கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ் சமீரன் என்பவர் இருக்கிறார். இவர் நிர்வாக ரீதியாக சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஏதேனும் முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பான புகார்கள் எழுந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். அதோடு தினசரி களப்பணிகளையும் மேற்கொள்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் துப்புரவு பணியாளர்களுக்கு சரியான உபகரணங்கள் வழங்கவில்லை என குற்றசாட்டு எழுந்தது. இதனால் உபகரணங்கள் வழங்காத ஒப்பந்ததாரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன் பிறகு துப்புரவு பணியாளர்களை தூய்மையற்ற முறையில் வேலை செய்ய […]
Tag: கோயம்புத்தூர் மாவட்டம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 5 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டம் பதற்றத்துடனே காணப்படுகிறது. அதாவது திமுக எம்.பி-ஐ பற்றி பேசிய உத்தம ராமசாமி கைது, பிஎஃப் அமைப்பை குறி வைத்து என்.ஐ.ஏ நடத்திய ரெய்டு, இந்து முன்னணி மற்றும் பாஜகவை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு போன்றவைகளால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினரின் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. […]
உலக அளவில் கொரோனா மற்றும் குரங்கம்மை வைரஸ் போன்றவைகள் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அதிக அளவில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று புதுவை மற்றும் காரைக்காலிலும் கடந்த 10 நாட்களில் சளி, […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வாகராயம்பாளையம் பகுதியில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் ஒரு இளைஞர் அடிக்கடி மளிகை சாமான்கள் வாங்கி வந்துள்ளார். அந்த இளைஞர் தன்னுடைய நண்பர் ஒருவருடன் சென்று நாங்கள் 2 பேரும் ஒரு வாடகை வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறோம் என்றும், விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வதாகவும் கூறியுள்ளனர். நாங்கள் கூலி வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் ஒரு வீட்டில் குழி தோண்டி […]
பத்திரிகையாளர்கள் என்று கூறிவிட்டு மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் செய்தியாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அதிகாரிகளை தெரியும் என்று கூறி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்வதாக மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது சில மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் […]
உலக சாதனை படைத்த சிறுவனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி உமாதேவி என்ற மனைவியும் பவன் (10) என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பவன் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவனுக்கு சிறு வயது முதலே குங்ஃபூ, கிக் பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்றவற்றை கற்றுக் கொண்டு வருகிறார். இவர் குங்ஃபூ […]
பொது இடங்களில் பிராங்க் செய்யக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களாகிய பள்ளி வளாகங்கள், நடைபயிற்சி மைதானங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் பொதுமக்களை பிராங்க் செய்து வீடியோ எடுப்பதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இதனால் கோவை மாநகர காவல்துறையினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் சிலர் குறும்புத்தனமான வீடியோக்களை எடுக்கின்றனர். இந்த வீடியோக்களை யூடியூப் சேனலிலும் வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். இந்த பிராங்க் […]
கால்நடைகளின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு, 40 கறவை மாடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் மாடுகள் தினந்தோறும் மேய்ச்சலுக்காக மலையடிவாரத்திற்கு செல்லும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள் வீடு திரும்பிய பிறகு மிகவும் சோர்வோடு காணப்பட்டதுடன் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது. அதோடு 40 மாடுகளின் […]
பரம்பிக்குளம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை கேரள வனப்பகுதியில் அமைந்திருந்தாலும் தமிழக பொதுப்பணி துறையால் தண்ணீர் திறத்தல், அணையை பராமரித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பரம்பிக்குளம் அணை மொத்த கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் காண்டூர் கால்வாயில் உள்ள நல்லாறு பகுதியில் ரூ. 72 கோடி நிதி ஒதுக்கீட்டில் […]
பள்ளி மாணவர்கள் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காலடிப்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மற்றும் ஜீவா தம்பதியினரின் மகன் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் கஞ்சா போதையில் பள்ளியில் உள்ள நூலகத்தின் முன்பாக படுத்து கிடந்துள்ளார். இந்த சிறுவன் படுத்து கிடந்ததை பார்த்த சக மாணவர்கள் அவரை எழுப்பி வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் போதையில் […]
சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி அமைந்துள்ளது. இங்கு சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது ஒரு சரக்கு […]
மதிய உணவு வழங்காததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் இருந்து மாலத்தீவுக்கு நேற்று காலை 11:45 மணி அளவில் ஒரு வானுர்தி புறப்பட்டது. இந்த வானுர்தி வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி கோவை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பிறகு வானுர்தி அவசர அவசரமாக கோயமுத்தூர் ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டது. இந்த வானுர்தியில் சுமார் 92 பயணிகள் இருந்த நிலையில், விமானத்திலிருந்து […]
தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மொக்கை மேடு, ஆளூர் வயல் மற்றும் காந்த வயல் போன்ற பகுதிகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நூலையில் பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் லிங்காபுரம் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் தவித்து வருவதோடு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் […]
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அருகே மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வரும் பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் போன்ற வனவிலங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள சிங்கம்பதி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் வீட்டின் அருகே இருந்த கழிவறைக்கு சென்றார். இவரை மறைந்திருந்த யானை ஒன்று திடீரென […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி பகுதியில் காவல்நிலையம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முருகசாமி மற்றும் காசிராஜன் ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே காவல்துறையினர் முருகசாமி மற்றும் காசிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் தொடர்ந்து குற்ற […]
போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடக்கிபாளையம் பகுதி வழியாக அதிக பாரம் ஏற்றிக் கொண்டு வாகனங்கள் வருவதாகவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி சில ஆம்னி பேருந்துகள் இயங்குவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வடக்கு பாளையம் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது அதிக பாரங்கள் ஏற்றிக் கொண்டு வந்த சில சரக்கு லாரிகளை […]
சுற்றுலா பயணிகளின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் தென்மேற்கு பருவமழையானது தொடங்கியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த அணையின் நீர்மட்டம் 163 அடியை தாண்டியதால் உபரி நீர் கேரளாவிற்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் மீண்டும் அலைமோதுகிறது. இவர்கள் ஆழியாறு மற்றும் […]
அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களான ராமநாதபுரம், வரப்பாளையம், பணப்பள்ளி, கொண்டனூர் மற்றும் ஆனைக்கட்டி பகுதிகளில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார், காவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு சப்-இன்ஸ்பெக்டர் சிறுவர்-சிறுமிகளிடம் யாரும் தவறான முறையில் அணுகினாலும், சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டாலும் அவர்கள் குறித்து பெற்றோர்களிடம் […]
நகைகளை திருடி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் அருகே முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் 2 பேரும் கடந்த 23-ஆம் தேதி திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். இவர்கள் கடந்த 26-ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துக்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து தங்க நகைகள் […]
புத்தகத் திருவிழாவில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொடிசியா வளாகம் அமைந்துள்ளது. இங்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பகம் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் 400 பள்ளிகளை சேர்ந்த 5,000-த்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களுக்கிடையே புத்தகம் வாசித்தலை ஊக்குவிக்கும் விதமாக திருக்குறள் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 5000 மாணவர்கள் ஒரே நேரத்தில் 20 திருக்குறளை வாசித்தனர். […]
பெண்ணிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாக்கியலட்சுமியும், ராணியும் தோழிகளாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ராணி தன்னுடைய வீட்டில் ரூபாய் 15 லட்சம் பணத்தை வைத்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பாக்கியலட்சுமி வீட்டில் எதற்காக இவ்வளவு பணத்தை வைத்துள்ளீர்கள் என ராணியிடம் கேட்டுள்ளார். அதற்கு ராணி என்னுடைய மருத்துவ செலவு மற்றும் மகளின் திருமணத்திற்காக […]
சிறுவர்-சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் தொடர்பான பிரச்சனைகளை உடனடியாக காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரி அரங்கில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் 350 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடம் போலீஸ் […]
திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு ஒரு லாரி விறகு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அன்பு என்பவர் ஓட்டி சென்றார். இந்த லாரி வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் மீது லேசாக உரசி ஒரு மின் கம்பத்தின் மீது மோதியது. இந்த […]
கை மற்றும் கால்களை இழந்த ஒருவருக்கு அரசு மருத்துவர்கள் மறுவாழ்வு கொடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பாளையம் பகுதியில் கொத்தனாராக வேலை பார்க்கும் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சுபாஷுக்கு நடந்த ஒரு மின்சார விபத்தில் அவருடைய கைகள் மற்றும் கால்கள் தீயில் கருகியது. இதனால் சுபாஷ் தன்னுடைய கை மற்றும் கால்களை இழந்து தவித்து வந்தார். இது தொடர்பாக சுபாஷ் மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து தனக்கு உதவி செய்யுமாறு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ரெயின்போ காலனி பகுதியில் இருந்து முதல் பங்குச் சந்தை கட்டிடம் வரை அமைந்துள்ளது. இதற்காக 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்ததால் கடந்த மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். […]
படகு சவாரிக்காக நவீன படகு கொண்டுவரப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாலாங்குளம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக மோட்டார் படகுகள், பெடல் படகுகள், வாட்டர் சைக்கிள் படகுகள் போன்றவைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோன்று உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பெரிய குளத்திலும் தொடங்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக 2 பெடல் படகுகள், 2 துடுப்பு படகுகள், 2 ஸ்கூட்டர் படகுகள் போன்றவைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக 12 பேர் பயணம் செய்யக்கூடிய […]
பயங்கர விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் சென்ராயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மதிய நேரத்தில் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இவருடன் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த […]
தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சில கால்வாய்கள் மற்றும் அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆற்றின் மீது பாலம் கட்டும் பணிகள் […]
தொடர் கனமழையின் காரணமாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சேலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது நாளாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையில் இருந்து மின் உற்பத்திக்காக கடந்த வருடத்தை விட கூடுதலாக தண்ணீர் […]
ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி இடையே உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதை ஆக மாற்றப்பட்டது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் போத்தனூர் இடையே கடந்த 2017-ம் ஆண்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதே வழித்தடத்தில் மற்றொரு ரயிலும் இயக்கப்பட்டது. இதனால் 2 நேரங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக ரயில்கள் இயங்கியது. அதன் பிறகு பழனிக்கு செல்லும் ரயிலும் […]
பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் பகுதியில் ஒரு ஆட்டோ வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை மோகன்ராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென அவ்வழியாக சென்ற மாணவி உட்பட 3 பேரின் மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் இருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் டிரைவரும் தன்னுடைய ஆட்டோவுடன் சாக்கடைக்குள் விழுந்தார். இதைப் […]
வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல பேரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர், மதுரை மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல பேர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்திருந்தனர். அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி மருதமலை ரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இது வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனமாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனம் சிங்கப்பூருக்கு வேலைக்கு ஆட்களை எடுப்பதாக […]
பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் இருக்கிறது. இங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், பழனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்வதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பேருந்துகள் வெளியே வரும் இடத்தில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீர் செல்வதற்கு […]
மேம்பாலத்தின் மீது பைக் மோதி சேல்ஸ்மேன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ரெயின்போ காலனி பகுதியில் இருந்து முதல் பங்குச் சந்தை கட்டிடம் வரை அமைந்துள்ளது. இதற்காக 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்ததால் கடந்த மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த மேம்பாலம் […]
பிரசித்தி பெற்ற கோவிலின் கண் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டிதேவி பகுதியில் உள்ள பவானி ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 19-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ம் தேதி பூக்குழி இறங்குதல் திருவிழா நடைபெற இருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. […]
தென்மேற்கு பருவ மழையின் காரணமாக முக்கிய அணையின் கொள்ளளவு உயர்ந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை கேரள வனப்பகுதியில் இருந்தாலும் ,அணையை பராமரிக்கும் பணிகள், நீரின் அளவை கணக்கிடுதல், மற்றும் தண்ணீர் திறத்தல் போன்றவற்றை தமிழக பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. இங்கிருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணை மொத்தம் 72 அடி கொள்ளளவை கொண்டது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை […]
வீடுகளை சீரமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஏ. நாகூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த கிராமத்தில் ஏராளமானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி வீட்டின் மேற்கூறையில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் மக்கள் வீட்டிற்குள் தங்குவதற்கு அச்சப்படுகின்றனர். இதனால் இரவு […]
மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு கடல் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லாரி பேட்டை மற்றும் செல்வபுரம் பைபாஸ் சாலை பகுதியில் மீன் சந்தை அமைந்துள்ளது. இங்கு கேரள மாநிலத்தில் உள்ள திரூர், மங்களாவரம், தூத்துக்குடி ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக வரும். இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் மீன் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மீன் சந்தைகளில் கடல் மீன் விலையானது […]
மண் சரிவின் காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்பிறகு சேலையாறு அணைக்கு வினாடிக்கு 2676 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கன மழை பெய்துள்ளது. […]
தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவை தற்போது சென்னையில் மட்டுமே இருக்கிறது. இந்த திட்டத்தை மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் செயல்படுத்துவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து சமூக செயற்பாட்டாளர் தயானந்த கிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார். இது பற்றிய தகவல்கள் தற்போது ஆர் டி ஐ மூலமாக […]
குறைவான விலையில் சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கடந்த 25-ம் தேதி மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் வருகை புரிந்தார். இவர் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி துறையில் இருக்கும் சிட்ராவை பார்வையிட்டார். அவர் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் மெஷின்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இவர் திருப்பூரில் நடந்த ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் பியுஷ் கோயல் செய்தியாளர்களை […]
தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவது வழக்கம். ஏனென்றால் மின் கம்பங்களில் ஏற்படும் மின்கசிவின் காரணமாக,சில நேரங்களில், விபத்துகள் ஏற்படுகிறது.எனவே இதை தவிர்ப்பதற்காக இந்த பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகமானது தடை செய்யப்படுகிறது. மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே, இந்த அறிவிப்புகளும் கொடுக்கப்படும். அதன்படி […]
காட்டுயானைகள் கோவிலுக்குள் புகுந்து இரும்பு கேட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, மான், காட்டு யானைகள் என பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் இருந்து சில காட்டுயானைகள் தண்ணீர் தேடி மருதமலை அடிவாரத்தில் அடிக்கடி வருவதாக அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனார். இந்நிலையில் சம்பவத்தன்று தடாகம் பகுதியில் இருந்து காட்டுயானைகள் மருதமலை மலைப்பகுதி வழியாக தான்தோன்றி விநாயகர் கோவில் அருகே […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண் அழுத்த நோய் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வாரு ஆண்டும் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து நேற்று தனியார் மருத்துவமனை சார்பில் கோயம்புத்தூரில் ரேஸ்கோர்சில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் நர்சு மற்றும் மருத்துவ பணியாளர்கள் விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு நடந்து சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி பற்றி டாக்டர்கள் கூறுகையில், அதாவது இந்தியாவில் கண் அழுத்த நோய் பாதிப்பு […]
அரசு பள்ளியில் இடியும் நிலையில் இருக்கும் பழைய சமையல் கூடத்தை இடித்துவிட்டு புதிய சமையல் கூடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் செட்டியக்காபாளையம் ஊராட்சி எம்மேகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ளது டி.இ.எல்.சி அரசு தொடக்கப்பள்ளி. இங்கு 2 ஆசிரியர்கள் சமையல் அமைப்பாளர் மற்றும் சமையலர் என 4 பேர் பணிபுரிகின்றனர். 15-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிலும் இந்த பள்ளியில் 2002-2003 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 50,000 […]
குண்டு வெடிப்பு தினமான நேற்று காந்திப்புரத்திலுள்ள மேம்பாலத்திற்கு கீழே இருந்த மர்ம சூட்கேசால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டதில் கடந்த 1998 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று ஆர்.எஸ் புரம் உட்பட பல பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததோடு ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். எனவே ஆண்டுதோறும் குண்டுவெடிப்பு தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அவ்வகையில் கோவை கமிஷனர் பிரதீப் குமார், […]
குடிபோதையில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அருகிலுள்ள கோண வாய்க்கால் பகுதியை சேர்ந்த கந்தசாமி. கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா அந்த வழியாகசென்ற பொதுமக்களிடம் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதைக்கண்ட கந்தசாமி, டேவிட் ராஜாவிடம் எதற்கு சாலையில் செல்பவரிடம் தகராறு செய்து கொண்டிருக்கிறாய் என்று தட்டிக் கேட்டுள்ளார். இதில் […]
4 பவுன் நகை மோசடி செய்ததாக ஐ.டி நிறுவன ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் சவுரிபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்த தனது தாய் தந்தையருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெங்களூரைச் சேர்ந்த ஆண்டனி என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது இருவரும் பேசி வந்த நிலையில் விடுதி ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது ஆண்டனி தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை மருத்துவச் செலவிற்கும் […]
உயிரியல் பூங்காவில் இறந்த மான் குட்டியின் உடலை அகற்றாமல் காகங்கள் கொத்தித் தின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மையப்பகுதியில் வ.உ.சி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இது பொதுமக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக திகழ்கிறது. ஆனால் பூங்கா பராமரிப்பு,போதிய இடவசதி இல்லை, உட்கட்டமைப்பு பணிகளில் தாமதம் உள்ளதாக கூறி மத்திய வன உயிரின பூங்கா ஆணையம் கடந்த மாதம் 5-ஆம் தேதி வ.உ.சி உயிரியல் பூங்காவின் அனுமதி ரத்து செய்யப்பட்டது. கோவை வனத்துறை கட்டுப்பாட்டில் பூங்கா […]
வேலை இல்லாததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் அருகே உள்ள அஷ்டலட்சுமி நகரில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிற்சாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா நோய்தொற்று காரணமாக சில மாதங்களாக வேலையின்றி இருந்து வருகிறார். இதனையடுத்து வீட்டில் வருமானமின்றி இருப்பதால் மனைவி மற்றும் குழந்தைகளை மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் வைத்து தூக்குபோட்டு […]