதல் இருந்துள்ளதால் இந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிக வரதட்சணை கேட்டு… கொலை மிரட்டல் விடுத்த கணவர்… மனைவி பரபரப்பு புகார்…!!

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்தி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் காயக்காரி அம்மன் கோவில் தெருவில் வினோதினி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சுப்பையா சுரேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து திருமணத்தின்போது வினோதினி வீட்டு சார்பில் நகை, பணம், சீர்வரிசை பொருட்கள் ஆகியவை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். இருப்பினும் திருமணம் முடிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்… இளைஞர் கைது…!!

கஞ்சா விற்பனை செய்துவிட்டு பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் உள்ள வல்லம்பர் சந்தோஷ்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கஞ்சா விற்பனை செய்வதாக பார்த்திபனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த சந்தோஷ்குமாரை பிடிக்க முயன்றுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரு தரப்பினரிடையே மோதல்… காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல்… 13 பேர் கைது…!!

இருதரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 12 பேரை கைது செய்த காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்ட அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தாமோதரன்பட்டினம் என்னும் கிராமத்தில் முன்பகை காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் கற்கள் மற்றும் கட்டைகளை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த அப்பாஸ் மற்றும் சக்தி ஆகிய இருவரும் எஸ்.பி. பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து […]

Categories
உலக செய்திகள்

3 தோட்டாக்கள் அடங்கிய கடிதம்…. போப் பிரான்சிஸ்க்கு கொலை மிரட்டல்…. தகவல் வெளியிட்ட இத்தாலிய காவல்துறை….!!

போப் பிரான்சிஸ்க்கு வந்த கொலை மிரட்டல் குறித்து இத்தாலிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்டிகனில் உள்ள போப் பிரான்சிஸ்க்கு கொலை மிரட்டல் கடித உறை ஒன்று வந்துள்ளது. அதில் மூன்று தோட்டாக்களும் ஒரு கடிதமும் உள்ளதாக மிலனில் இருக்கும் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கடிதமானது பிரான்சிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து இத்தாலிய காவல்துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்த மூன்று தோட்டாக்களும் ஒரு கைத்துப்பாக்கிகானதாகும். மேலும் […]

Categories
உலக செய்திகள்

விடுதலையான பயங்கரவாதி…. “மகாராணிக்கு கொலை மிரட்டல்” சுட்டு கொன்ற புலனாய்வு படை….!!

மகாராணியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் சிறப்பு புலனாய்வு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரித்தானியாவில் அரச குடும்பத்திற்கு என தனி மதிப்பும் மரியாதையும் அந்நாட்டில் உண்டு. அந்நாட்டில் மேலவை, கீழவை, நாடாளுமன்றம் என பல்வேறு அரசு அமைப்புகள் இருந்தாலும் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கையெழுத்திட்டால் மட்டுமே ஒரு மசோதாவானது சட்டமாக நிறைவேற்றப்படும். அந்த அளவுக்கு மகாராணியாருக்கு என்று சிறப்பு அந்தஸ்துகள் உள்ளது. மேலும் மகாராணியாருக்கு 90 வயது ஆகிவிட்டாலும்  அவருக்கே உரியதான பாதுகாப்பு வளையம் தளர்ததப்படவில்லை. இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து மிரட்டல்… முன்பகையால் வந்த விளைவு… தந்தை மகனை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த தந்தை மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் உள்ள சுப்புராஜ் நகர் புதுகாலனியில் முருகன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொட்டியம்மாள் என்ற மனைவியும், மணிகண்டன்(26) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரது எதிர்வீட்டில் வசிக்கும் சங்கர் சுப்பிரமணி(58) என்பவருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் முருகன் அவரது மனைவி பொடியம்மாள் மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது …. காவலருக்கு கொலை மிரட்டல் …. 3 பேர் கைது …!!!

காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் . இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தும் படி    […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எல்லா பொருளையும் உடைச்சிட்டாங்க… என்னையும் மிரட்டுனாங்க… கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பகை காரணமாக வீட்டிற்குள் நுழைந்தது கொலை மிரட்டல் விடுத்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள அரண்மனை தெருவில் தங்கராஜ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பெருநாழி பகுதியில் வசிக்கும் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் ஆகியோருக்கும் இடையில் சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சுந்தரபாண்டியன் மற்றும் செந்தில் அவர்களது கூட்டாளிகள் 4 பேருடன் தங்கபாண்டியனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சம்பளம் கொடுக்கல… டிரைவர் செய்த செயல்… அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்…!!

ராமநாதபுரத்தில் அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக தொழில் நுட்ப பிரிவில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவருடைய வாகனத்தின் டிரைவராக ஓம்சக்தி நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சரவணகுமாரும் […]

Categories
உலக செய்திகள்

“எனக்கு கொலை மிரட்டல் வந்துருக்கு”… எல்லாம் அவங்க ரசிகர்கள் தான்… ராயல் நிபுணர் பதற்றம்..!!

ராயல் நிபுணரான கமிலா டோமினி தனக்கு மேகன் மார்க்கல் ரசிகர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். பிரித்தானிய ராயல் குடும்ப வர்ணனையாளரும், தி டெய்லி டெலிகிராப்பின் இணை ஆசிரியருமான கமிலா டோமினி அரச குடும்பம் மற்றும் அரசியல் பற்றி தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் “திஸ் மார்னிங்” எனும் நிகழ்ச்சியில் பிரதான தொலைக்காட்சி ஒன்றில் அரச செய்திகள் குறித்து சமீபத்தில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலீசிடம் சொல்ல கூடாது” கொலை செய்து விடுவோம்… பெண்ணின் பரபரப்பு புகார்…!!

பெண்ணிடம் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மண்டையூர் பகுதியில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் தனலட்சுமி தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் சிவா மற்றும் பாலா என்ற இருவர்  அவரை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் திட்டி தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து பாலா மற்றும் சிவா ஆகிய 2 பேரும் இது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணத்தினால்… வியாபாரிக்கு கொலை மிரட்டல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காய்கறி வியாபாரிக்கு கொலை மிரட்டல் விட்ட ஊராட்சி மன்ற தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.எஸ். அக்ரஹாரத்தில் காய்கறி வியாபாரியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முருகன் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த நேரத்தில் முனியப்பன், அவரின் தம்பி சின்னபையன் மற்றும் உறவினர் துரை ஆகிய 3 பேரும் அவரை கல்லால் […]

Categories
உலக செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் காணாமல் போன நபர்… பதற்றத்தில் அதிகாரிகள்..!!

பெல்ஜியத்தில் ஒரு ராணுவ வீரர் பயங்கரமான ஆயுதங்களுடன் காணாமல் போனதால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  பெல்ஜியத்தில் ராணுவ வீரர் ஒருவர், தொற்று நோயியல் நிபுணராகவுள்ள Marc Van Ranst  என்பவரை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார். மேலும் அவர் இயந்திர துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீதித்துறை அமைச்சர் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, அந்த நபர் ராணுவ முகாமிலிருந்து சக்தி வாய்ந்த ஆயுதங்களை திருடி வந்திருக்கலாம். அது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இளம் தமிழ் நடிகருக்கு கொலை மிரட்டல்…. பெரும் பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த வாரம்  இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்தாக பாஜக நிர்வாகி மனைவி புகார்….!!!

பாஜக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருக்கோவிலூர் தொகுதி பாஜக வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருக்கோவிலூர் தொகுதி பாஜக வேட்பாளர் கலிவரதன் கடந்த 8ஆம் தேதி திருவெண்ணைநல்லூர் ஒன்றிய செயலாளர் பிரபுவிடம் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தொலைபேசியில் கேட்டிருக்கிறார். அப்பொழுது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கலிவரதன் தனது ஆதரவாளர்களுடன் பிரபுவின் வீட்டிற்கு சென்று மிரட்டியதோடு பிரபுவின் மனைவி செல்லம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையோரம் சென்றவரிடம் வழிப்பறி… சிவகங்கையில் பரபரப்பு புகார்… 2 பேர் கைது..!!

சிவகங்கை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதி அருகே உள்ள டி.வேலாங்குளம் கிராமத்தில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் படமாத்தூர் செல்லும் சாலைக்கு திருப்பாச்சேத்தியிலிருந்து சென்றுள்ளார். அப்போது கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார், வல்லரசு ஆகியோர் நான்கு வழி சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து அங்கு வந்த குருநாதன் வழிமறித்து உள்ளனர். மேலும் அவருடைய சட்டை பாக்கெட்டில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணிடம் முன்விரோதம்…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. காவல்துறையின் நடவடிக்கை….!!

முன்விரோதம் காரணமாக இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் கோவிலடி பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். கீதாவிற்கும் அதே பகுதியில் வசித்து வரும் துரைராஜ் என்ற நபருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் துரைராஜ் கீதாவின் மீது வன்மத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று துரைராஜ் அந்த இளம்பெண்ணை மோசமாக தாக்கியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

போட்டோக்களை பகிரும் அழகான இளம்பெண்…! அடுத்தடுத்து வரும் கொலை மிரட்டல்… வெளிவந்த உண்மை காரணம் …!!

சமூக ஊடகங்களில் வெளியிடும் படங்களால் பிரான்ஸ் நாட்டின் ஒரு அழகிய இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றதாம். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோஹன்னா கிலேர்மோன்ட் (23) என்பவர் ஒரு வேட்டைக்காரர் என்பதால் அவர் விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வாராம். இதனால் அவருக்கு சமூக ஊடகங்களில் 3,00,000 பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.  அதே நேரத்தில் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதால் அவருக்கு கொலை மிரட்டல்களும் வருகின்றன. வேட்டையை எதிர்க்கும் பிரான்ஸ் நாட்டு அமைப்புகள் ஜோஹன்னாவை  […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்… நடவடிக்கை எடுக்க உத்தரவு…!

கனடாவைச் சேர்ந்த  காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடுவது போல கனடாவிலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரும் போராடி வருகின்றனர். இதனால் பல இடங்களில் கலவரங்களும் போராட்டங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இந்திய தூதரகம் மற்றும் நான்கூவரில் உள்ள துணை தூதரகத்தின் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஆகையால் இது தொடர்பாக கனடா […]

Categories
உலக செய்திகள்

என்னால நிம்மதியா இருக்க முடில…! கொலை மிரட்டல், கலவரம் என… அலப்பறை செய்யும் டிரம்ப் …!!

அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ட்ரம்பின் ஆதரவாளர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதாவது தற்போது அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக ஜோபைடன் பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து ஜோபைடன் வெற்றிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 6 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அச்சமயத்தில் நாடாளுமன்ற வளாகத்தினுள் அதிரடியாக நுழைந்த […]

Categories

Tech |