இந்தியா ஒன்றிய துணை அமைச்சர் வி.கே சிங்கிடம் எம்.பி திருமாவளவன் மற்றும் எம்பி ரவிக்குமார் ஆகியோர் தனித்தனியே கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 27 திட்டங்கள் ஆக பிரிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அவுட்சோர்ஸ் முறையில் டோல் பிளாசாக்களை துணை ஒப்பந்தம் செய்துள்ளது. […]
Tag: கோரிக்கை மனு
அரசு விடுதியில் தங்கி பயில்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர். தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார் அப்பொழுது பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு உயிரி தொழில்நுட்பவியல், நுண்ணறியியல் உள்ளிட்ட துறைகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து பயிலும் மாணவர்கள் சார்பாக ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. […]
மகனை கையில் தூக்கிக்கொண்டு தந்தை 1 1/2 கி.மீ தூரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்து வந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேகேப்பள்ளி பகுதியில் ஆட்டோ டிரைவரான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணி ஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மன வளர்ச்சியற்ற மாற்றுத்திறனாளியான ஹரிபிரசாத்(16) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் தனது மனைவி மற்றும் மகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக ஓசூரில் பேருந்தில் ஏறியுள்ளார். […]
டி.ஐ.ஜி. அனிவிஜயாவிற்கு கோரிக்கை மனு ஒன்று வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சரக போலீஸ் டி. ஐ.ஜி. அனிவிஜயாவிடம் காவல்துறையினர் அத்துமீறலுக்கு எதிராக கூட்டியக்கம் சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் குகையநல்லூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவர் கடந்த 11-ஆம் தேதி மேல்பாடி காவல் நிலையம் அருகே உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த சரத்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு […]
அரசு மினி கிளினிக் மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . கடலூர் மாவட்டத்தில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அரசு மினி கிளினிக் மருத்துவர்கள் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கடலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் நாங்கள் அரசு மினி கிளினிக்கில் மருத்துவர்களாக அனுமதிக்கப்பட்டோம். இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடுதல், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், தடுப்பூசி போடும் பணி போன்றவற்றில் ஈடுபட்டு வந்தோம். […]
ரேஷன் ஊழியர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் திடீர் சுற்றறிக்கை ஒன்றை பொதுவிநியோக திட்டம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கமானது சென்னையில் உள்ள உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த மனுவில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்திரன் மற்றும் மாநில பொது செயலாளரான தினேஷ்குமார் ஆகியோர் கூறியுள்ளதாவது, பொது வினியோக திட்ட நியாயவிலை கடைகள் வேலை நேரம் குறித்து நா.க.எண் இ.சி 2/4492/2022, நாள் […]
நீட் தேர்வு குறித்து கோரிக்கை மனு ஒன்றை தமிழக அரசு கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் திருப்பி அனுப்பி வைத்தார் கவர்னர். இதற்க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அனைவராலும் குரல் எழுப்பப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் சம்மதத்தோடு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்தக் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு செய்த போது பரமக்குடி எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்ய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு பரமக்குடிக்கு வந்துள்ளார். இந்நிலையில் அங்கு சென்ற எம்.எல்.ஏ முருகேசன் பொதுமக்கள் சார்பில் அமைச்சரிடம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து அந்த மனுவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி பணியாளர்களை முன்கள பணியாளர்களை அறிவித்து அவர்கள் […]
விருதுநகர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள யூனியன் பாவாலி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் அந்த பகுதியில் 12-வது வார்டுக்கு உட்பட்ட கவுன்சிலரோம் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதி கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை யாரிடம் சொல்வது என தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் குடிநீர் பிரச்சனை, சாலை சீரமைப்பு, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் […]
பட்டதாரி ஆசிரியர் கழகம் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வை கொரோனா பரவால் அதிகரிப்பால் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் மாயவன், மாநில பொருளாளர் ஜெயக்குமார், மாநில தலைவர் பக்தவச்சலம், மாநில செயலாளர் சேது செல்வம், பள்ளி கல்வித்துறை இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை செயலர் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியதாவது, கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் தற்போது பேரலையாக உருவெடுத்து வருகிறது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் […]
காரைக்குடியில் இசை, நாடக கலைஞர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி ஊர்வலமாக சென்றனர். காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நாடக, இசை சங்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதற்கு பி.எல்.காந்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நாடக கலைஞர்கள், இசை, ஒலி, ஒளி அமைப்பாளர்கள், இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் கொரனோ தொற்றால் அவசர நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. அதிலிருந்து நமது சங்கத்தினருக்கு தளர்வுகள் வழங்க வேண்டும். அதை அரசிடம் […]
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு அளித்துள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாமக சார்பில் சென்னையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்தின் போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு […]