முருகன் கோவிலின் ஊழியரை யானை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 22-ஆம் தேதி எண்ணெய்க்காப்பு திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் தினமும் இரவில் தெய்வானை அம்மாள் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வலம் வருவது வழக்கம். அதைப்போல் நேற்றும் தெய்வானை அம்மாள் இரவில் வலம் வந்தபோது அவர் பின்னால் வந்த யானைக்கு கோவில் ஊழியரான புகழேந்தி என்பவர் […]
Tag: கோவில் யானை
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் வில்வாத்ரிநாதர் கோவிலில் யானை மீது அமர்ந்திருந்த பாகனை யானை தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் கோவில்களில் தினமும் பூஜை வழிபாடு என நடைபெற்றிருக்கும். அங்கு யானைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும். அதேபோன்றுதான் கடந்த வியாழக்கிழமை வில்வாத்ரிநாதர் கோவிலில் நடந்த திருவிழாவின்போது யானை அலங்கரிக்கப்பட்டு அதன் மீது பாகன் ஏறி அமர்ந்து இருந்தார். கோவிலில் திருவிழா என்பதால் மேளதாளங்கள் என்று சத்தம் அதிக அளவில் இருந்தது. இதனால் கோபமடைந்த […]
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானையை பாகன்கள் தாக்கியதால் அவர்களை வனத்துறையினர் கைதுசெய்துள்ளனர். தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாம் கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்து வந்தது. அதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானையை யானைப்பாகன் வினில் குமாரும் அவருடைய உதவியாளர் பிரசாத்யும் இணைந்து தாக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் இரு பாகங்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்தனர். இதனை அடுத்து யானையை ஆய்வு செய்ததில் அதன் உடலில் […]
ஆழ்வார் திருநகரியில் உள்ள கோவிலில் ஆதி நாயகி என்ற யானை தினமும் காபி குடிப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் கடைசி தளமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆதி நாயகி என்ற பெயரில் யானை ஒன்று உள்ளது. அந்த யானையைப் பாகன் ஒருவர் பராமரித்து வருகின்றார். தினமும் காலையில் அந்த யானையை பாகன் நடை பயிற்சிக்கு அழைத்து செல்வார். அவ்வாறே நடைப்பயிற்சிக்கு செல்லும்போது மேல பஜாரில் […]