தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதனால் அணைகள், ஏறி, ஆறுகள் அனைத்தும் மழை நீரால் நிரம்பி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தளமான கொல்லிமலையில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி, புளியஞ்சோலையில் நீர்வரத்து அதிகரித்து காட்றாற்று வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது. அதனால் கடந்த பத்தாம் […]
Tag: கொல்லிமலை
குளித்தலையில் பாலியல் தொல்லை வழக்கில் கைதான தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட இருவர் மீது பாய்ந்துள்ளது குண்டாஸ். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் நர்சிங் கல்லூரி முதல்வரும், அதிமுக பிரமுகருமான செந்தில்குமார் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.. கல்லூரி முதல்வருக்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அமுதவல்லி மீதும் குண்டாஸ் பாய்ந்தது..
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி, சேலம் மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை மற்றும் திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொல்லிமலையில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரம். கொடை தன்மையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரிவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த விழா ஆகஸ்டு மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த […]
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக கொல்லிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள மதுபான கடைகளில் மதுபானம் வாங்குவோர் காலி பாட்டில்களை கண்ட இடத்தில் வீசி செல்வதால் வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காக மது பாட்டில் ஒன்றுக்கு ரூபாய் 10 கூடுதலாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுபானத்தை குடித்தபின் காலி பாட்டில்களை மீண்டும் கடையில் ஒப்படைத்துவிட்டு 10 ரூபாயை திருப்பி வாங்கிக் கொள்ளலாம் […]
சரக்கு லாரி கட்டுபாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் டிரைவர் உள்பட 2 பேர் காயங்களின்றி உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை அடுத்துள்ள சர்க்கரைபட்டியில் நெல்சன் பிரபு என்பவர் வசித்து வருகிறார். சரக்கு லாரி டிரைவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரும் சம்பவத்தன்று காலியான கியாஸ் சிலிண்டர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கொல்லிமலை அடிவாரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 1-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற பொது லாரி திடீரென கட்டுபாட்டை இழந்து தரைப்பாலம் அருகே […]
தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகின்றது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள அருவி, பழமை வாய்ந்த அரப்பளீஸ்வரர் […]
கொல்லிமலையில் இருந்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் திரும்பி கொண்டிருக்கும்போது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகின்றது. இந்நிலையில் சென்னை கொளத்தூர் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் நலசங்கத்தை சேர்ந்த 60 பேர் 4 வேன்களில் கொல்லிமலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மலையை சுற்றிபார்த்துவிட்டு மீண்டும் வேனில் மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது 52-வது கொண்டை ஊசி வளைவில் […]
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கொல்லிமலையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேற்று கொல்லிமலை சோளக்காடு பயணியர் மாளிகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்த திட்ட பணிகள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பழங்குடியினர் நலத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, மகளிர் திட்டத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி […]
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. ஒவ்வொரு மாதமும் ஆடி முதல் தேதி மற்றும் ஆடி 18 ஆகிய நாட்களில் இந்த ஆற்றில் நீராடி அருள்மிகு அறப்பளீஸ்வரர் வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வால் இ-பாஸ் இல்லாமல் சுற்றுலா பயணிகள் கொல்லிமலை சென்று வரலாம் என்று அரசு அனுமதி […]
ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே களியனுரில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலாத்தலமாக விளங்கும் கொல்லிமலையில், மிளகு, காபி, ஏலக்காய், பலா, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. […]