சுனாமி காலகட்டத்திற்கு பின் அடிக்கடி கடல் நீர் உள்வாங்குவதும் சீற்றம் அதிகரிப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு நைனாம் வலப்பு அருகே உள்ளது கோத்தி கடற்கரை பல சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கடல் நீர் உள்வாங்கி இருப்பதை கண்டு கடற்கரைக்கு வந்த மக்கள் மிகவும் அதிர்ச்சடைந்துள்ளனர். சுமார் 50 மீட்டருக்கு கடல் நீர் உள்வாங்கியுள்ளது. இதனை பார்த்த பலரும் சுனாமி அறிகுறியாக இருக்கலாம் என பயமடைந்துள்ளனர் […]
Tag: கோழிக்கோடு
கோழிக்கோட்டில் இருந்து கண்ணூர் செல்லும் பயணிகள் பல ஆண்டுகளாக இந்த ரயிலை நம்பி உள்ளனர். கண்ணூர்-எடக்காடு பிரிவில் உள்ள தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு வடகராவில் மெமு சேவை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு பயணிகள் இல்லாமல் இரவு தாமதமாக கண்ணூருக்கு வரும் ரயில் காலை 6.20 மணிக்கு கோவைக்கு திரும்பும். தற்போது ஆகஸ்ட் 20ம் தேதி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று வேலை […]
விஜய் பாபு என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணிபுரிகிறார். ஆந்திரப் பிரதேசம், காளத்தியில் பிறந்த இவர் 80-களின் முற்பகுதியில் மிகவும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் இயங்கிவந்தார். இவர் ஃபிரைடே பிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரபலமான பல படங்களை தயாரித்துள்ளார். இவ்வாறு, இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆவார். இந்நிலையில் இவர் மீது பலாத்கார வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோழிக்கோடு […]
காதலியை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. கோழிக்கோடு மாவட்டம் திக்கோடி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கிருஷ்ணபிரியா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, அவர் மீதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இவர்கள் இருவரது […]
இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ஏடிஎம் கார்டை திருடி பணம் எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோழிக்கோட்டில் தங்கல் சாலை சாப்பாவில் அரபான் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் மாதோட்டத்தை சேர்ந்த சிறுமியிடம் பழகியுள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளைஞன் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியின் தாயுடன் பேசி விட்டு அங்கிருந்து ஏடிஎம் அட்டையை எடுத்து வந்துள்ளார். ஏடிஎம் வைக்கப்பட்டிருக்கும் கவருக்குள் ஏடிஎம் அட்டையின் பின் என்னும் இருந்ததால் அவருக்கு […]
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கட்டுமான பணியின்போது கட்டடம் சரிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரும், மற்றொருவரும் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..
கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான காரணம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான அறிக்கையை விமான விபத்து விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் […]
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இளம்பெண்ணுக்கு மது கொடுத்து நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு அருகிலுள்ள அந்தோளி என்று பகுதியில் வசித்து வரும் அஜ்நாஸ் மற்றும் அவருடைய நண்பர் பகத். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களின் மற்ற இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கோழிக்கோட்டில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி வந்துள்ளனர். பின்னர் அஜ்நாஸ்க்கும் கொல்லத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பழக்கம் […]
கோழிக்கோட்டில் இருந்து சென்ற விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோழிக்கோட்டில் இருந்து இன்று காலை தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள குவைத் நாட்டிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு சென்றது. புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே விமானத்தின் சரக்குப் பெட்டக பகுதியில் தீ பிடிக்கும் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. அதிர்ச்சியடைந்த விமான ஓட்டுனர் விமானத்தை சிறிது நேரத்திலேயே கோழி கோட்டுக்கு திருப்பியுள்ளார். விமானம் திருப்பப்பட்ட […]
சென்னையிலிருந்து புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஒருவர் வெடி பொருட்களை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. அந்த ரயிலில் வெடிபொருள்கள் கொண்டு செல்வதாக பாலக்காடு ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கேரள மாநிலம் பாலக்காடு ரயில் நிலையத்தை அந்த ரயில் கடந்து சென்றதை போலீசார் அறிந்தனர்.பிறகு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் கோழிக்கோடு ரயில் நிலையம் […]
திருமணம் முடிந்து ஆறு மாதங்களில் மனைவியை கொடூரமாக கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டை சார்ந்தவர் ஜாஹீர் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணத்தால் சொந்த ஊர் திரும்பிய ஜாகிர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததில் இருந்து மனைவியின் மீது சந்தேகம் கொண்ட இவர் இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார். இரு தினங்களுக்கு முன் அதிக கோபம் கொண்ட […]
பேஸ்புக் காதலனை பார்க்க கேரளாவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்த பள்ளி மாணவியை காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே முக்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஃபேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த தரணி என்பவருடன் பேசி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பித்த நிலையில் தரணியை பார்ப்பதற்காக தனது நண்பர் விபின் […]
கேரளாவில் விமான விபத்து நடைபெற்ற கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூட கோரி கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தில் துபாய்யில் இருந்து கேரளா சென்ற விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, ஓடுதளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள, விமான விபத்து விசாரணை முகமே என்ற 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. […]
கோழிக்கோடு விமான நிலையத்தில் அகலமான விமானங்களை இயக்க இந்த பருவமழை காலத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. துபாயிலிருந்து சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அன்று இரவு கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா சிறப்பு விமானம், ஓடு பாதையிலிருந்து தடம் மாறி தாண்டிச் சென்று விபத்துக்குள்ளாகியது. இதில் இரு விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, கோழிக்கோடு வருவதற்கு அகலமான அமைப்பு கொண்ட மிகப்பெரிய விமானங்களை இந்த பருவமழை காலத்தில் இயக்குவதற்கு மத்திய விமானப் போக்குவரத்து இயக்கம் தடைவிதித்துள்ளது. வருடம் தோறும் […]
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த கோர விபத்துக்கு ஓடுதளத்தில் விமானத்தை தரையிறக்கவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. துபாயில் இருந்து கோழிக்கோட்டை அடுத்த கரிப்பூர் விமான நிலையத்திற்கு 190 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுதளம் 28 தரையிறக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது பெய்த கனமழையால் ஓடுதளம் 28 யை விமானியல் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இதையடுத்து உடனடியாக ஓடுதளம் 10 தரையிறக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஓடுதளம் 10 தரையிறக்க விமானம் திருப்பப்பட்ட […]
டேபிள் டாப் எனப்படும் ஆபத்தான ஓடுபாதையில் விமானங்களை இயக்குவது விமானிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா சிறப்பு விமானம் ஒன்று நேற்று தரையிறங்கும் போது நேரிட்ட விபத்தில் விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். கோழிக்கோடு மாவட்டத்தின் மேற்கே அரபிக்கடலும் கிழக்கே மலைகளும் அமைந்துள்ளன. கரிப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் டேபிள்டாப் ஓடுபாதை அருகில் வீடுகளும், கட்டிடங்களும் அமைந்துள்ளன. எனவே இந்த விமான நிலையத்தில் […]
கேரளா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை மத்திய வான்வழிபோக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் புரி பார்வையிட்டார். அதற்குப் பிறகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 12 வயது குறைந்தவர்களாக இருந்தால் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் […]
கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள விமான விபத்தில் டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டர் என்று சொல்லப்படும் முக்கிய கருவிகள் ( கருப்பு பெட்டி ) கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விமான போக்குவரத்து துறையின் இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் விமான விபத்து நடைபெற்ற இடத்தில் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த போது நேற்று இரவு நேரம் என்பதால் தேட முடியாத நிலையில் தற்போது […]
நேற்று கேரள கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விமானி உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது உயிர் இழந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விமானத்தில் பயணம் செய்து, செய்து சிகிச்சை பெற்று வரும் […]
நள்ளிரவில் கழிப்பறைக்கு சென்ற இளம்பெண் முக்காடு போட்ட மர்ம உருவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பேசும் திறனை இழந்துள்ளார் கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அஞ்சு என்பவர் ராஜீவ்காந்தி காலனியில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு அஞ்சு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது நள்ளிரவு சமயத்தில் கழிப்பறையில் தண்ணீர் சிந்தும் சத்தம் கேட்டு சென்று பார்த்துள்ளார். அப்பொழுது வீட்டின் அருகே இருக்கும் கல்லூரி சுவரின் அருகில் முக்காடு போட்ட கருப்பு மனிதன் ஒருவன் நின்றுகொண்டு அஞ்சு முறைத்துப் […]
ஊரடங்கையொட்டி வெறிச்சோடி காணப்படும் கேரளா சாலையில் மலபார் புனுகுப் பூனை ஒன்று சுதந்திரமாக சுற்றித்திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து, நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 27 மாநிலங்கள் […]