தாய்லாந்து நாட்டின் மன்னர் மகாவஜிர லோங்கோர்ன் மற்றும் அவரது மனைவி சுதிடா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளனர். அதே சமயம் அவர்கள் இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரசகுடும்ப பணியகம் கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரச பணிகளை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் பேரில் மன்னர் மற்றும் ராணி இருவரும் ஓய்வில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Tag: கோரோனோ
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக கடந்த 1993-ஆம் வருடம் முதல் 2001-ஆம் வருடம் வரை பதவி வகித்த பில் கிளின்டனுக்கு தற்போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நான் நன்றாக இருக்கிறேன். மேலும் பூஸ்டர் டோஸ் மற்றும் கொரோனா தடுப்பூசி மற்றும் போட்டிருப்பதால் எனக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். […]
கடந்த இரண்டரை வருடங்களாக உலக நாடுகளில் தீவிர அச்சுறுத்தல் ஆக இருந்து வரும் கொரோனா தொற்று முதன் முறையாக 2019-ஆம் வருடம் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை பிறபித்து பரவலை கட்டுப்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு சீனாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 26-ஆம் தேதி வரை மொத்தம் 3 லட்சத்து 7,802 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள […]
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது கூறியதாவது, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும். அறுவை சிகிச்சை செய்யப்படுபவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா பாதிப்பானது சீனாவில் தொடர்ச்சியாக இருந்து வந்தாலும் இந்தியாவில் பாதிப்பு இல்லை. அதனால் சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றது. மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய பரிசோதனை […]
கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என மருத்துவ துறை அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் வரும் பயணிகளுக்கு பரிசோதனை நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை என மருத்துவத்துறை கூறியுள்ளது. இந்நிலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிலும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பெண்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்ய […]
கடந்த சில தினங்களாக சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் 1,000ற்கும் கீழ் இருந்த நிலையில் இந்த மாதம் தினசரி பாதிப்பு 25 ஆயிரம் வரை பதிவாகியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று காரணமாக கடைசியாக கடந்த மே மாதம் 26 – ஆம் தேதி ஒருவர் உயிரிழந்தார். அதன் பின் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் 87 வயது முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக […]
கொரோனா காலத்தில் செர்பியாவுக்கு உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார். அரசு முறை பயணமாக செர்பியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி நிக்கோலா சிம்போலிக் இந்தியா வந்துள்ளார். அவர் மத்திய மந்திரி ஜெய்சங்கரை இன்று டெல்லியில் சந்தித்தார். மேலும் இந்த சந்திப்பின்போது இந்தியா செர்பியா இடையேயான உறவை வலுப்படுத்துவது, குறித்து முடிவெடுக்கப்பட்டது. மேலும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய பணி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன் பின்னர் செர்பிய வெளியுறவுத்துறை மந்திரி […]
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்கள் ஆகியும் கொரோனா இல்லாத ஒரு பச்சை மண்டலம் ஆகவே நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் என்பது அதிகரித்து வருகிறது. மும்பையிலிருந்து வந்த இரண்டு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, […]