ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ராமேஸ்வரத்தில் பழமையான ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்கள் புனித நீராக கருதப்படுகிறது. இந்த பகுதியில் 64 தீர்த்தங்கள் இருக்கிறது. இதில் அக்னி தீர்த்தம் பகுதியில் நீராடுவதற்காக இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இப்படிப்பட்ட புனித இடத்தில் ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள கழிவு நீர் நேரடியாக கலப்பதோடு, சாக்கடைகள் மற்றும் குப்பைகள் போன்றவைகளும் […]
Tag: கோர்ட் உத்தரவு
உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் இருக்கிறது. தாஜ்மஹாலை முகலாய மன்னர் ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியுள்ளார். இந்த தாஜ்மஹால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். கடந்த டிசம்பர் மாதம் டெல்லி உச்சநீதிமன்றம் தாஜ்மஹாலை சுற்றி 500 கிலோ மீட்டர் தொலைவிற்கு எந்த ஒரு கடையும் செயல்படக் […]
டெல்லியில் கடந்த 2020-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் பேரணி நடத்தினர். அந்த பேரணியின் போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த வன்முறை சம்பவமானது 3 நாட்கள் நீடித்த நிலையில், 53 பேர் அநியாயமாக கொல்லப்பட்டதோடு, 700-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அதோடு நூற்றுக் கணக்கான வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் டெல்லியே கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் […]
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயில் பயணமானது வசதியாகவும், கட்டணம் குறைவாகவும் இருப்பதால் ரயிலில் செல்வதை தான் விரும்புகிறார்கள். அதோடு நீண்ட தூர பயணத்திற்கும் ரயில் பயணங்கள் மிகவும் வசதியாக இருக்கிறது. இப்படி பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புவதால் ரயில்வே நிர்வாகம் பல்வேறு வகையான சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மத்ஸ்யகந்தா விரைவு ரயிலில் பொதுப் பெட்டியில் 5 இளைஞர்கள் ஏறியுள்ளனர். இந்த 5 இளைஞர்களும் ரயிலில் செல்வதற்கு டிக்கெட் எடுக்காததோடு, […]
சென்னை உயர் நீதிமன்றம் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நவம்பர் 15-ஆம் தேதி முதல் செயல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. வன பாதுகாப்பு மற்றும் வன விலங்குகளின் நலனை கருத்தில் கொண்டு மலை வாசஸ்தலங்களில் மதுபான பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு அந்த மது பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த 10 ரூபாயை திரும்ப கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி மதுபான கடை சார்பில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், டெண்டருக்காக விண்ணப்பிக்கும் போது நில உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று கேட்டு நிர்பந்திக்கவில்லை. ஆனால் டெண்டரை இறுதி செய்த பிறகு நில உரிமையாளர்களிடம் குத்தகை ஒப்பந்தம் தாக்கல் செய்ய வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். அதோடு அனைவருக்கும் டெண்டர் படிவங்கள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அரவிந்த்சாமி. இவர் நடிப்பில் சமீபத்தில் ரெண்டகம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரில் வெளியிட்டிருந்தனர். இந்த படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6-ம் தேதி படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்தனர். இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் இந்த படத்தின் […]
டெல்லியில் வசிக்கும் ஒரு பெண்மணி தன்னுடைய முன்னாள் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதோடு தன்னைப் பின் தொடர்வதாகவும், மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவர் மீது டெல்லி காவல்துறையினார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு பதிவை […]
புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் ஹேமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் புதுச்சேரியை சேர்ந்த நான் தமிழகத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். நான் மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்காக பிறப்பிடச் சான்று, இருப்பிட சான்று மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் என்னுடைய கணவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் எனக்கு சான்றிதழ் வழங்குவதற்கு தாசில்தார் அனுமதி மறுத்துவிட்டார். நாட்டில் 90% பேர் பிறந்தது […]
அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகு கட்டாயம் 2 வருடங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும். அதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரிவிடம் ஒப்பந்த கையெழுத்து வாங்க வேண்டும். ஆனால் ஒப்பந்த காலத்தில் மருத்துவ மாணவர்களுக்கு பணி வழங்காததோடு கல்லூரியில் சேரும்போது கொடுத்த அசல் சான்றிதழ்களையும் வழங்குவதற்கு மறுத்ததால் கோவை மருத்துவ கல்லூரியில் படித்த அருண்குமார் மற்றும் சுபாத் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு மருத்துவ படிப்பை […]
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முதலில் ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும் பின் இபிஸுக்கு சாதகமாக வந்தது. அதோடு அதிமுக கட்சி அலுவலகத்தின் சாவியையும் எடப்பாடியிடம் […]
அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும், அதன் பின் இபிஎஸ்க்கு சாதகமா-க வந்தது. இதனால் ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பொதுக்குழு தொடர்பான வழக்கை தசரா பண்டிகைக்கு பிறகு விசாரிக்கலாம் என்று கூறினார்கள். அதற்கு ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி […]
சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. அதோடு சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பான அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் நீதிமன்றத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வனத்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில் ஆனைமலை மற்றும் முதுமலை வனப்பகுதியில் உள்ள […]
சென்னை சேர்ந்த அருண் முத்துவேல் என்பவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்ப திருத்த சட்டம் போன்றவைகள் ஒரு தலைப்பட்சமாக இருப்பதுடன், வேறுபாடு களையும் உருவாக்குகிறது. இந்த சட்டங்கள் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்கும், அந்தரங்க உரிமைகளுக்கும் எதிராக இருக்கிறது. அதோடு சமத்துவ உரிமை மற்றும் தனிமனித உரிமைக்கும் எதிராக இருக்கிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு […]
கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் தனியார் பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாணவியின் தாயார் செல்வி டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த தொடர்பான மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் செல்வி தரப்பில் வழக்கறிஞர் வெங்கடரமணி ஆஜரானார். அவர் நீதிபதிகளிடம் ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை […]
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பின் 4 முறை அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டது. இருப்பினும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கவில்லை. இதனால் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது அகவிலைப்படியை வழங்காததால் 86,000 ஓய்வூதியதாரர்களும், 20,000 […]
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது நிதி நெருக்கடியின் காரணமாக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். அதற்கு நீதிபதி நிதி நெருக்கடியை காரணமாக கூறும் அரசு சமீபத்தில் அகவிலை படியை உயர்த்தியது எதற்காக என்று கேள்வி எழுப்பினார். அதன் பிறகு வருகிற நவம்பர் மாதம் முதல் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட […]
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையை கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பொதுவாக பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மத்தியில் எவ்வித பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காக தான் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சீருடையானது ஒவ்வொரு பள்ளிகளை பொறுத்து மாறுபடும். இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணியக்கூடாது என்று கூறப்பட்டது ஒரு மத கலவரமாகவே மாறிய […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் கடந்த 2016-17 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்த போது அந்த வருடத்திற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்தை 91 ஆயிரத்து 890 ரூபாய் என குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீடு தொகையை வருமானவரித்துறை நடிகர் விஜய் வீட்டில் 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது புலி படத்திற்காக பெற்ற 15 கோடி ரூபாயை கணக்கில் காட்டாதது […]
ஜெய்பீம் படத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்தத் திரைப்படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தினை அவமதிக்கும் விதமாக காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழும்பியதால் குறிப்பிட்ட அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு […]