காட்டெருமை தாக்கி வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவர்க்கல் மலைவாழ் கிராமத்தில் சிவபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் சிவபிரகாஷ் குடியிருப்பு பகுதிக்கு அருகே இருக்கும் ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து ஓடி வந்த காட்டெருமை சிவபிரகாஷை விடாமல் துரத்தி சென்று முட்டி தாக்கியது. அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காட்டெருமையை விரட்டி சிவபிரகாஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரது தலை, கால் […]
Tag: கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் சரோஜா மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் முகவரி கேட்பது போல் நடித்து சரோஜா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சரோஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பேரூர் பைபாஸ் சாலையில் பாஸ்கர சுவாமிகள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஜோதிடம் பார்த்து வருகிறார். இவரது வீட்டில் முருகர் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி 4 அடி உயரமுள்ள முருகர் சிலையை மீட்டனர். இதனையடுத்து […]
மகன் தகராறு செய்தால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மோதிரபுரம் இளங்கோ வீதியில் எலக்ட்ரீசியனான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 18 வயதுடைய சஞ்சய்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வருவதற்கு புதிதாக மோட்டார் சைக்கிள் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வழக்கறிஞர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வழக்கறிஞரான நான் பெரிய வணிக நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருகிறேன். தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தனியார் நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்குமாறு கேட்டுள்ளார். இதனால் எனது வீட்டில் இருக்கும் அலுவலகத்திற்கு அந்த பெண்ணை வருமாறு கூறினேன். சம்பவம் நடைபெற்ற அன்று அந்த பெண்ணின் மகன் எனக்கூறி ஒருவர் செல்போன் மூலம் அழைத்து […]
மின்கம்பம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 2 பேர் காரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள செம்மண் திட்டு என்ற பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக காரின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மின்கம்பம் உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக […]
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த வழக்கு தொடர்பாக இருபதுக்கு மேற்பட்ட நபர்களை ஏற்கனவே விசாரணை செய்திருக்கின்றோம். தொடர்ந்து விசாரணை மற்றும் வீடுகளில் சோதனை, சந்தேகப்படக் கூடிய நபர்கள்… வழக்கு விசாரணையின் போது வரக்கூடிய தகவல்களின் அடிப்படையில்… சந்தேகப்படக் கூடிய நபர்களை விசாரித்தும், அவர்களுடைய வீடுகளை சோதனை செய்தும், அவர்களுடைய நடவடிக்கைகளை கண்காணித்தும், காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புலன் விசாரணையின் போது சம்பவ இடத்தை ஆய்வு […]
தமிழகத்தில் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தற்போதிருந்தே பொதுமக்கள் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். அதன் பிறகு பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமாவார்கள். இதன் காரணமாக பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பண்டிகை காலங்களில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் கோவை போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் குறித்து அறிவிப்பு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விகேகே மேனன் சாலையில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்சி அலுவலகத்தின் மீது கடந்த மாதம் 22-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக காட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் மற்றும் அகமது சிகாபுதீன் ஆகியோர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதி அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் வளர்ச்சி பணிவுகளை கண்காணிக்க மாவட்ட கலெக்டரான சமீரன் சென்றுள்ளார். அப்போது அவர் மாலேகவுண்டம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கும் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். இந்த ஆய்வில் அவர் ரேஷன் கடையில் உள்ள விற்பனை நிலையம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை குறித்த பதிவுகளை கேட்டு அறிந்தார். மேலும் அரிசி பாமாயில் துவரம் பருப்பு சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்தும் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி பி.ஏ.பி திட்ட தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில் அணை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. அந்த சமயத்தில் சிறுவன் ஒருவன் மதகை இயக்கியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அந்த மதகு பழுதானதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் மதகை உடனடியாக மூட முடியவில்லை. பின்னர் அங்கு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் லோக் மானிய திலக் வரை இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 10:25 மணிக்கு ஈரோடு முதலாவது நடைமேடைக்கு இந்த ரயில் வந்து சேர்ந்தது. சிறிது நேரத்தில் ரயில் புறப்பட தயாராக இருந்த போது வாலிபர் ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பந்தப்பட்ட முன்பதிவு பெட்டிக்கு சென்ற விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் தன்னுடன் வந்த […]
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தினர். மாநகர் பகுதியில் 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் 10000 தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் தற்காலிகமாக மாநகராட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்த மாநகராட்சி கூட்டத்தில் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 721 வழங்கப்படுகிறது. இது சம்பளத்தை மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ளார். அதன் பிறகு தூய்மை பணியாளர்கள் ஒரு நாள் சம்பளத்தொகையை உயர்த்த வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாநகரில் உள்ள 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 10,000 தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் […]
அரசு பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து அரசு பேருந்து ஆனைகட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கார்த்திகேயன்(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் ஆறுமுகச்சாமி(47) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்தில் 4 பெண்கள் உள்பட 15 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆலமரமேடு ஆசிரமம் அருகே சென்ற போது பேருந்தின் ஸ்டியரிங் செயல்படாமல் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]
வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள பொதும்பு பகுதியில் ஸ்ரீகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகண்டன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டையில் நடைபெற்று வந்த காங்கிரீட் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அங்கு சக தொழிலாளியான ஜெயராஜ் என்பவரும் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் வருடம் ஜூலை 6-ஆம் தேதி அன்று ஸ்ரீ கண்டனும், […]
சுமார் 12 வாரங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவை குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை தனி வாகனத்தில் வனத்துறையினர் அழைத்துச் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இந்த அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 12 வாரங்களுக்கு பிறகு அருவியில் […]
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அதில் பிரபல யூடியூபர் டி.டி.எப் வாசன் என்பவர் மற்றொரு யூடியூபரான ஜி.பி.முத்துவை தனது மோட்டார் சைக்கிளில் அமர வைத்து 150 கி.மீ வேகத்தில் ஓட்டி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் டி.டி.எப் வாசன் மீது தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 10:30 மணிக்கு டி.டி.எப் வாசல் மதுக்கரை உரிமையியல் […]
கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் 28 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம்பெண்ணுக்கு பல இடங்களில் சிகிச்சை பெற்று குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் மிஸ்டு கால் மூலமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பண்ணுக்கு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அடுத்து தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் அந்த வாலிபரை வரவழைத்து […]
பிரசவத்திற்கு பிறகு இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துபாளையம் கிராமத்தில் பனியன் கம்பெனியில் ஊழியராக வேலை பார்க்கும் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வான்மதி என்ற மனைவி இருந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான வான்மதி நேற்று முன்தினம் பிரசவத்திற்காக அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு திடீரென மின்தடை ஏற்பட்டு ஜெனரேட்டர் பழுதானதால் அறுவை சிகிச்சை மூலம் வான்மதிக்கு பிரசவம் பார்க்க முடியாது நிலை ஏற்பட்டது. இதனால் விக்னேஸ்வரன் […]
பயங்கர வெடி சத்தம் கேட்ட சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை கோவை ரயில் நிலையத்தில் திடீரென வெடி வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் சத்தம் கேட்ட திசையை […]
புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் கிராமத்தில் ரத்தின சீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமான விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் ரத்னசீலனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் ரத்னசீலனின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நிர்மலா கல்லூரியில் திவ்யஸ்ரீ என்ற மாணவி பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நடைபெற்ற 17-வது யூத் அத்லெடிக் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடந்த மும்முறை தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்ட திவ்யஸ்ரீ முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து […]
பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அந்த வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார்கள் வந்தது. மேலும் அரசு கலைக் கல்லூரி சாலை, ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் உடையாம்பாளையம் பகுதியில் […]
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகை கடைக்காரரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு அருகே இருக்கும் மளிகை கடையில் படிப்பிற்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். இந்நிலையில் மளிகை கடைக்காரரான நடராஜ் என்பவர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதுடன், ஆங்காங்கே தொட்டு பேசி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த ஊராட்சி ஒன்றிய […]
15 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகை கடைக்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு வரும் சிறுமிகளுக்கு நடராஜன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் சிறுமிகளை கடைக்குள் அழைத்து சென்று தொட்டு பேசுவது, ஆபாசமாக பேசுவது என தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனை சிறுமிகள் வீட்டில் சொல்லாமல் மனதுக்குள்ளையே […]
தென் திருமலை வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென் திருமலை திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இதன் நிறைவு விழாவானது அதிகாலை 4.30 மணிக்கு சுப்ரபாதத்துடன் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து காலை 10 மணிக்கு ஸ்ரீ மலையப்ப சுவாமி […]
திருமணமான மூன்று நாளில் புதுப்பெண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியில் 39 வயதுடைய பட்டதாரி வசித்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி இவருக்கும் 33 வயதுடைய பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 16-ஆம் தேதி புதுமண தம்பதியினர் துணி எடுப்பதற்காக ஒப்பந்தக்கார வீதியில் இருக்கும் ஜவுளி கடைக்கு சென்றுள்ளனர் இந்நிலையில் துணிகளை தேர்வு செய்து கொண்டிருந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் புது மாப்பிள்ளை தனது மனைவியை […]
கோயம்புத்தூர் வரதராஜபுரம் உப்பிலிபாளையம் ராமசாமி நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு அகஸ்தியர் சன்னதியில் குரு பூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் யோகா ஆர்.பழனி (70) என்பவர் யோகாசனம் செய்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பக்தர்களுக்கு யோகாசனம் செய்தவாறு விளக்கம் அளித்தார். அகஸ்தியர் சன்னிதானம் முன்பு தலைகீழாக நின்றவாறு இட்லி சாப்பிட முடிவு செய்தார். இதையடுத்து தலைகீழாக நின்ற அவருக்கு உதவியாளர் ஒருவர் இட்லியை ஊட்டிவிட்டார். பின்னர் […]
பவளப்பாறை மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். தமிழக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி அழிந்து வரும் இனப்பட்டியலில் இருக்கும் பவள பாறையில் இருந்து பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை கடத்தி சிலர் விற்பனை செய்வதாக தமிழக தலைமை செயலாளருக்கு புகார் வந்தது. அவரின் அறிவுறுத்தலின்படி கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் இது குறித்த நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி […]
மருத்துவமனையில் மூட்டை மூட்டையாக குப்பைகளை சேகரித்து வைத்திருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அங்கு 300-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மருத்துவமனையின் கழிப்பிடம் முன்பு மூட்டை, மூட்டையாக குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். மேலும் கழிவு நீரும், மழை நீரும் மூட்டைகளுக்கு […]
பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதிகாரியை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கரும்பு கடை பகுதியில் சுல்தான் மியாமணியம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் அனைத்து நூலகங்களிலும் புத்தகம் இருப்பு கணக்கிடும் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காரமடை பகுதியில் இருக்கும் நூலகத்திற்கு சென்று புத்தக இருப்புகளை சரிபார்த்த போது சுல்தான் பெண் ஊழியரிடம் இரண்டு அர்த்தத்தில் பேசி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் […]
சக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீரகேரளம் திம்மையா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன், முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவானது கடந்த 6 ஆம் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் தொடங்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிள்ளையார் வழிபாடு, திருவிளக்கு வழிபாடு போன்ற பல்வேறு பூஜைகள் நடைபெற்றுள்ளது. பின்னர் 7ஆம் தேதி காலை விமான கலசம் நிறுவுதலும் மூன்றாம் கால வேள்வி […]
பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பொது கழிவறையை கண்டு மக்கள் புலம்பி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் குளம் பகுதியில் பொது கழிவறை ஒன்று உள்ளது. இந்த கழிவறையானது மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இரு பேஷன்களும் அருகருகேவும் கதவுகள் இல்லாத நிலையிலும் இருக்கிறது. இந்த கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வந்தாலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது என அப்பகுதி மக்கள் புலம்பித் தவிக்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலரான ஒருவர் கூறியதாவது “பொதுக்கழிப்பிடம் […]
சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை கடுமையான வெப்பம் நிலவியது. இதனை அடுத்து மாலை 4 மணிக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் பல்லடம் ரோடு சூடாமணி கூட்டுறவு சங்கத்திற்கு எதிரே மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து ஓடியது. சில […]
தாய், மகள் இருவரையும் உறவினர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு விவேகானந்தர் வீதியில் போபால் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா(48) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷர்மிளா(28), மணிமேகலை(25) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மணிமேகலை கிணத்துக்கடவில் இருக்கும் ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார்வருகிறார். இந்நிலையில் சுலோச்சனாவுக்கும் உறவினரான ஐயப்பன் என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இது தொடர்பான […]
ரயிலில் அடிபட்டு ஹோட்டல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணங்களின் போது சிலர் அஜாக்கிரையாக இருப்பதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக சிலர் ரயிலில் பயணிக்கும் போது கவன குறைவாக இருப்பதால் கீழே தவறி விழுந்து உயிரிழக்கின்றனர். மேலும் சிலர் செல்போன் உபயோகித்துக் கொண்டும், பாட்டு கேட்டுக் கொண்டும் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது ரயில் மோதி இருக்கின்றனர். இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தும் அதனை கண்டு கொள்வதில்லை. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முள்ளுப்பாடி […]
லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருக்கும் காய்கறி சந்தை மைதானத்தில் மனோஜ் என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை மனோஜ் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் காந்தி சிலை அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை மனோஜ் இடது புறமாக முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக அவ்வலுவலகங்களுக்கு 17.09.2022 (சனிக்கிழமை) அன்று முழு பணிநாளாக செயல்படும் என்றும், உள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவில் சுவர் இடிந்து விழுந்ததால் சிறுவன் உள்பட 2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எட்டித்துறை பகுதியில் புத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான நடராஜ்(50), முருகனின் மகன் ஹரி(13), நிதிஷ்(11), பிரபு(35), நிர்மல்(14) ஆகியோர் மழையில் நனையாமல் இருக்க கோவில் சுவர் ஓரம் ஒதுங்கி நின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் […]
சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் 4 பசு மாடுகள் வளர்த்து பால் கறந்து சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்யும் தொழில் பார்த்து வருகின்றார். இரவு வழக்கம் போல கருப்புசாமி நான்கு மாடுகளையும் தனது தோட்டத்து கொட்டகையில் அடைத்து விட்டு தூங்க சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி சசிகலா கொட்டகைக்கு சென்று பார்த்தபோது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட பசு மாடு […]
கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம் ஆனைகட்டி சீங்குழி பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே கொடுங்கையர் ராசிபலத்தில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று காயமடைந்து உடல் சோர்வுடன் நின்று கொண்டிருந்தது. இது பற்றி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். முதலில் எல்லை பிரச்சினை காரணமாக யார் யானைக்கு சிகிச்சை அளிப்பது கேரள வனத்துறையா தமிழக வனத்துறையா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் இரண்டு வனத்துறையினர் இணைந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து […]
கோவையை அடுத்த பேரூர் அருகே சிறுவாணி மெயின் ரோடு புலவபட்டி பகுதியில் நேற்று காலை 9.30 மணிக்கு காந்திபுரம் செல்வதற்கான பெண்கள் பேருந்துக்காக காத்திருந்தார்கள். அவர்கள் திடீரென அந்த வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக காந்திபுரம் நோக்கி வந்த மேலும் 4 பேருந்துகளை சிறைபிடித்தனர். இது பற்றிய தகவல் அறிந்த ஆளாந்துறை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். […]
பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தினமும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நின்று விடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். எனவே பழுதடைந்த பேருந்துகளை உரிய முறையில் பராமரித்து […]
மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஓய்வூதியர்கள் முழு பலன் கிடைக்கும் விதமாக நடைமுறைப்படுத்தி சந்தா தொகையை ரூபாய் 350 ஆக குறைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பலராமன் தலைமை தாங்கியுள்ளார். செயலாளர் சிங்காரவேலு முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பி.கே.எஸ் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணாளன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ்(22) என்பவரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் குணாளன், சந்தோஷ் மற்றும் தனது நண்பர்களுடன் இணைந்து ஆழியாறுக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு உள்ள அனைத்து இடங்களையும் […]
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனசக்கர பகுதியில் அக்கா மலை புல் மேடு வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வால்பாறை வனச்சக்கர துறையினர் நேற்று காலை வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அக்கா மலை புல் மேடு வனப்பகுதியில் ஆட்டுப்பாதை குறுக்கு வன சுவற்றில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஹரி ஹர வெங்கடேஷ் சம்பவ இடத்தை […]
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் என் குப்பை என் பொறுப்பு என்னும் திட்டத்தின் கீழ் விளம்பர பலகைகள் நோட்டீசுகளை அகற்ற கால ஆவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று காலை முதல் கோவை ரோடு மகாலிங்கபுரம் நேதாஜி ரோடு உடுமலை ரோடு மற்றும் முக்கிய சாலைகளில் இருந்த விளம்பர பலகைகள் நீக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளர் பானுமூர்த்தி போன்றோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது நகர அமைப்பு ஆய்வாளர்கள் சுகாதார […]
பேரூர் அருகே செம்மேடு திருவிக வீதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இந்த பகுதி தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கின்றது. தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவிக வீதியில் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென அந்த பகுதி மக்கள் சுமார் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்டேவிட்ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தஞ்சாவூரை சேர்ந்த அருண்(23) என்ற நண்பர் உள்ளார். இருவரும் கோவையில் இருக்கும் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் ஜான்டேவிட்ராஜ் அருணுடன் கோவையில் இருந்து தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள […]