Co-WIN இணையதளத்திலிருந்து ஏராளமான மக்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அப்படி எந்த ஒரு தனிநபரின் தகவலும் Co-WIN இணையதளத்திலிருந்து கசியவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவாகக் கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தடுப்பூசி இயக்கத்தை நிர்வகிக்க பயன்படுத்தப்படும் Co-WIN செயலியிலிருந்து தகவல்கள் கசிந்தன என்று வெளியான செய்திகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை நிராகரித்து விளக்கமளித்துள்ளது. அதில் Co-WIN இணையதளத்தில் சேமிக்கப்பட்ட தனிநபரின் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்று […]
Tag: கோவின்
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வாட்ஸ்அப் மூலம் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கி வைத்துள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பருகிவந்தால் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது கட்டுக்குள் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் கோவின் என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்தும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் […]
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. மக்கள் கோவின் இணையதளத்தின் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள வெளிநாட்டவர்களும் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை பெறலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பாஸ்போர்ட்டை […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னதாக அரசின் அதிகாரபூர்வ இணையதளமான கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்தால் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். இப்படி முன்பதிவு செய்பவர்கள் தவறுதலாக பலதடவை முயற்சி செய்கின்றனர். இந்நிலையில் கோவின் இணையதளத்தில் 24 மணி நேரத்தில் தடுப்பூசிக்கு பதிவு செய்ய ஆயிரம் முறைக்கு மேல் தேடுவோர், ஐந்து முறைக்கு மேல் OTP-யை பெறுவோரின் பயனாளர் கணக்கு ஒரு நாளுக்கு முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவின் தளத்துக்குள் […]
கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான cowin இணையதளம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் புதிதாக 9 மொழிகளில் கொண்டுவரப்பட்டது. இதில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் கடும் கண்டனம் எழுந்தது. இருப்பினும் புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது தமிழ் வழியில் அந்த இணையதளத்தை பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே உடனே சரிசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்துமாறு சுகாதாரத் துறைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சியினரின் […]