திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள தாழையூத்து கிராமத்தில் இருந்து இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான அங்காளம்மன், மாரியம்மன், வேலுசமுத்திரம், செங்கழுநீரம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான ரூ.33 லட்சம் மதிப்பிலான 25.95 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அறநிலைய துறையினர் கோவில் நிலங்களை மீட்க முடிவு செய்தனர். அதன்படி அறநிலைத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் அதிகாரி ராமநாதன், தாசில்தார் விஜயலட்சுமி, ஆய்வாளர்கள் […]
Tag: கோவில் நிலங்கள்
கோவில் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள சின்ன நீலாங்கரையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சக்தி முத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் மீன்வளத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது கடந்த 1963-ம் ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. இதேப்போன்று சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலம் கடந்து 2015-ம் ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. இங்கு வட்டார போக்குவரத்து […]
தமிழகத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.2,043 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட நிலங்கள் அந்தந்த கோயில்கள் வசம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளிட்ட ஏழு கோவில்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்களில் அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகள் மூலம் நபர்கள் கொள்ளையடிப்பதாகக் கூறி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இந்த நிலங்களை மீட்டு, கோவில்களின் செயல்பாட்டுக்கு பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு நடவடிக்கை […]
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை தனியார் சிலர் ஆக்கிரமித்து இருக்கின்றனர். அதாவது போலியாக ஆவணங்கள் தயார் செய்து தங்களது பெயருக்கு பத்திரப் பதிவு செய்து, அதனடிப்படையில் விற்பனை செய்வதிலும் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் தனியாரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை, அறநிலையத்துறை முடுக்கி விட்டுள்ளது. அந்த அடிப்படையில் கோவில் நிலங்களின் பட்டாவில் “T” எனும் ஆங்கில எழுத்தை அடையாளமாக குறிப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து மோசடி பத்திரங்களை தடை செய்வதற்க்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. இது குறித்து […]
தமிழகத்தில் குத்தகைக்கு விடப்பட்டுள்ள அனைத்து கோயில் நிலங்களுக்கும் நியாமான வாடகை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குத்தகைக்கு விடப்பட்டுள்ள அனைத்து கோவில் நிலங்களுக்கும் நியாயமான வாடகை மட்டும் நிர்ணயிக்க அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகையை மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தததையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சொந்தமான நிலங்களை ரோவர் கருவியின் மூலம் அளவிடப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சார்பாக கோயில் நிலங்களை விரைந்து அளப்பதற்காக ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைக்கப்பட்டு […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் கோயில்களில் நன்கொடையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றி வைப்புநிதி மூலம் வருவாய் ஈட்ட […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ரூபாய் 500 கோடி மதிப்புள்ள 79 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் இடங்களில் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று […]
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பட்டியலை தயாரித்து கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடமிருந்து பெறவேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும். கோயில்களில் உள்ள சிலைகள் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும். கோவில்களில் வலுவான அறை அமைத்து சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகள், நகைகள் புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளத்தில் வெளியிடவேண்டும். கோவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது […]