தமிழகத்தில் கொரோணா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தற்போது கொரோனா பாதிப்புகள் அனைத்தும் குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தமிழகத்தில் இதுவரை இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியுள்ளது. ஆனால் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி, கூட்டம் கூடுவதை […]
Tag: கோரோனா
ரேபிட் கருவி பரிசோதனையை ராஜஸ்தான் அரசு நிறுத்தியது. துல்லியமான முடிவு தராததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஏற்கனவே, மேற்குவங்கத்தில் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை […]
கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சீனாவில் 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி […]
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகள் , வணிக வளாகங்கள் , விளையாட்டு அரங்கங்கள் தியேட்டர்கள் […]