நம் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துவிட்ட சூழ்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் மக்களிடம் ஆர்வமில்லை. இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தில் 200 மில்லியனுக்கும்(20 கோடி) அதிகமான அளவு கோவாக்சின் தடுப்பூசி கைவசம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசிக்கான தேவை இல்லாததால் கோவாக்சின் உற்பத்தி பல்வேறு மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது. இப்போது சுமார் 50 மில்லியன்(5 கோடி) டோஸ்கள் கோவாக்சின் தடுப்பூசி 2023ம் வருடத்தின் தொடக்கத்தில் காலாவதி ஆகும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்பாக […]
Tag: கோவேக்சின்
அமெரிக்காவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை, மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியானது, இந்தியா போன்ற இருபதுக்கும் அதிகமான நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், உலக சுகாதார மையமும் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. எனினும், தற்போது வரை அமெரிக்கா இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கவில்லை. அந்நாட்டில், கோவேக்சின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் இருந்த சமயத்தில் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, கடந்த நவம்பர் மாதத்தில் இந்த பரிசோதனையை […]
கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது அதிக பலனை தருவதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியும், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் சேர்ந்து உருவாக்கி, இந்தியாவில் உள்ள புனே சீரம் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் கலந்து செலுத்தி கொள்பவர்களுக்கு 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திருப்பது ஆசியாவின் ஹெல்த்கேர் பவுண்டேசன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. […]
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் தடுப்பதற்கு சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் என்.வி.ரமணா பேசியபோது “பாரத் பயோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின், கொரோனா மற்றும் அதன் புதிய திரிபுகளுக்கு எதிராக சிறப்பாக பலன் அளிக்கக்கூடியது என்று தெரிவித்தார். இதனிடையில் கோவாக்சினுக்கு எதிராக ஃபைசர் மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்களும் சில உள்நாட்டினரும் நியாயமற்ற […]
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வருடம் முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. […]