தான் செல்லமாக வளர்த்த கோழிகளை தனது தந்தை இறைச்சி கடைக்கு கொண்டு சென்று விற்பதை தாங்கிக் கொள்ளாது சிறுவன் கதறி அழுத வீடியோ வைரல் ஆகி வருகின்றது. சிக்கிம்மை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கோழி இறைச்சி கடைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்கப்படும் என்பதை உணர்ந்த அந்த சிறுவன் கோழிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கதறி அழுதுள்ளார். http://https://www.facebook.com/watch/?v=306510041184164 அதை கேட்காத அவரது தந்தை கோழிகளை எடுத்துச் […]
Tag: கோழிகள்
கோழி பண்ணையில் உள்ள தண்ணீர் டேங்கில் விஷம் கலந்த தண்ணீரை சுமார் 6 ஆயிரம் கோழிகள் குடித்ததால் இறந்தது. கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை அருகே வடக்குபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர் செண்பகராமன்புதூர் அருகே கோழி கடை வைத்து நடத்தி வருகிறார். மொத்தமாக கோழிகளை குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு தண்ணீர் அருந்துவதற்காகதண்ணீர் வைத்துள்ளார். ஆனால் தண்ணீரில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடரை மர்மநபர்கள் யாரோ […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு கோழி தாயாக மாறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில் ஜெகன் என்பவரது வீட்டில் ஐந்து குட்டிகளை ஈன்ற நாய் பிரசவத்திற்கு பிறகு பத்து நாட்களில் இறந்துவிட்டது. கண்களை கூட திறக்காத நாய் குட்டிகளை அதே வீட்டில் இருக்கும் கோழி அரவணைத்து பாதுகாப்பதுடன் மற்ற விலங்குகள் நாய்க்குட்டிகளை நெருங்க விடாமல் விரட்டி அடிக்கின்றது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவில் இருந்து வரும் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக […]
பறவை காய்ச்சல் எதிரொலியாக தென் கொரியாவில் 3.95 லட்சம் உயிர்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் பறவை காய்ச்சல் ஏற்பட்டது. எச்5என்8 புளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 2018 ஆம் தேதி முதல் பறவைக்காய்ச்சல் ஆக இது அறியப்பட்டது. இந்த சூழலில் தென் கொரியா நாட்டின் தென் மேற்கே அமைந்த ஜோன் புக் மாகாணத்தில் வாத்து பண்ணை ஒன்றில் இந்த ஆண்டில் முதன்முறையாக எச்5என்8 புளூ […]
கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோழிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் கிழக்கு மாநிலதிலுள்ள ரோஸ்டாக் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு H5N 8 வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பண்ணையில் உள்ள சுமார் 4500 கோழிகளை கொல்ல வேண்டியிருக்கும். மேலும் பல இடங்களில் இந்த கோழிப்பண்ணை இருப்பதால் மொத்தம் 70 ஆயிரம் கோழிகளை கொல்ல நேரிடும் என்று தெரிவித்துள்ளனர். கோழிகளுக்கு நோய் பரவலை எதிர்த்துப் போராடவும் […]
கோழிகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான கோழிகள் கொல்லப்பட இருக்கின்றன. பிரிட்டனில் Cheshire என்ற இடத்தில் கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. அக்கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், சுமார் 13,500 கோழிகள் கொல்லப்பட இருப்பதாக கோழிப்பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கென்ட்டில் பறவைக்காய்ச்சல் தொடங்கியதால் நூற்றுக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் ஆய்வக பரிசோதனையில் ஐரோப்பாவில் பரவிய பயங்கர வைரஸுடன் தொடர்புடைய வைரஸ் தான் தற்போது கோழிகளை தாக்கியுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்ட […]