Categories
மாநில செய்திகள்

கோவில் திருவிழாவில்….. தனிநபருக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது…… அதிரடி உத்தரவு….!!!!

கோயில் திருவிழாவில் அனைத்து தரப்பினரையும் ஒரே மாதிரியாக நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் இலுப்பகுடியை சேர்ந்த வேலு என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்று தொடுத்தார். அதில் குறிப்பிட்ட சமூகத்தினரை தவிர்த்து ஐயனார் கோயில் திருவிழா நடத்தப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில், திருவிழாவில் தனி நபருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்றும் அனைத்து சமூகத்தினரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
ஆன்மிகம்

“வெங்கடகிரியில் போலேரம்மன் திருவிழா” திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

வெங்கடகிரியில் நடைபெற்ற போலேரம்மன் திருவிழாவை முன்னிட்டு காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இந்நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி, திருப்பதி தொகுதி எம்.பி. டாக்டர் குருமூர்த்தி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு உள்பட பலர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அப்போது சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கூறியதாவது, அடுத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் வெங்கடகிரி போலேரம்மன், சூலூர்பேட்டை செங்காளம்மன், திருப்பதியில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

இனி கோவில் திருவிழா நடத்த…. போலீஸ் அனுமதி தேவையில்லை…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், “வலையப்பட்டி பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா பல ஆண்டுகளாக சுமுகமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவை ஆகஸ்ட் 19, 20இல் நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி கோரினோம். இதுவரை பதில் இல்லை. எனவே, திருவிழா நடத்த அனுமதி வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ” கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கொதிக்கும் எண்ணெயில் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு சிறப்பு வழிபாடு”…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…!!!!!!

போச்சம்பள்ளி அருகே சின்னம்மாள் கோவிலில் கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜம்புகுட்டப்பட்டி அருகே இருக்கும் வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் சென்னம்மாள் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது. இதில் நேற்று முக்கிய நிகழ்வாக கொதிக்கும் எண்ணெயில் அதிரசம் சுட்டு கைகளில் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொதிக்கும் எண்ணெயிலிருந்து அதிரசங்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மாரியம்மன் கோயில் திருவிழா”…. பக்தியுடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. இந்த கோயில் திருவிழா 8- ஆம் தேதி துவங்கியது. நேற்று முன் தினம் காலை அனுமந்தராயன்கோட்டை அருகேயுள்ள குடகனாற்று கரைக்கு பக்தர்கள் சென்றனர். இதையடுத்து பக்தர்கள் அம்மனை வழிபட்டு, அங்கு இருந்து பால் குடங்களை சுமந்தவாறு ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அதன்பின் குடங்களில் கொண்டுவந்த பாலை அம்மனுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். அத்துடன் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அம்மாடியோ!…. தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு….. கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள எட்டிக்குளத்துப்பட்டியில் சின்னதண்ணன், கசுவம்மாள், மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோவிலில் திருவிழா நடத்த விழா குழுவினர் முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று முன் தினம் கோவிலில் விழா தொடங்கியது. அப்போது கோவிலில் சன்னதியில் இருந்து மின்னொளி ரத்தத்தில் சாமிகள் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது பக்தர்களின் சேர்வையாட்டம், கரகாட்டம், வானவேடிக்கை உள்ளிட்டவை […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலை தாக்கிய மின்னல்…. பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் பர்கா என்ற கிராமத்தில் உள்ள பழமையான ராஜ்வாடி கோவிலில் சவான் சோமவர் என்ற சிறப்பு பூஜைக்காக ஏராளமான பக்தர்கள் கூடினர். அங்கே இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கோவிலில் மின்னல் தாக்கிய நிலையில் கோவிலில் இருந்த பக்தர்கள் பலர் காயமடைந்தனர். உடனடியாக உள்ளூர் வாசிகள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்தில் சுமார் 25 பேர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா…. 3000 ஆடுகள் பலியிட்டு வழிபாடு….!!!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கண்மாயின் கரையோரத்தில் கோட்டை கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதன்படி கருப்பண்ணசாமி கோவில் ஆடி மாத திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு இரவு 7 மணி முதல் கட்ட பூஜையுடன் திருவிழா தொடங்கியுள்ளது. அதன் பின் ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில்  பக்தர்கள் நேர்த்திக்கடனாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கோவில் திருவிழாவின் போது இருதரப்பினர் இடையே தகராறு”…. 12 பேர் காயம்….!!!!!

கோவில் விழாவின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதில் 12 பேர் காயமடைந்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் வாலாந்தூரில் அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 ஆம் நாளான நேற்று முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்தது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டார்கள். இதில் 12 பேர் படுகாயம் அடைந்ததால் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தார்கள். பின் படுதாயம் அடைந்த மலர்விழி, சங்கிலி, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆத்தாளூரில் வீரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழா…. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்…!!!!!

ஆத்தாளூரில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆத்தாளூரில் இருக்கும் வீரகாளியம்மன் கோவில் பல சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த நிலையில் சென்ற ஐந்தாம் தேதி கோவில் திருவிழாவானது காப்பு கட்டுதலுடன் தொடங்கிய நிலையில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் மது எடுத்தல் மற்றும் தேரோட்டம் நடந்தது. மாலை 5 மணிக்கு புறப்பட்ட தேர் முக்கிய வீதி வழியாக மாலை 6:30 மணிக்கு மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவிலும் சோகம்…. “மின் கம்பியில் தேர் உரசி 3 பேர் பலி”….. பெரும் அதிர்ச்சி….!!!!

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் நம்பள்ளி மண்டல பகுதியில் தேர் விழா ஒன்று நடைபெற்றது. அப்போது திடீரென உயரே இருந்த மின்கம்பியில் உரசியதில் இந்த சம்பவத்தில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் கெத்தபள்ளி கிராம பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

சீச்சி…. கோவில் திருவிழாவில் நடைபெற்ற அந்த மாதிரி நடன நிகழ்ச்சி…. அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

ஆந்திரப்பிரதேச மாநிலதில் நடைபெற்ற நிர்வாண நிகழ்ச்சி 10 பேரை கைது செய்த காவல் துறையினர். ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தள்ளரேவு பிரதேசத்திற்கு உட்பட்ட உப்பங்கலா கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த 14ஆம் தேதி தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்ற திருவிழாவில் கிராமத்தில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கோவில் திருவிழாவில் நிர்வாண நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கோலாகலமாக நடந்து முடிந்த மாரியம்மன் கோவில் திருவிழா”… நேர்த்திக்கடன் செய்த ஏராளமான பக்தர்கள்…!!!!

ஆதனகோட்டையிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலின் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆதன கோட்டையில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலில் சென்ற 3ஆம் தேதி தேர் திருவிழாவானது காப்புக்கட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஆதனக்கோட்டை, மடத்து கடை, பழைய ஆதனக்கோட்டை முதலியவற்றிக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தாரை தப்பட்டை முழங்க பக்தர்கள் கரும்பு தொட்டில் கட்டியும், பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதை தொடர்ந்து இரவு வீதி உலாவானது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு நேர்த்திக்கடனா…. “சேறு பூசி செருப்பால் அடித்த உறவினர்கள்”…. திருவிழாவில் நடந்த வினோதம்..!!

அய்யலூர் அருகில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் உடலில் சேறு பூசி செருப்பால் அடித்தும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே  தீத்தாகிழவனூர் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில்   மாரியம்மன், பகவதி அம்மன், காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இந்தக் கோவில்களில் ஒவ்வொரு வருடமும் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 27- ம் தேதி அன்று தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம், பூக்குழி இறங்குதல், தீச்சட்டி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழா… “ஈரோட்டிலிருந்து பண்ணாரி, பழனிக்கு சிறப்பு பேருந்துகள்”… கலெக்டர் அறிவிப்பு…!!

ஈரோட்டிலிருந்து பண்ணாரி, பழனிக்கு சிறப்பு பேருந்துகள் கோவில் திருவிழாவை முன்னிட்டு இயக்கப்பட உள்ளது என்று கலெக்டர் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பண்ணாரி, பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று  மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிஅறிக்கை வெளிட்டுள்ளார். அதில், பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் மறுபூஜை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலம் சார்பாக சிறப்பு பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக வருகின்ற 21 ஆம் தேதி, 22ஆம் தேதி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா…. எங்கும் இல்லாத சிறப்பு நேர்த்திகடன்…. கண்டுகளிக்கும் பக்தர்கள்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் வைக்கும் திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான கமுதி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தி சிம்மம், அன்னப்பறவை, ரிஷபம், பூதவாகனம், காமதேனு, யானை, வெள்ளிக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றும். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முத்தாலம்மன் கோவில் திருவிழா…. திரண்டு வந்த பக்தர்கள் கூட்டம்….!!

முத்தாலம்மன் கோவில் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் கடந்த 7-தேதி அன்று தொடங்கி 11-ஆம் தேதி சக்தி கரக ஊர்வலம், சாகை வார்த்தல் நிகழ்ச்சி, செல்லியம்மன் குதிரை புறப்பாடு, இரவு நேரத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா 12-ஆம் தேதி மாலை மேளக்கச்சேரியும், இரவில் முத்துப் பல்லக்கில் அம்மன் வீதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அக்.7,11,12,13,14 ஆகிய தேதிகளில் கட்டுப்பாடு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7, 11, 12, 13, 14ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்யலாம். ஆனால் தங்குவதற்கு அனுமதி இல்லை. மேலும் பக்தர்கள் தேங்காய், பூ, பழம் என எந்த பொருட்களையும் எடுத்து வர அனுமதி இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அதேபோன்று கோவிலுக்கு வெளிப்புறம் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை. எனவே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவிலுக்கு சென்ற பெண்கள்… மர்ம நபர்களின் கைவரிசை… போலீசார் தீவிர விசாரணை…!!

கோவில் திருவிழாவிற்கு சென்ற 2 பேரின் தங்க சங்கிலி காணமல் போனதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள கன்னிராஜபுரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவிழாவை பார்ப்பதற்காக கன்னிராஜபுரம் கிழக்கு தெருவில் வசித்து வரும் பொன்னுதுரை என்ற மூதாட்டி அவரது பேத்தியுடன் சென்றுள்ளார். அப்போது சிறுமி கழுத்தில் அணிந்திருந்த 3 1/2 பவுன் தங்க சங்கிலி கூட்டநெரிசலில் திடீரென மாயமாகியுள்ளது. இதுகுறித்து மூதாட்டி சாயல்குடி காவல்நிலையத்தில் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

காற்றில் பறந்த சமூக இடைவெளி… கொரோனா விதிமுறையை மீறி கோவில் விழா… 17 பேர் மீது வழக்கு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் விதிமுறைகளை மீறி கோவில் திருவிழா நடத்திய கோவில் நிர்வாகிகள் 17 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் ரட்லாம் மாவட்டத்தில் பார்போட்னா என்ற கிராமத்தில் கட்டுப்பாட்டு விதிகளை மீறி காசி யாத்திரை நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலசங்களில் புனித நீர் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதில் சமூக இடைவெளி எதுவும் இல்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைதொடர்ந்து காவல்துறையினர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று எதிரொலியாக… கோவில் திருவிழாக்களுக்கு தடை… பக்தர்கள் ஏமாற்றம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவிலில் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒழுகைமங்கலம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 4-ஆம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் கோவில் நிர்வாகத்தினர் மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். மேலும் நடைபெறுவதாக இருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

108 வலம்புரி சங்காபிஷேகம்….. கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…. மகிழ்ச்சியில் பொது மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் அய்யனாரப்பன் சாமி கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள  ஜலகண்டாபுரம் பகுதியில் அய்யனாரப்பன் சாமி கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்று அதிலிருந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அய்யனாரப்பன் சாமிக்கு சிறப்பு பூஜை, பல்வேறு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அய்யனாரப்பனுக்கு 108  வலம்புரி சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் திருவிழாவில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தேரில் பவனி வந்த புனித செபஸ்தியார்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா… மகிழ்ச்சியில் பொது மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் தினத்திற்கு மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 9ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது தேரில் புனித செபஸ்தியார் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு வழியா நேர்த்திக்கடன் செலுத்தியாச்சு…. 108 பாலாபிஷேகத்தில் அம்மன்… கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…!!

சேலம் மாவட்டத்தில் சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. அந்த கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சின்னம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவில் வளாகத்தை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் அம்மனுக்கு 108 பாலாபிஷேகம் செய்து, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து பக்தர்கள் பூங்கரகம் எடுத்து, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேரில் காட்சியளித்த தூய செல்வநாயகி…. சிறப்பு நாடகமாக இயேசு வாழ்க்கை வரலாறு… கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…!!

சேலம் மாவட்டத்தில் வெள்ளாண்டிவலக தூய செல்வநாயகி ஆலயம் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் வெள்ளாண்டிவலசு தூய செல்வநாயகி ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த ஒரு வாரமாக சிறப்பு திருப்பலி நடைபெற்றுள்ளது. அங்கு நடைபெற்ற திருப்பலியில் பங்கு தந்தை பிரான்சிஸ் ஆசைத்தம்பி தலைமையில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு நாடகமாக நடைபெற்றுள்ளது. இதனையடுத்து செபஸ்தியர், அருளப்பர், உலக மீட்பர், தூய செல்வநாயகி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு தேரில் வைக்கப்பட்டு முக்கிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

21 தீச்சட்டி எடுத்த கோவில் நிர்வாகி… கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூங்காவன முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே அருள்சக்திபுரத்தில் பிரசித்தி பெற்ற பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசக்தி மாசாணியம்மன் சிலை 41 அடி நீளத்தில் சயன கோலத்தில் உள்ளது. கடந்த 28-ஆம் தேதி இந்த கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு 21 தீச்சட்டி, அலங்கார ரதம் ஆகியவற்றை கோவில் நிர்வாகி நாகராணி அம்மையார் எடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்போதான் நிம்மதியா இருக்கு… நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்… கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…!!

நல்லங்கியூர் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நல்லங்கியூர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 18-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியுள்ளது. இதனையடுத்து  தினமும் அம்மனுக்கு  பல்வேறு பொருட்களால் சிறப்பு பூஜைகள் செய்து விரதம் இருந்தும் பக்தர்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து அம்மனுக்கு தீர்த்தக்குடம்  எடுத்து வரும்போது  பகதர்கள் சிலர் எலுமிச்சை அலகு, வேல் அலகு குத்தி அங்காளம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக நல்லங்கியூர் மாரியம்மன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உருளு தண்டம் போட்டு நேர்த்திக்கடன்…. மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர்… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சேலம் மாவட்டத்தில் மாரியம்மன்- காளியம்மன் கோவில்  திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவிலில் திருவிழா நடைப்பெற்றுள்ளது. அப்போது திருவிழாவில் பக்தர்கள் உருளு தண்டம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இதனையடுத்து அம்மன் அழைப்பு, பொங்கல் வைத்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான  தேரோட்டமானது  காடையாம்பட்டி பிரிவு ரோட்டிலிருந்து ஆரம்பித்து இளம்பிள்ளை நகரை சுற்றி மீண்டும் கோவிலை வந்தடைந்துள்ளது. இந்த தேரோட்டதில் தேரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நேர்த்திக்கடன்ன செலுத்தியாச்சு”… கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சேலம் மாவட்டத்தில அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை பகுதியில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. அந்த கோவிலில் கடந்த 16 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் தினமும்  அம்மனுக்கு சிறப்பு பொருட்களால்  அபிஷேகம் செய்யப்பட்டதுடன், இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றுள்ளது. இதனையடுத்து நேற்று சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து காளியம்மன் கோவிலில் தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…. சிறப்பு வேடத்தில் பக்தர்கள்…. ஊர்வலத்தில் கலந்து கொண்ட பொது மக்கள்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி அம்மன் மற்றும் புத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி சந்தைப்பேட்டை பகுதியில் செல்லாண்டி அம்மன் மற்றும் புத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி ஒரு வாரமாக பக்தர்கள் விரதம் இருந்து நேற்று திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. அந்த விழாவின் போது பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் பூங்கரகம் எடுத்து  வி.என் பாளையத்தில் தொடங்கி தேர் வீதி மற்றும் சந்தைபேட்டை வழியாக கோவிலை வந்தடைந்துள்ளது. மேலும்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் அனுமதியின்றி நடத்தப்பட்டவை… ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு… 10 பேர் படுகாயம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் 10 பேருக்கு மாடு முட்டியதில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெடுமரத்தில் சிறப்பு வாய்ந்த மலையரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள கிராம மக்கள் இரு தரப்பினர் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது மஞ்சுவிரட்டிற்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க இயலாது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைப்பெற்ற திருவிழா… புஷ்ப பல்லக்கில் அம்மன் காட்சி…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்..!!

சேலம் மாவட்டத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமிபட்டியில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது அந்தக் கோவிலில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த  16 ஆம் தேதி கால் நாட்டத்துடன்  தொடங்கியது. மேலும் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று எராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர். மேலும் தொடர்ந்து ஆடு கோழிகளை பலி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…. பிரமாண்டமாக பவனி வந்த அம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

குண்டவெளி கிராமத்தில்  செல்லியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் குண்டவெளி கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஐந்தாம் திருவிழாவையொட்டி சந்தனம், பால், இளநீர், மஞ்சள், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவில் பிரகாரத்திலிருந்து செல்லியம்மன், விநாயகர், மாரியம்மன், காத்தவராயன் ஆகிய சுவாமிகள் வீதி உலாவாக கன்னிக்கோவில் வழியாக குண்டவெளி முக்கிய வீதிகளில் சென்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன் … உச்ச கட்ட மகிழ்ச்சியில் பொது மக்கள்..!!

வடகாடு பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில்  திருவிழா தேரோட்டத்துடன் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியிலிருக்கும் வாணக்கன் காட்டில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவில் பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் ஒன்பதாவது நாளான நேற்று தேரில் முத்துமாரியம்மன்னை அலங்காரம் செய்து தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேரோட்டத்தில் எந்தவித பிரச்னையும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நத்தம் வேட்டைக்காரன் சாமி கோவில்… கோலாகலமாக நடைபெற்ற திருவிழா… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் சாமி கோவிலில் கடந்த 20-ஆம் தேதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள சேர்வீடு கிராமத்தில் சிறப்பு வாய்ந்த வேட்டைக்காரன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 20-ஆம் தேதி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கோவில் விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம, அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. வேட்டைக்காரன் சாமி மற்றும் […]

Categories

Tech |