Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தாயின் 2-வது கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் 40 வயதுடைய பெண் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் பேராசிரியையின் கணவர் இறந்துவிட்டார். கடந்த 2014- ஆம் ஆண்டு மருந்து விற்பனை பிரதிநிதியை பேராசிரியர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர் தனது 2 மனைவிகளுடனும் வாழ்ந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியையின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை துரத்தி தந்ததால் குத்திய “காட்டு யானை”…. அலறிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் கேரளா அரசு பேருந்து மளுக்கப்பாறை பகுதியில் இருந்து சாலக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை பேருந்தை வழிமறித்து துரத்தியதால் ஓட்டுநர் வாகனத்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். ஆனாலும் துரத்தி வந்த காட்டு யானை கோபத்தில் பேருந்தின் முன் பகுதியில் தந்ததால் குத்தியது. இதனால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டதும் யானை அங்கிருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…. பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் மீட்பு…. 2 மணி நேரம் போராட்டம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு பகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய்(20), ரவிக்குமார்(19), சிரஞ்சீவி(18) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களும் அதே பகுதியில் வசிக்கும் 11- ஆம் வகுப்பு மாணவர் மணிகண்டன், தனியார் நிறுவன ஊழியர்கள் சதீஷ்குமார், கணேஷ்குமார், சரவணன் ஆகிய 7 பேரும் குண்டுக்கல் துறை பகுதியில் பவானி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 7 பேரும் ஆற்றின் குறுக்கே சாய்ந்த மரத்தின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.பி.ஜி நகரில் வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு கேட்டு மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அரசு நிர்ணயித்த கட்டண தொகையை செலுத்தியுள்ளார். இதனையடுத்து மின் பொறியாளர் சுப்பிரமணியன் என்பவர் தற்காலிக மின் இணைப்பு கொடுக்க கார்த்திகேயனிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமி…. டாக்டர்கள் அளித்த தகவல்…. போக்சோவில் வாலிபர் கைது…!!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூரில் கூலித்தொழிலாளியான தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எதிர்ப்பை மீறி தாமோதரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமியை திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமியிடம் டாக்டர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி…. தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டிஹால் ரோடு சாமி ஐயர் புது வீதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். வழக்கமாக சங்கர் தான் தயாரிக்கும் நகைகளை வெளியூர்களுக்கு கொண்டு சென்ற விற்பனை செய்வது வழக்கம். இவரிடம் கடந்த 3 ஆண்டாக மேற்கு வங்கத்தை சேர்ந்த அனிமேஷ் ஹசரே, அவரது மனைவி சோம ஹசரே, உறவினர் சுரஜித் ஹசரே, ஸ்டேயாஜித் ஆகிய 4 பேர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் சங்கர் வீட்டின் மேல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவனத்தில் “ரூ.1 1/4 லட்சம் மோசடி”…. ஊழியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் பாரத் டோலியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நவீன்குமார்(45) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நவீன் குமார் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் 3 3/4 லட்ச ரூபாயை நவீன்குமார் திரும்ப கொடுத்துவிட்டார். மீதமுள்ள 1 1/4 லட்ச ரூபாயை கொடுக்காமல் நவீன்குமார் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாரத் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடுமையான பனிப்பொழிவு….. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்….!!!

பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இரவு நேரங்களில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. நேற்று அதிகாலை கோவில்பாளையம், தாமரைக்குளம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. இந்நிலையில் கோவை- பொள்ளாச்சி சாலையில் காலை 8:30 மணி வரை பனிமூட்டம் நிலவியது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“10 நாட்கள் கால அவகாசம்”…. பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வு…. அதிகாரியின் எச்சரிக்கை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பள்ளி வாகனங்கள் கொண்டுவரப்பட்டது. அங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் வாகனங்களில் சென்சார் வசதி, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறோம். விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கேமராக்கள் சென்சார் வசதியுடன் பொருத்த உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற இளம்பெண்…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!!

இளம் பெண்ணிடம் செல்போன் பறித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் உள்ள சொக்கனூர் சென்ட்ரல் பேங்க் வீதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நர்மதா(20) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நர்மதா கோவைக்கு சென்று விட்டு கண்ணமநாயக்கனூரில் டவுன் பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து நர்மதா வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அவர் அப்பகுதியில் இருக்கும் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்…. காயமடைந்த 4 பேர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் இருந்து அரசு பேருந்து சேக்கல் முடி எஸ்டேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் வில்லோணி எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி மற்றொரு அரசு பேருந்து வந்தது. இந்த பேருந்துகள் வில்லோணி எஸ்டேட் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 கோடி ரூபாய் மோசடி…. சொகுசாக வாழ்ந்த நபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

2 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கார் ஓட்டுநரான கதிரவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காநல்லூரில் வசிக்கும் பிரான்சிஸ் சேவியர் செல்வராஜ் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் செல்வராஜ் தான் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். இதனால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கார் ஓட்ட அனுமதி அளிக்குமாறு கதிரவன் கேட்டதற்கு 2 1/3 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானையால் 8 கி.மீ பின்னோக்கி நகர்த்தப்பட்ட பேருந்து…. வால்பாறை-சாலக்குடி சாலையில் போக்குவரத்திற்கு தடை…. கேரள வனத்துறையினர் அதிரடி…!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் சாலக்குடிக்கு வால்பாறையில் இருந்து வனப்பகுதி வழியாக சாலை செல்கிறது. கடந்த சில நாட்களாக இந்த சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானை வாகனங்களை துரத்துவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சாலக்குடியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த கேரளா அரசு பேருந்தை யானை துரத்தியதால் ஓட்டுநர் சுமார் 8 கி.மீ தூரம் பின்னோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சாலையில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல்…. 5 மணி நேரம் திணறடித்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமசாமி முதலியார் வீதியில் சசிகுமார் என்பவரது வீட்டில் முதல் தளத்தில் செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஏறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். அப்போது தனது மனைவி கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். அவரை மீட்டு தரவில்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகள்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

பெண் தனது 2 மகள்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண் நேற்று தனது இரண்டு மகளுடன் சென்று திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து போலீசாரிடம் அந்த பெண் கூறியதாவது, எனது பெயர் சுபலட்சுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும், தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. எங்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு விபத்தில் எனது கணவர் இறந்து விட்டதால் நாமக்கல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற பிளஸ்-2 மாணவி…. என்ன காரணம்…? விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனையடுத்து சிறுமிக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்த உறவினர் சிறுமி மயங்கி கிடந்ததை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை புலி….. அச்சத்தில் கூச்சலிட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்…!!!

வீட்டிற்குள் சிறுத்தை புலி புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே நடுமலை ஸ்டேட் வடக்கு பிரிவில் தேயிலை தோட்ட தொழிலாளியான பாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை பாக்கியம் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது பக்கத்து அறையில் பூனை ஒன்று அமர்ந்திருந்தது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிகள் நுழைந்த சிறுத்தை புலி பூனையை பார்த்து அதன் மீது பாய்ந்து பிடிக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புரோக்கர் கூறியதை நம்பி…. 32 லட்ச ரூபாயை இழந்த பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

32 லட்ச ரூபாய் மோசடி செய்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் செங்குத்தா நகரில் வசிக்கும் மனிஷா என்பவர் அப்பகுதியில் மழலைகள் பள்ளியில் நடத்தி வருகிறார். இவர் சொந்தமாக வீடு கட்ட முடிவு எடுத்து மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த நில புரோக்கர் மாரியப்பன் என்பவரை அணுகினார். அப்போது காளபட்டியில் விற்பனைக்கு இருக்கும் ஒரு பிளாட்டை வாங்கி வீடு கட்டி தருவதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார். இதனை நம்பி மனிஷா பல்வேறு தவணைகளாக மாரியப்பனின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற பாகன்…. மதம் பிடித்து தாக்கிய யானை…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி முகாம் அமைந்துள்ளது. இங்கு பாகன்களை வைத்து வனத்துறையினர் 22 யானைகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் பாகன் பிரசாந்த் என்பவர் 35 வயது மதிக்கத்தக்க சுயம்பு என்ற யானையை பராமரித்து வந்துள்ளார். நேற்று காலை பிரசாந்த் யானையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாலையில் முகாமிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது திடீரென மதம் பிடித்து யானை பிரசாந்தை தாக்கி பள்ளத்தில் தூக்கி வீசியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பலத்த மழையால் இடிந்து விழுந்த வீடு…. உயிர் தப்பிய பாட்டி, பேத்தி…. அதிகாரிகளின் ஆய்வு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரில் மாற்றுத்திறனாளியான நாகம்மாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நாகம்மாளின் கணவர் இறந்து விட்டதால் நாகம்மாள் தனது பேத்தியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நாகம்மாளின் வீட்டு சமையலறை சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. இதனால் பாட்டியும், பேத்தியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த வெள்ளை நிற பாம்பு…. வைரலாகும் புகைப்படம்…. வனத்துறையினரின் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ராஜேந்திரன் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இவரது வீட்டிற்குள் வெள்ளை நிறப் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து ஜெய்ப்பால் அதிர்ச்சியடைந்தார். அதன் அருகே சென்ற போது பாம்பு படம் எடுத்து சீறியதால் ராஜேந்திரன் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவிக்குமார் என்பவர் விரைந்து வந்து துணிச்சலாக பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்தார். இந்த பாம்பை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்தனர். அது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடுவதற்காக சென்ற குடும்பத்தினர்….. தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!!

கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் மருதை(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சாந்தி(45) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா(21) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மருதை தனது மனைவி மற்றும் மகளுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் வேடசந்தூர்- […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. கர்ப்பிணியை கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கர்ப்பிணியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டேகவுண்டன் பாளையத்தில் பீகாரை சேர்ந்த பித்கார் மாந்தி-மம்தா தேவி தம்பதியினர் தங்கியிருந்து தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்களும், மருமகளும் இருக்கின்றனர். தற்போது மம்தா தேவி கர்ப்பமாக இருக்கிறார். நேற்று மம்தா தனது கணவரிடம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வருமாறு கூறினார். ஆனால் மாந்தி மளிகை பொருட்கள் வாங்கி வராமல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாயிடம் கதறி அழுத சிறுமி…. 55 வயது கூலி தொழிலாளியின் செயல்…. போலீஸ் விசாரணை…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் குழாயில் குடிநீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 55 வயதுடைய கூலி தொழிலாளி தகாத முறையில் பேசி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானை எப்படி இறந்தது…? பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் தகவல்…!!

இறந்து கிடந்த யானையின் உடலை வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பூணாச்சி என்ற இடத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பர் ஆழியாறு பள்ளம் அருகே யானை இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி வனபாதுகாவலர் செல்வம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயராகவன், வால்பாறை அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேர்வு எழுத வந்த மாணவி….. வாலிபர் செய்த காரியம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

தேர்வு எழுத வந்த மாணவியிடம் தங்க சங்கிலி, செல்போன் திருடிய மாணவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நிவேதா என்பவர் கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார். இந்நிலையில் நிவேதா தேர்வு எழுதுவதற்காக தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதேபோல் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளனர். அவர்கள் தங்களது உடைமைகளை அறைக்கு வெளியே வைத்து விட்டு தேர்வு எழுத சென்றுள்ளனர். இந்நிலையில் நிவேதா தனது 1 பவுன் தங்க சங்கிலி, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய பெண் போலி டாக்டர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சத்யா கருமத்தம்பட்டி நால்ரோடு அருகே மருந்து கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சத்யா மாத்திரைகள் கொடுப்பதோடு, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சமூக நலத்துறையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடைக்கு சென்று சத்யாவிடம் தனக்கு உடல் வலிப்பதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம் “15 லட்ச ரூபாய் பண மோசடி”….. போலீஸ் விசாரணை…!!!

15 லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு நேரு நகரில் நிலம் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டார். இந்நிலையில் பீளமேட்டில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாத்(37) என்பவரை கார்த்திகேயன் அணுகியுள்ளார். அப்போது நேரு நகரில் நிலம் விற்பனைக்கு இருப்பதாக ஜெகநாத் கூறியுள்ளார். அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி-மகளுடன் விஷம் குடித்த நபர்…. இதுதான் காரணமா….? அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பிள்ளையார் கோவில் வீதியில் காந்தரூபன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தீஷ்னாதேவி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த பல மாதங்களாக கோவை ராமநாதபுரம் பகுதியில் வசித்து வந்த காந்தரூபன் தனது குடும்பத்துடன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சூலூருக்கு குடியேறியுள்ளார். ராமநாதபுரத்தில் வசித்த போது காந்தரூபன் ஏல சீட்டு நடத்தி வந்ததோடு, சீட்டு பணத்தை வட்டிக்கு பெற்றுள்ளார். அவர் வட்டிக்கு கொடுத்த பணம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய லாரி…. உயிருக்கு போராடிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!!

டிராக்டரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கண்டெய்னர் லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரியும் அவ்வழியாக வந்த டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. மேலும் கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த டிராக்டர் ஓட்டுனரான ரங்கராஜன் என்பவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்து விழுந்த மரம்….. சேதமடைந்த வீடு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்….!!!

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் வீடு சேதமானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் பலத்த சூறாவளி காற்று வீசியதால் திரௌபதி அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் நடராஜன் என்பவரது வீட்டிற்கு அருகில் நின்ற மரம் வேருடன் சாய்ந்தது. இந்த மரம் விழுந்ததால் நடராஜன் வீடு சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்த வனத்துறையினர்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் கோவை குற்றால அருவி அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் சோதனை சாவடியில் இருந்து வனத்துறையினர் வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அருவிக்கு அழைத்து செல்கின்றனர். கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் கோவை குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு தடை விதித்தனர். மேலும் வனத்துறையினர் சோதனை சாவடி அருகே தீவிர கண்காணிப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையை சேதப்படுத்தி….. அட்டகாசம் செய்த யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

ரேஷன் கடையை காட்டு யானைகள் உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் ஊசிமலை டாப் எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்த 3 காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. இதனையடுத்து அங்கிருந்த அரிசியை தின்றும், சிதறியடித்தும் நாசம் செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி…. ரூ. 8 1/2 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்…. தம்பதியின் பரபரப்பு புகார்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் சுரேஷ்- அனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் ஆன்லைனில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. அதனை நம்பி அனிதா அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி வேலை இருப்பதாக தெரிவித்தார். அந்த வேலையில் சேர்ந்தால் மாதம் 50 ஆயிரத்திற்கும் மேல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. போலீசாரின் அறிவுரை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிர செய்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். இதனையடுத்து கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளையே முடங்கினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, பொதுவாக கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் மட்டுமே பனிமூட்டம் நிலவும். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் அதிகமாக பனிமூட்டம் காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதுமையை மறந்து விளையாடிய “தாத்தா-பாட்டிகள்”….. தனியார் பள்ளியின் சிறப்பு விழா ஏற்பாடு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் பழனிசாமி தலைமை வகித்துள்ளார். இந்நிலையில் பள்ளி செயலாளர் ராஜேந்திரன், நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார், அறங்காவலர் தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகிக்க, மாணவர் மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவின் போது நடனம் மற்றும் விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றுள்ளது. பின்னர் வெற்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கன்று குட்டியை அடித்து கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டியூர் காப்புக்காடு வன எல்லையை ஒட்டி நடேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் நடேசன் ஒரு மரத்தில் கன்று குட்டியை கட்டி விட்டு தோட்ட வேலைகளை பார்ப்பதற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கன்று குட்டி இறந்து கிடந்தது. இதுகுறித்து நடேசன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கால் தடயத்தை ஆய்வு செய்தபோது கன்று […]

Categories
மாநில செய்திகள்

5 வருஷமா எந்த சாலையும் போடல….. கோவையில் இப்பதான் பணிகள் தீவிரமா நடக்குது….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சிவி கணேசன், கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு அமைச்சர் சிவி கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 1,07,000 தனியார் தொழில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி…. 6 1/2 லட்ச ரூபாயை இழந்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!!

தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து 6 1/2 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலிகோனாம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைனில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என குறிப்பிட்டு இருந்தது. இதனை பார்த்த பிரவீன்குமார் 1000 ரூபாய் முதலீடு செய்த சிறிது நேரத்தில் அவருக்கு 1200 ரூபாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குட்டிகளுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!!

கேரள மாநிலத்தில் இருந்து இடம்பெயரும் காட்டு யானைகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் அக்காமலை எஸ்டேட் 2-வது பிரிவு 10- ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் 6 குட்டிகளுடன் 19 காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; பெண் படுகாயம்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த எம்மேகவுண்டன்பாளையம் பகுதியில் இருக்கும் தனியார் நார் தொழிற்சாலையில் நீலகிரி சேர்ந்த ராகுல் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராகுல் மோட்டார் சைக்கிளில் சேரிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கருப்பராயன் கோவில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நடந்து சென்ற சகுந்தலா என்பவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகுல் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்….. தோட்ட உரிமையாளருக்கு அறிவுரை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுள்ளிமேட்டுபதி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றில் பசுமாடு தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி பசுமாட்டை பத்திரமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேருடன் பிடுங்கி மறுநடவு செய்யப்பட்ட மரங்கள்…. அதிகாரியின் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி அலுவலகம் அருகே 43 அடி உயர கோபுரம் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் மறு நடவு செய்துள்ளனர். இந்நிலையில் ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதி மீடியா ட்ரியை வாகனங்கள் சுற்றி செல்ல ரவுண்டானா அமைக்கப்பட உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 4 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனை பறித்த ஓட்டுநர்…. பின்தொடர்ந்து வந்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியில் 15 வயதுடைய சிறுமி 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஓட்டுனரான குணசேகரன் என்பவர் மாணவியை ஒருதலையாக காதலித்து அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது மாணவி வேறு ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மண்ணூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் மண்ணூர் பெருமாள் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது மூட்டைக்குள் ரேஷன் அரிசி இருந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி அதனை அதிக விலைக்கு கேரளாவில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாடகை காரை விற்பனை செய்து மோசடி…. பெண் உள்பட 4 பேர் கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆ.சங்கம்பாளையம் பகுதியில் முருகேசன்- கனகமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மதினாபேகம், பால்ராஜ் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் வங்கிக்கு பணம் வசூலிக்க செல்வதற்கு கார் தேவைப்படுகிறது. எனவே மாத வாடகைக்கு உங்களது காரை கொடுங்கள் என மதினா பேகமும், பால்ராஜும் கனகமணியிடம் கேட்டுள்ளனர். இதனை நம்பிய கனகமணி தனது காரை கொடுத்துள்ளார். கடந்த 3 மாதமாக காருக்கு வாடகை பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து கனகமணி காவல் நிலையத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“யானைக்கால் நோய் தடுப்பு முகாம்” நகராட்சி நிர்வாகத்தின் ஏற்பாடு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சியில் இருக்கும் சிறுவர் பூங்கா, வாழைத்தோட்டம் ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பொதுமக்களிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 600 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோவை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருக்கும் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் யானைக்கால் நோய் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, நோயை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட்டார […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் ஊழியரின் “மர்மமான மரணம்”…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!!

டாஸ்மாக் ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செங்குட்டைபாளையம் பகுதியில் டாஸ்மாக் ஊழியரான மோகன்ராஜ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் மோகன்ராஜ் வீட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாதத்திற்குள்…. கோவை மாநகரில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள்…. போலீஸ் கமிஷனரின் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், முக்கிய சாலை சந்திப்புகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் இருக்கும் கேமராக்கள் பழுதடைந்து காணப்படுவதால் முக்கிய ஆதாரங்களை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகரில் 5400 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கிய பாலம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. இன்று முதல் படகு சவாரி தொடக்கம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததோடு, அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. இந்நிலையில் லிங்காபுரம்-காந்தவயல் கிராமங்களுக்கு இடையே இருக்கும் 20 அடி உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் இணைப்பு சாலையும் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் பொதுமக்கள் சிரமப்பட்டு தண்ணீரில் வாகனத்தை இயக்கி செல்வதால் பழுதாகி இடையிலேயே நின்று விடுகிறது. […]

Categories

Tech |