Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட திரவுபதி முர்மு”….. கோத்தகிரி பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாட்டம்…..!!!!!

திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவியேற்று கொண்டதை கோத்தகிரி பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடினார்கள். இந்தியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றியடைந்தார். இவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். மேலும் இரண்டாவது பெண் ஜனாதிபதி ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்தியாவின் 15 வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு. இவர் நாட்டில் பழங்குடியினத்தில் இருந்து வந்த முதல் ஜனாதிபதி ஆவார். இந்நிலையில் இவர் பதவியேற்று கொண்டதை கொண்டாடும் விதமாக கோத்தகிரி அருகே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரி அருகே விநாயகர் சிலை கண் திறந்ததாக தகவல்”…. கோவிலில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு….!!!!!

கோத்தகிரி அருகே உள்ள விநாயகர் சிலையின் கண் திறந்ததாக தகவல் பரவியதால் கோவிலுக்கு பக்தர்கள் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் பெட்டட்டி சுங்கம் கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ள நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின் சுவாமிக்கு தீபாராதனை நடந்த பொழுது விநாயகர் சிலையின் கண் திறந்து மூடியதாக சொல்லப்படுகின்றது. சில […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“குஞ்சப்பனை தோட்டங்களில் முகாமிட்ட காட்டு யானைகள்”…. வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை…!!!!

காட்டுயானைகள் பழங்குடியினர் கிராமத்தில் முகாமிட்டு இருப்பதால் அவற்றை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே இருக்கும் குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தில் விவசாயிகள் பலா மரங்களை பயிரிட்டுள்ளனர். மேலும் ஊடுபயிராக காபி செடிகளையும் பயிரிட்டுள்ளனர். தற்பொழுது பலா மரங்களில் காய்கள் காய்த்து குலுங்கியும் காபி செடிகளில் பழங்கள் பழுத்தும் இருக்கின்றது. இதனால் காட்டு யானை கூட்டம் பழங்களை சாப்பிடுவதற்காக குஞ்சப்பனை, மாமரம், கோழிகரை உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோத்தகிரியில்…. “அழகாக பூத்து குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்”…. ரசித்து மகிழும் சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரிமாவட்டம்,  கோத்தகிரியில் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ஜகரண்டா மலர்களைப் பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையான அரிய வகை மரங்கள், செடிகள் மற்றும் மூலிகை தாவரங்கள் என்று நிறைய  காணப்படுகின்றது.  இங்கு ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் போது பல்வேறு நாடுகளிலிருந்து அரிய வகை மலர்கள், செடிகள் கொண்டு வந்து நடவு செய்துள்ளனர். இங்கு சாலையோரங்களில் வளர்க்கப்பட்டு வரும் அழகுமிக்க மரங்களில் ஜெகரண்டா மரமும் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது . இந்த ஜெகரண்டா […]

Categories

Tech |