திருட முயற்சித்ததாக விசாரணைக்கு அழைத்து சென்ற வடமாநில தொழிலாளி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் மில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மில்லில் வேலை பார்ப்பதற்காக ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கடந்த வாரம் கஜேந்திரன் பிரசாத் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மில்லில் இருந்து வெளியேறிய கஜேந்திர பிரசாத் வேட்டைக்காரன் குட்டை பகுதியில் இருக்கும் மணி என்பவரது வீட்டு காம்பவுண்டு சுவரை ஏறி குதித்துள்ளார். இது குறித்து அறிந்த […]
Tag: கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, ஆர்.எஸ். புரம், துடியலூர், கவுண்டம்பாளையம் போன்ற பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவது குறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி […]
கோவை அருகில் மனைவியை கொன்று விட்டு தலைமறைவாக இருந்த கணவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதி ஜெயமங்கலத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனது மனைவி கலாமணியுடன் கோயம்புத்தூரில் உள்ள தொண்டாமுத்தூர் வ.உ.சி. வீதியில் வசித்து வந்துள்ளனர். இதில் பாண்டியராஜன் அங்கு இருக்கக்கூடிய ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக பாண்டியராஜன் வேலைக்கு செல்ல வில்லை. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி பாண்டியராஜன் வீட்டில் இருந்து […]
வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்குமாறு அதிகாரிகள் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான அரியவகை வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் இருக்கும் வளைவுகளில் அமர்ந்திருக்கும் அரியவகை விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, அரிய வகை விலங்குகள் இந்த சாலையில் சுற்றித் திரிவதால் சுற்றுலா […]
3 வயது மகன் இறந்த துக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் கார்த்திக் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் 3 வயது மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் எதிர்பாராதவிதமாக கார்த்திக்கின் மகன் உயிரிழந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் தனது வீட்டில் உள்ள யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். […]
குடிநீர் சீராக வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டயம்பாளையம் ஊராட்சி லட்சுமி கார்டன் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்வதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் குடிநீர் சீராக வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பொதுமக்கள் அனைவரும் திரண்டு கொண்டையம்பாளையம் சாலையில் காலி […]
காரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தி வந்த 3 நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கொண்டேகவுண்டன்பாளையம் பி.ஏ.பி. வாய்க்கால் மேடு அருகில் காருடன் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். இதனையடுத்து காரை சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஊரடங்கு பலனாக பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை. அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் […]
மே 14ஆம் தேதி முதல் மே 31 வரை நாகர்கோயிலில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசியம் தேவைகளுக்கு […]
மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராக்கிபாளையத்தில் வசித்து வருபவர் தனபால். இவரின் மூத்த மகள் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்து பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி தனபாலின் மகள் அந்த வாலிபரையே திருமணம் செய்துகொண்டார். இதனால் வாழ்க்கையை வெறுத்த தனபால் வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு […]
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த நான்கு நாட்கள் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]
கோயம்புத்தூரில் மனைவியை கணவன் மூன்று முறை கத்தியால் குத்திய பிறகு காரை ஏற்றி கொன்ற கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கோயம்புத்தூரை சேர்ந்த 30 வயதான கோகுல் குமார் என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த ஹரி என்பவரின் 26 வயதான மகள் கீர்த்தனாவுடன் திருமணம் நடைபெற்றது. சென்னை புறநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோகுல் குமார் மருத்துவராக வேலை செய்து வந்துள்ளார். கீர்த்தனாவும் மனித மேலாளராக தனியார் மருத்துவமனையில் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மனைவியை கத்தியால் குத்தியதோடு அவர் மீது 3 முறை கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் கோகுல் குமார்(30) என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா (26) என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கோகுல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கீர்த்தனாவும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் […]
கோவையில் காட்டு பன்றி ஒன்று அவுட் காயை கொண்டு யாரோ தாக்கியதில் வாயில் அடிபட்டு உயிருக்கு போராடி வருகின்றது. கோவை வனக் கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் நரசிபுரா கிராமம் வேளாண்மை கூட்டுறவு பக்கத்தில் காட்டு பன்றி ஒன்று வாயில் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சென்று பார்வையிட்டபோது காட்டு பன்றியின் வாயில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளது. இதையடுத்து வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு காட்டு பன்றியை […]
சாலையில் இருக்கும் குழியை இரண்டு சிறு குழந்தைகள் கட்டையை வைத்து அடைக்கும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. அதேசமயம் சாலையோரம் இருக்கும் குழிகளில் மழைநீர் நிரம்பி வழிகிறது . இதனால் மக்கள் சிலர் குழி இருப்பது தெரியாமல் குழிக்குள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் இரு குழந்தைகள் நடந்து வரும்போது சாலையோரம் […]
தன் மனைவியுடன் உல்லாசமாக இருந்த பக்கத்து வீட்டுக்காரரையும் மனைவியையும் இரும்பு கம்பியால் தாக்கிய கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூரில் உள்ள சூலூர் கள்ளபாளையம் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த தம்பதியான சுதர்சன் மற்றும் சத்தியா கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உண்டு. அவர்கள் அருகில் ரஞ்சித் என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் வசித்து வருகிறார். ரஞ்சித்க்கும், சத்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த சுதர்சன் மனைவியை கண்டித்துள்ளார். […]
கோயம்புத்தூரில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குளத்து ஏரி பகுதியில் துரை என்பவர் வயலில் சட்டவிரோதமாக அமைத்த மின் வேலியில் சிக்கி 22 வயது ஆண் யானை உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது மின் கம்பத்தில் இருந்து மின்சாரத்தை திருடி நேரடியாக மின்வேலியில் இணைத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்த துரை மற்றும் நிலத்தின் […]
காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளது. அதனை சுற்றி அடர்ந்த வனப் பகுதிகள் இருப்பதால் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தேயிலைத் தோட்டங்களிலும் அதன் அருகில் வசித்து வரும் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் 1வது பிரிவில் […]
தீம் பார்க்கில் குளித்து கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மகன் அஜித்குமார்(24). அஜித்குமாரும் அவருடைய நண்பரும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள வெண்ணந்தூர் அருகே சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள பரவச உலகம் தீம் பார்க்கில் குளித்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக அஜித்குமார் நீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது நண்பர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]
நபர் ஒருவர் 8 மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு அபாயகரமான சாதனைகளை செய்து விருதை பெற்றுள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் மேஜிக் கலை நிபுணரான டிஜே வர்கீஸ். இவர் கடந்த 25 வருடங்களாக மேஜிக் செய்து வருகிறார். மேஜிக் கலையில் தனெக்கென்று ஒரு அடையாளத்தை வைத்து இருக்கிறார். இவர் தன்னுடைய கண்களை துணியால் கட்டிக் கொண்டு அபாயகரமான சாகசங்கள் செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு, யுனிவர்சல் புக் ஆஃ ரெக்கார்டு என்ற பல்வேறு உலக சாதனை […]
காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது நியாஸ். இவர் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் நிலத்தில் வாட்ச்மேன் வேலை செய்து வந்தார். பணியில் இருந்த முகம்மது நியாஸ் இன்று காலை 6 மணி அளவில் டீ சாப்பிட மருதமலை அடிவாரத்தில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது திடீரென சட்டக் கல்லூரி பின்புறம் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை முகம்மது நியாஸை […]
மது தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் செல்வம்(60). இவர் அங்குள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார் . கோவை சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் பால்ராஜ்(40). இவர் கூலி தொழில் செய்து வந்தார். செல்வமும் பால்ராஜும் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இரண்டு பேருக்கும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்தது . இந்நிலையில் காட்டூர் ரங்கன் வீதியில் அமர்ந்து செல்வமும் பால்ராஜும் […]
நிலத்தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இன்று ஜீவானந்தம் தனது குடும்பத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை கண்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்த பத்திரிகையாளர்கள் அவர்களை தடுத்து குடும்பத்தினரின் மேல் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் ஜீவானந்தத்தின் குடும்பத்தாரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் […]
காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த தொண்டாமுத்தூர், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் சோளப்பயிர் தற்போது அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இதனால் காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து நாளுக்கு நாள் அதிக அளவில் வெளியேறி ஊருக்குள் புகுந்து வந்தது. யானைகள் ஊருக்குள் புகாமல் இருப்பதற்காக வனத்துறையினர் ஆல்பா, பீட்டா ,காமா என மூன்று சிறப்புப் படைகள் அமைத்து யானைகளை கண்காணித்து வருகின்றனர். எனினும் உணவிற்காக யானைகள் […]
வேலை வகை: மைய நிர்வாகி மொத்த காலியிடம் 01 கடைசி தேதி 21.12.2020 தேர்வு செயல்முறை: தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : Coimbatore District- கோயம்புத்தூர் மாவட்டம் கல்விதகுதி:: M.S.W. (சமூக பணி முதுநிலை) இருப்பிடம்:: கோயம்பத்தூர் இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1814237
கோவை அரசு மருத்துவமனையில் கழிவறையில் பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தையை குறித்து கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றன. இங்கு அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் உடல் நிலையை பரிசோதித்து விரைந்து சிகிச்சை அளிக்கும் விதமாக சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவப்பு பிரிவான விபத்து மற்றும் அதி தீவிர சிகிச்சை […]
கோவை அருகே ஆள்மாறாட்டம் செய்ய ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை, சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் வசித்து வரும் தம்பதி ராஜவேல்-மோகனா. இவர்கள் இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு இவர்கள் மீது நிதி நிறுவன மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தப்ப எண்ணிய ராஜவேல் தன் மனைவி இறந்து விட்டதாக போலி […]
விதவைபெண் ஒருவர் தன் காதலன் தன்னுடன் பேசாததால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் பொள்ளாச்சி பகுதியில் வசிப்பவர் புவனேஸ்வரி. திருமணமான இவருக்கு பதிமூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இவரது கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார். எனவே புவனேஸ்வரி தன் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது முகநூல் மூலம் காஜா மொய்தீன் என்ற நபருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. கணவனை […]
17 வயதே ஆன சிறுமிக்கு இரண்டு முறை திருமணம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவரின் பெற்றோர் திண்டுக்கல்லில் உறவினர் ஒருவரான கூலித் தொழிலாளிக்கு போன வருடம் திருமணம் செய்து வைத்துள்ளனர். தனது கணவரோடு குடும்பம் நடத்தி வந்த நிலையில் சிறுமிக்கு 25 வயது வாலிபரான சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் கணவருக்கு தெரிந்ததால் அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி கணவருடன் […]
கோவை சாடிவயல் பகுதியில் மலைவாழ் மக்களுடன் சேர்ந்து நெல் நாற்றுகளை அமைச்சர் வேலுமணி நட்டு அப்பகுதி மக்கள் குறைகளை கேட்டறிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு சலுகைகளும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி கோவையை அடுத்த சாடிவயல் மற்றும் அருகே சுற்றியுள்ள […]
ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டவரிடம் 55 லட்சத்துக்கு கள்ள நோட்டு கொடுத்து மோசடி செய்த நபரை கோவையில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையை சேர்ந்த ட்ரான்ஸ்போர்ட் அதிபர் மனைவியான ஜெனிஃபரிடம் கோவையை சேர்ந்த ஆச்சரியார் என்பவர் ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை ஆவணத் தொகையாக கொடுத்துள்ளார். முதல் தவணையாக ஆச்சாரியா கொடுத்த 55 லட்சம் ரூபாயை ஜெனிஃபர் பார்த்தபோது கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து […]
இரண்டரை வயது பெண் குழந்தையை 52 வயது நபர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் 26 வயது இளம்பெண் ஒருவர், கணவரை பிரிந்து இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.. இவர் தினமும் வேலைக்கு சென்று வருவதால் குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டின் அருகில் இருக்கும் பெண் ஒருவரை பணியில் சேர்த்துள்ளார்.. இந்தநிலையில், குழந்தையை பார்த்து வந்த பெண், ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியூருக்கு சென்று விட்டதால் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மாங்கரை, தடாகம் போன்ற பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன. கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த யானைகள் அனைத்தும் உணவு, தண்ணீர், பனை மரத் துண்டுகளை உண்பதற்காக தினம்தோறும் அருகில் இருக்கின்ற கிராமங்களுக்கும், செங்கல்சூளைகளுக்கும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை பெரிய […]
பிள்ளைகள் விளையாடும் புகைப்படச் சுருள் விசிலில் ஆபாச படங்கள் இருப்பதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் சிறுவர்கள் விளையாட கூடிய விசில் போன்ற விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், நீளமாக வண்ண காகிதங்கள் சுற்றப்பட்டு, புகைப்பட சுருள் கொண்டு வடிவமைக்கப்பட்ட விசில்களை சிறுவர்கள் அதிகம் வாங்கி விளையாடி வருகின்றனர். இந்நிலையில் சூலூர் பகுதி சிறுவன் ஐந்து ரூபாய் கொடுத்து விசிலை வாங்கியதாகவும், சிறுவன் விளையாடிய பிறகு […]
கள்ளத்துப்பாக்கி உடன் வனப் பகுதிக்குச் சென்று வேட்டையாட முயன்ற நபர்களை வனத்துறை காவலர்கள் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் பாலப்பட்டி வேடர் காலனி பகுதியில் கள்ளத்துப்பாக்கி, சுருக்கு கம்பி போன்றவற்றை கொண்டு ஒரு கும்பல் மான், முயல் போன்றவற்றை வேட்டையாட செல்வதாக சிறுமுகை வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர் நவீன், சத்யராஜ் ஆகியோர் வேட்டையில் ஈடுபட்ட 4 நபர்களை பிடித்தனர்.. அவர்களிடமிருந்து ஒரு கள்ளத்துப்பாக்கி, சுருக்கு […]
கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் இரவு நேரங்களில் முகமூடி கொள்ளையர்கள் சுற்றித்திரியும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் பீளமேடு பாலகுரு கார்டன் குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை அடையாளம் அறியாத சில நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு அப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். அத்தகைய காட்சியானது அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கின்றது. அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்பகுதியில் இருக்கின்ற […]
காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞன் கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோயம்புத்தூரின் பேரூர் எம்.ஆர் கார்டன் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா. இவரும் அதே பகுதியை சேர்ந்த ரதீஷ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் ஐஸ்வர்யா வீட்டுக்கு தெரியவந்ததும் அவர்கள் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். இதனால் அவர் ரதீஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதில் கோபமடைந்த ரதீஷ் ஐஸ்வராயா வீட்டிற்கு சென்று மீண்டும் தன்னை காதலிக்குமாறு கேட்டுள்ளார். இந்நிலையில் இருவருக்கும் […]
பெரியார் சிலையை அவமானப்படுத்திய சம்பவத்திற்கு எதிராக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழில் டுவிட் செய்துள்ளார். கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தத்தில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் அதன் மீது காவி சாயம் பூசப்பட்டிருந்தது. இதை கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இச்சம்பவம் பற்றி டுவிட்டரில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் […]
தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தின் கீழ் பல குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக இந்த சத்துணவுத் திட்டம் வழங்கப்படாமல் நிறுத்தி வைத்திருந்தது. இதை வழங்கவேண்டும் என்று நீதிமன்றங்கள் வரை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் கோவை மாவட்டத்தில் இது குறித்தான அறிவிப்பு ஓன்று வெளியாகி உள்ளது. கோவையில் சத்துணவு பயனாளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் இன்று முதல் 23ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) […]
கோவையில் இளம்பெண் ஒருவருக்கு ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் பகுதியை அடுத்த ராக்கி பாளையம் ஏரியாவை சேர்ந்த கௌதம். இவரது மனைவி ஜோதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கௌதம் அவரது நண்பன் உதவியுடன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு துடியலூர் நோக்கி வேகமாக சென்றனர். […]
கோவை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே. அர்ஜுனன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இ எஸ் ஐ அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ள அம்மன் கே. அர்ஜுனன் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே அவர் குடும்பத்தில் மூன்று பேருக்கு தொற்று உள்ள நிலையில், இன்று அவருக்குத் தொற்று கண்டறியப்பட்டு சிகிக்சையில் உள்ளார். ஏற்கனவே, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே. பழனி, சதன் பிரபாகரன், குமரகுரு, அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோருக்குத் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துடியலூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் வைசியால் வீதி பகுதியைச் சேர்ந்த ரவிசந்திரபாபு என்ற 28 வயது இளைஞர் நேற்று துடியலூர் பகுதி வெள்ளக்கிணறு இரயில் தண்டவாளம் அருகே கஞ்சா விற்பனை செய்து வந்ததுள்ளார். இது பற்றி தகவலறிந்த துடியலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிசந்திரபாபுவை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும், அவரிடமிருந்து 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரை துடியலூர் […]
நான் சொல்லுவதை திமுக கேட்காததால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்து விட்டோம் என்று முதல்வர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ஸ்டாலின் கட்சியை சேர்ந்தவர்களை ”நீங்கள் போய் நிவாரணம் கொடுக்க வேண்டும்” என்று அறிவித்திருந்தார். அப்பொழுது நான் குறிப்பிட்டேன், மருத்துவ வல்லுனர்கள் கூறுவதை கேளுங்கள்… நீங்கள் தேவையில்லாமல் மக்களை சந்தித்தால்அங்கே நோய் பரவல் ஏற்பட்டுவிடும். ஆகவே நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்திலே நிவாரண பொருட்களை கொண்டு கொடுங்கள், அவர்கள் […]
சொத்து தகராறை விசாரிக்கச் சென்ற காவலரை தாக்கிய குத்துவது தந்தை மகன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை அடுத்த இலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது தம்பியான ஆறுமுகம் தனது தாய் தந்தையுடன் கருமத்தம்பட்டி பெரியாண்டவர் கோயில் பகுதியில் வசித்து வரும் நிலையில் சொத்து தொடர்பாக அண்ணன் தம்பி இடையே முன்விரோதம் இருந்ததால் அவ்வப்போது இருவருக்கும் தகராறு ஏற்பவது வழக்கம். இந்நிலையில் அண்ணனான சக்திவேல் தனது மகன் பிரவீன்குமாருடன் சேர்ந்து ஆறுமுகத்தின் […]
குடிபோதையில் தாக்கிய கணவரை மனைவி கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் அடுத்த கருப்பக்காள் தோட்டம் பகுதியில் வசித்துவரும் சிவப்பிரகாசம்-மகேஸ்வரி தம்பதியினருக்கு மோகனப்பிரியா, லோகநாயகி என இரண்டு மகள்கள் உள்ளனர். சிவப்பிரகாசம் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். குடிக்கு அடிமையான சிவப்பிரகாசம் நேற்று முன்தினம் நன்றாக குடித்துவிட்டு வர மனைவி தட்டி கேட்டதால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படவே மனைவியை கணவன் முதலில் தாக்க, அதனால் ஏற்பட்ட கோபத்திலும், […]
7ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அறிவொளி நகரை சேர்ந்த பிரபுவின் மகள் பூவிகா, அவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த பூவிகா நேற்று திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணீர் மல்க […]
ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கொரோனா தொற்று பற்றி வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியதால், அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். டி.என். பாளையம் பகுதியில் 24 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது என அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் வாட்ஸ் அப்பில் பொய்யாக வதந்தி பரப்பி விட்டனர். இதை அறிந்த போலீசார் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். இத […]
கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க மையம் ஒன்று செயல்படுத்தினார் ஆட்சியர், அங்கு பொதுமக்கள் மையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கோவை மாவட்டம் கருத்தம்பட்டி அருகே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மையம் இன்று முதல் செயல்பட உள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆய்வு செய்திருக்கிறார். மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதற்கட்டமாக 50 படுக்கை வசதிகள் […]
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள ஹெச்.பி. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மகளிருக்கு இலவசமாக பெட்ரோல் வழங்க முடிவெடுத்துள்ளது. மார்ச் 8ம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள ஹெச்.பி பெட்ரோல் பங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் தினமான மார்ச் 8ம் தேதியன்று மட்டும் முதலில் வாகனம் ஓட்டி வரும் 100 பெண்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வீதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. […]
திரைப்பட பாணியில் காவல் உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து பொது மக்களிடம் பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் சரவணம்பட்டி சாலையில் பாண்டி குமார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் அவரை வழிமறித்த நபர் ஆவணங்களை காண்பிக்குமாறு நிர்பந்தித்தார். ஆவணங்கள் சரியாக இருந்த போதிலும் பாண்டிக்குமாரை மிரட்டிய அந்த நபர் ஆயிரம் ரூபாய் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பாண்டி குமார் […]