இந்த சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வு கூட்டம் நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கோயில் கருவறைக்குள் விஐபி தரிசனம் நடப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், எந்த கோயில் கருவறையிலும் பக்தர்கள் சென்று பூஜை செய்ய அனுமதி கிடையாது. அது […]
Tag: கோயில்கள்
வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமியன்று கோயிலை திறக்க வாய்ப்பு உள்ளதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கோவையை சேர்ந்த பொன்னுசாமி என்பவர், தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோயில்களை மூடியிருக்கிறது.. நவராத்திரி இறுதி நாளான விஜயதசமி அன்று கோயிலுக்கு சென்று மக்கள் வழிபடுவது வழக்கம்.. எனவே விஜயதசமி நாளன்று வெள்ளிக்கிழமை திறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் அமர்வு […]
நாம் அனைவரும் கோயிலுக்கு போய் வருவது வழக்கம். உண்டியலில் காசு போடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், என்றைக்காவது கோயிலில் ஏன் உண்டியல் வைத்திருக்கிறார்கள் என்று யோசனை செய்து இருக்கிறீர்களா? கோவிலில் கடவுளுக்கு பல பரிகாரங்கள் செய்வது வழக்கம். ஆனால் அனைவரும் ஒற்றுமையாக செய்யும் ஒரே விஷயம் கோயில் உண்டியலில் பணம் போடுவது. அது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கும். தங்களது வசதிக்கேற்றவாறு காணிக்கை செலுத்துவார்கள். இதனால் வீட்டில் செல்வம் குறையாமல் இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. இதனை ஒரு […]
கேரளாவில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழிபட இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கோயில்களுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதன் முதலாக கேரளாவில் தான் கொரோனா தாக்கம் அதிகரித்து இருந்தது. பின்னர், கேரளா அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருந்தது. அதன் பிறகு, பிற மாநிலங்கள் மற்றும் பிற […]
நாடு முழுவதும் நாளை முதல் பல்வேறு நிபந்தனைகளுடன் வழிப்பாட்டு தலங்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக அரசு இதுவரை எந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிடவில்லை. எனவே நாளை வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நோய் தொற்று குறையாக காரணத்தால் நாளை வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிப்பாட்டு நெறிமுறைகளை தமிழகத்தில் வெளிப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஒட்டல்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், கோயில்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் : கட்டுப்பாடு மண்டலங்களில் பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும். கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதியில் மட்டுமே கோயில்களை […]