இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் தற்போது 6 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ஒன்றிய அரசு அனுமதியுடன் தடுப்பூசி வழங்கப்பட்டது. […]
Tag: கோவாக்சின் தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு சிலருக்கு காய்ச்சல் அல்லது உடல் வலி ஏற்படுகிறது. அது போன்றவர்களுக்கு பாராசிட்டமால் உள்ளிட்ட வலி நிவாரணி மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பாராசிட்டமால் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மற்ற கொரோனா தடுப்பூசிகளை போட்ட பிறகு பாராசிட்டமால் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு தேவையில்லை என்று அதை தயாரிக்கும் பாரத் பயோடெக் […]
ஒமைக்ரான் ஒருபுறம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், சிறார்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 2007 அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே சிறார்களுக்கு செலுத்தப்படும். ஜனவரி 1 முதல் கோவின் இணையதளத்தில் […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியைப் உலக சுகாதார அமைப்பு தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சேர்த்து உள்ள நிலையில், இங்கிலாந்து நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சினை சேர்த்துள்ளது. உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று கோவாக்சின், சினோபார்ம், சினோவாக், பீஜிங் ஆகிய தடுப்பூசிகளை சேர்த்துக் கொள்வதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. மேலும் 22-ஆம் நாள் முதல் அங்கீகரிக்கப்படுவதாகும் […]
2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் வல்லுநர் குழு ஒப்புதல்அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசு இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் இயங்குகின்றன.. எனவே சிறார்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பணியை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது.. இந்த நிலையில் 2 முதல் […]
கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி பாரத் பையோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசிக்கு இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை. இதனால் பாரத் பயோடெக் நிறுவனம் அவசரகால தேவைக்கு மட்டும் கோவேக்சினை பயன்படுத்த […]
கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு சர்வதேச அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் என்னும் நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனம் தான் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. மேலும் அது தடுப்பூசி தொடர்பான ஒட்டுமொத்த செய்திகளையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பியுள்ளது. அதாவது கோவாக்சின் தடுப்பூசி குறித்த அனைத்து செய்திகளையும் அனுப்பியுள்ளது. அது என்னவென்றால் தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்கள், செயல்திறன் மற்றும் மூன்று கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் […]
டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி. இதை பாரத் பயோடெக் என்ற நிறுவனமும், ஐ சி எம் ஆர் இணைந்து தயாரித்தது. அனைத்து வகை கொரோனா வைரஸ் ஒரு மாற்றத்திற்கு எதிராக இந்த தடுப்பூசி எந்த அளவுக்கு வீரியமாக செயல்படும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் அறிகுறிகளுடன் கூடிய கொரோனா […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
பைஸர் தடுப்பூசிக்கு பதிலாக இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை தேர்வு செய்த விவகாரத்தில் பிரேசில் ஜனாதிபதி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது . பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது . இந்த தடுப்பூசி விவகாரத்தில் பிரேசில் ஜனாதிபதி ஜேர் பொல்சோனாரோ ஊழல் செய்திருப்பதாக அரசாங்கத்திற்கு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர்களும்,சகோதரர்களுமான லூயிஸ் ரிகார்டோ மிராண்டா, லூயிஸ் மிராண்டா இருவருக்கும் சந்தேகம் எழுந்ததால் விசாரணை ஆணையத்திற்கு ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளனர்.அதில் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது ஒரு சில மாநிலங்களில் […]
கொரோனாவிற்கு எதிராக போராட அனைவரும் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்த வழிமுறை என அமெரிக்க மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பாஸி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் உள்ள தலைமை மருத்து ஆலோசகரும், பெருந்தொற்று நிபுணருமான டாக்டர் ஆண்டனி பாஸி கடந்த செவ்வாய்கிழமை அன்று வீடியோகால் மூலம் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது இந்தியா தயாரிக்கப்படும் கோவாக்சின்ன் தடுப்பூசியானது 617 உருமாறிய கொரோனா வைரஸை செயலிழக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் பிரபலங்கள், […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]