புதுக்கோட்டை மாவட்டத்தில் முருகன் கோவிலில் ஊரடங்கால் வைகாசி விசாகம் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகம் வெகு விமரிசையாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு அறிவித்துள்ளதால் வைகாசி விசாகம் திருவிழா நடைபெறவில்லை. இதனால் வழக்கம் போல் முருகன் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றுள்ளது. ஆனால் பக்தர்களின்றி பூஜைகள் செய்ததால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
Tag: கோவில் பூஜை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி வீரமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒணாங்குடி கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் தினமும் அம்மனுக்கு காலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். […]
சேலம் மாவட்டத்தில் கோட்டை பெருமாள் கோவிலில் ராமநவமி பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கோட்டை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ராமநவமி விழாவையொட்டி மூலவர் பெருமாளுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் ராமர், சீதை மற்றும் லட்சமணன் மேலும் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக முகக் கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]