சிறுமியை திருமணம் செய்ததற்கு மகனுக்கு உடந்தையாக இருந்த பெற்றோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார். இவருக்கும் பீளமேடு புதூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் பேருந்தில் பயணம் செய்யும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரவணன் தனியார் நிறுவனம் ஒன்றில், ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில், காதலாக மாறி இருவரும் மொபைல் எண்ணை […]
Tag: கோவை
குடிக்கு அடிமையாகி வேலை செய்ய முடியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூரில் மாவட்டத்தில் உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் அவரால் சரியாக வேலை செய்ய முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனைத்தொடர்ந்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்த கார்த்திக்கேயன், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு […]
பட்டதாரி இளைஞர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கோவை மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(27). இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் . கார்த்திகேயன் கல்லூரியில் படிக்கும் பொழுது சக மாணவி ஒருவரை காதலித்துள்ளார். கடந்த மாதத்திற்கு முன்பு அந்த மாணவி கோவைக்கு சென்று கார்த்திகேயனை சந்தித்து பேசியுள்ளார். மேலும் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர் . இதனிடையே செல்போனில் பேசும் […]
கோவையில் ஏழைகளுக்கு உணவளித்து வந்த சாந்தி கியர்ஸ் நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம் இன்று காலமானார். நம் உலகில் மக்களில் பெரும்பாலான மக்கள் ஒருவேளை உணவுகூட இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு அவதிப்படும் ஏழைகளுக்கு கோவையில் ஐந்து ரூபாய்க்கு டிபன், பத்து ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி வந்தவர் சாந்தி கியர்ஸ் நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம். அவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று 78 வயதுடைய அவர் சிகிச்சை பலனின்றி […]
கையால் மலம் அள்ளுதல் தடை சட்டத்தை அரசு இயற்றி இருந்தாலும் அதை யாரும் பின்பற்றுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையில் தூய்மைப் பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் வெறும் கையால் மனித கழிவுகளை அகற்றும் கொடுமை நடந்து வருகிறது. பொதுவெளியில் மக்கள் முன்னிலையில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட மாநகராட்சி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை 174 பேர் மனிதக் கழிவுகளை அகற்றும் போது […]
கோவையில் கணவன் மனைவிக்கு இடையே நடந்த குடும்ப தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவதை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், கருமலைசெட்டிபாளையம் அஜய் முக்ரிஜி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக மீண்டும் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு […]
கோவையில் வாலிபரின் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் , பீளமேடு கருப்பண்ண கவுண்டர் லே-அவுட்டை பகுதியில் வசித்து வருபவர் வில்சன். 20 வயதுடைய இவர் ந.வ 4 தேதி ஹோப்காலேஜ் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த வாலிபர் திடீரென வில்சனின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.270-ஐ பணத்தை பிடுங்கி கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதில் உஷார் அடைந்த வில்சன் பொதுமக்களின் உதவியுடன் கொள்ளையனை மடக்கி […]
கோவை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்தில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். கோவை, கிணத்துக்கடவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்புக்கு முன் கார் கவிழ்ந்து விழுந்தது. அதில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேர்ந்த நீரஜ் அலி மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் அம்பராம்பாளையம் தர்கா சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில் மலுமிச்சம்பட்டி தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது வாகன […]
மக்களிடம் 50 கோடி மோசம் செய்த தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர். போட்ட பணம் ஒரே ஆண்டில் இரு மடங்காகும் என ஆசை வார்த்தை கூறி மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிய நிதி நிறுவன பங்குதாரர்கள் ஆன கோவையை சேர்ந்த தாய், மகள் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த 52 வயதான மணிகண்டன், ஆன்லைன் மூலமாக கிரீன் கிரஸ்ட் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதில் […]
ஹோட்டல் சாம்பாரில் செத்த எலி கிடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவருடைய தம்பி கார்த்திகேயன் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திவ்யா சம்பவத்தன்று சாப்பிடுவதற்காக அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் ஓட்டலில் ஆப்பம் மற்றும் சாம்பார் பார்சல் வாங்கி உள்ளார். பின்னர் அதை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து இருவரும் சாப்பிட தொடங்கிய போது சாம்பாரில் கருப்பு நிறத்தில் ஏதோ […]
கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் உணவகம் ஒன்றில் சாம்பாரில் எலி செத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். அவருடைய தம்பி கார்த்தி கேயன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திவ்யா நேற்று காலை தனது தம்பிக்கு சாப்பாடு தருவதற்காக அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு தனியார் உணவகத்தில் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், முகநூலில் பழகிய நண்பர் தன்னுடன் தொலைபேசியில் பேசவில்லை எனக் கூறி, பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பொள்ளாச்சி தொழில்பேட்டை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், கணவன் உயிரிழந்த நிலையில், தமது 13வயது மகனுடன் வசித்து வந்தார். புவனேஸ்வரிக்கு, முகநூல் வழியாக பொள்ளாச்சியைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், காஜாமைதீன் புவனேஸ்வரியுடன் […]
கோவையில் தனியார் வங்கி ஒன்றில் இன்ஜினியர் ஒருவர் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கப்பக்கொடை நாடு அடுத்துள்ள நஞ்சநாடு பகுதியில் ஹிந்தேஸ் ஆனந்த் (33) என்பவர் வசித்து வருகிறார். அவர் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கின்ற ஒரு ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவையை அடுத்துள்ள வடவள்ளி அருகே ஓணம் பாளையம் என்ற […]
தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த குரங்குக் கூட்டத்தை மலையடிவார கிராம மக்கள் புலி பொம்மை வைத்து கட்டு படுத்தியுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியை சேர்ந்த மலையடிவார கிராம மக்களின் வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக புகார்கள் எழுந்தது. சிலர் இதனை இடையூராக நினைக்கவில்லை என்றாலும் பொதுமக்கள் பலர் தொடர்ந்து வனத்துறையினரிடம் குரங்குகளைப் பிடிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் புகார்கள் அடிக்கடி வரும் பகுதிகளில் கூண்டு வைத்து வனத்துறையினர் குரங்குகளை பிடித்து […]
இடையர் பாளையத்தில் தாய் இறந்த அதிர்ச்சியில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியில் ராஜன் மற்றும் சிந்து தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் ஆகிய நிலையில், குழந்தை எதுவும் இல்லை. சிந்துவுடன் அவரின் தாய் செல்வி (58) மற்றும் தம்பி இந்தியன் (23) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். சிந்துவின் தாய் செல்வி தனது கணவர் […]
போதையில் இருந்த நபர் அரசு பேருந்தை ஒட்டி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, ஈரோடு கொடுமுடி பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று தீபாவளிக்காக சிறப்பு பஸ்சாக இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கரூரில் இருந்து திருச்சி வந்த பேருந்தை ஓட்டுநர் சரவணகுமார் ஓட்டி வந்துள்ளார். பின்னர் திருச்சி வ.உ.சி. சாலையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பேருந்தை சரவணக்குமார் ஓரமாக நிறுத்தி டீ குடித்து விட்டு நேரக்காப்பாளர் அறைக்கு சென்றுள்ளார். அச்சமயம் அந்த […]
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 102 வயது மூதாட்டி ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவை காரமடை சிக்கரம்பலயம் என்ற பகுதியில் 102 வயது செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். அவர் நேற்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் மூதாட்டியை சோதனை செய்த போது சிறிய கேன் ஒன்றில் மண்ணெண்ணெய் இருப்பதை கண்டனர். இதனையடுத்து போலீசார் மூதாட்டியிடம் இருந்து மண்ணெண்ணெய் பறிமுதல் செய்தார்கள். அதன் […]
அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்டு நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 50 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை பீளமேடு சின்னசாமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ரிதுவர்ணன். 37 வயதுடைய இவர் தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த மார்ச் மாதம் முதல் அதே பகுதியில் சர்வ ஹைடெக் சொல்யூஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் நாளொன்றுக்கு […]
மர்ம நபர்கள் பூட்டியிருந்த வீட்டினுள் இருந்த நகை மற்றும் பணம் திருடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் அருகே சுப்பிரமணிபாளையம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன்(67) – சந்தியா(60). இவர்களின் 2 மகள்கள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதால் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் திருச்சியிலுள்ள தங்களுடைய மகளை பார்க்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளனர். இதனிடையே நேற்று காலையில் அவர்களுடைய வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் […]
கோவையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் 6 மணி நேரத்தில் கையும் களவுமாக பிடித்தனர். கோவையில் பீளமேடு அருகே உள்ள லட்சுமி கார்டன் என்ற பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க வேலு என்பவர் வசித்துவருகிறார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான அவரின் வீட்டின் ஜன்னல் திரை சீலைகள் கிழிந்து விட்டன. அதனால் அதனை மாற்றுவதற்கு முடிவு செய்தார். அதற்காக பெரியநாயக்கன்பாளையம் அருகே இருக்கின்ற ஜோதி புறத்தில் சேர்ந்த வீட்டு உள் அலங்கார […]
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்ததால் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையையில் தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் சுந்தரராஜன் என்பவரின் மகன் ஜீவானந்தம் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவி மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் பழுது சரி செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடுவது வழக்கம். ஆனால் இது அவருடைய மனைவிக்கு பிடிக்காததால் அவரை கண்டித்து வந்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாமல் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவேஸ்வர் என்ற இளைஞரும் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்லூரி விடுமுறை என்பதால் இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். இவர்கள் இருவரும் காதலிப்பது பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பெண்ணின் தந்தை ” இது நமது குடும்பத்திற்கு சரியாக […]
கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு சிறுவர்களை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோவையை அடுத்துள்ள வேடபட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் 14 வயது மற்றும் 16 வயது சிறுவர்கள் இரண்டு பேரும், 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் விளையாடலாம் என்று அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு சிறுவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் அனைவரும் நடந்த சம்பவம் குறித்து தங்களின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். […]
கணவன் மற்றும் மகன் இறந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மனைவியும் விஷம் அருந்தி இறந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் பகுதியில் வசித்து வருபவர்கள் ஜெயபால்-லீலாவதி (வயது 45) தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜெயபால் இறந்துவிட்டார். இதனால் லீலாவதி தனது 2 மகன்களுடன் வசித்து வந்த நிலையில் இவரது மூத்த மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே கணவன் […]
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வடவள்ளி பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகளை தங்கள் வீட்டிற்கு விளையாட வரும்படி அழைத்துள்ளனர். இதனால் சிறுமிகள் இருவரும் அங்கு சென்றபோது இரண்டு மாணவர்களும் அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமிகள் கூறிய நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை […]
மகள் இறந்த செய்தி கேட்டதும் தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் தங்கள் வீட்டில் பூச்சி மருந்து அடித்து விட்டு குடும்பத்துடன் தூங்கியுள்ளார். மருந்தின் விஷத்தன்மை பரவி சண்முகம் மற்றும் அவரது மகள் அனுராதா உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு இருவரும் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் சண்முகத்தின் மகளான அனுராதா சுவாசப் பிரச்சனை காரணமாக செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். சண்முகம் […]
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் தங்கள் ஸ்மார்ட்போனின் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளில் ஏராளமானோர் ஈடுபட தொடங்கினர். அவற்றில் ஒன்றான ஆன்லைன் ரம்மி இதுவரை பலரது உயிரை காவு வாங்கியுள்ளது. தொடர்ந்து ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் மனது வெறுத்து தற்கொலை செய்யும் முடிவை எடுத்து விடுகின்றனர். அவ்வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மதன்குமார் என்பவரும் ஆன்லைன் ரம்மி […]
கணவருடன் தகராறு ஏற்பட்டதால் தாய் தனது 2 மாத கைக்குழந்தைக்கு விஷத்தை கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகே வடுகபாளையத்தில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் கூலித்தொழிலாளி. இவருக்கு சிந்து (வயது 24) என்ற மனைவி மற்றும் 2 மாதத்தில் ஜஸ்வந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்குமாறு சிந்து தனது கணவரிடம் கேட்டால் உடனே பொருட்களை வாங்கி கொடுக்காமல் மணிகண்டன் […]
கோவையில் உணவகம் நடத்தி வந்த திருநங்கை சங்கீதா கொலை வழக்கில் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. திருநங்கையான இவர் கோவை மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார். கோவையில் உணவகம் ஒன்றை துவங்கி நடத்தி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு திருநங்கை சங்கீதா கழுத்து அறுபட்ட நிலையில் அவரது வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் […]
கொடூரமாக கழுத்தை அறுக்கப்பட்டு திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரியாணி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சங்கீதா அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்த அவரது உடலின் மீது துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக உப்பு போடப்பட்டிருந்தது. தொழில் போட்டியினால் சங்கீதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல் வெளிவந்த நிலையில் தற்போது கொலைக்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது. சங்கீதாவை கொடூரமாக கொலை செய்த ராஜேஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது […]
புதிதாக பிரியாணி கடை திறந்த திருநங்கை பத்து வருடங்களுக்கு முன்பு நடந்தது போல் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருநங்கைகள் சங்கத்தின் தலைவராக இருந்து வந்தவர் சங்கீதா இவர் பல வருடங்களாக பிரியாணி விற்பனை செய்து வந்தார். கடந்த மாதம் ஆர்எஸ் புரத்தில் புதிதாக ட்ரான்ஸ் கிட்சேன் பிரியாணி என்ற கடையை ஆரம்பித்தார். அதோடு அதில் 10 திருநங்கைகளுக்கு வேலையும் கொடுத்தார். புதிதாக தொடங்கப்பட்ட இந்த ஹோட்டலுக்கு மக்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகமாக இருந்தது. […]
மக்கள் தேவை அறிந்து செயலியை உருவாக்கிய பள்ளி மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் எட்டிமடையை சேர்ந்த கோபாலன் என்பவரது மகன் திரிஷாந்து. தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே கணினி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தெரிந்த ஒருவர் மூலமாக ஐடி நிறுவனத்தில் பயிற்சி பணியாளராக தனது வேலையை தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து தானாக ஆண்ட்ராய்டு செயலி […]
காதல் திருமணம் செய்த மூன்று மாதத்தில் பெண் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார் ஸ்டெல்லா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை தொடர்ந்து சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ஸ்டெல்லா மிகுந்த தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் நேற்று தனது […]
சாதனை படைக்க அணிகளின் மீது நின்று பட்டதாரிப் பெண் பறை இசைத்து சாதனை படைக்க முயற்சித்துள்ளார். கோவை மாவட்டத்தில் அமைந்த தொண்டாமுத்தூர் பூலுவாம்பட்டியை சேர்ந்தவர் அருள்மொழி. 20 வயது பட்டதாரியான இவர் கடந்த சில வருடங்களாக பறை இசை கற்று வருகின்றார். பறை இசையில் சாதனை படைக்க அருள்மொழி விரும்பினார்.இதைப் பற்றி தனது குழுவினரிடம் ஆலோசனை செய்து பலகையில் ஆணிகளை அடித்து அதன் மேல் நின்று பறையிசை அடித்து சாதனை படைக்க விரும்பினார். இதைத்தொடர்ந்து நேற்று பீளமேடு […]
கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல்காரரை போஸ்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 54 வயதுடைய டேனியல் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். அவர் தற்போது கோவை அத்திப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் தங்கியிருந்து அங்கு இருக்கின்ற ஒரு உணவகத்தில் சமையல்காரராக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் அதே பகுதியில் இருக்கும் 8 வயது சிறுமியை வீட்டின் மாடிக்கு […]
அடகு வைத்த தாலிச் சங்கிலியை மீட்டு தராததால் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டி ஹால் அருகே அமையப்பெற்றிருக்கும் திருமால் வீதியை சேர்ந்த வர்கள் பிரிட்டோ-கரோலின் தம்பதியினர். பிரிட்டோ கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார். இதனால் தனது மனைவியின் தாலி சங்கிலியை சிகிச்சை செலவிற்காக அடகு வைத்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கரோலின் தொடர்ந்து பிரிட்டோவிடம் அடகு […]
அக்டோபர் 2ஆம் தேதி இறைச்சி கடைகளை மூடுவதற்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி விழாவெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.. காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஆடு மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் இந்த விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் கோவையில் இருக்கும் அனைத்து இறைச்சி கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.. மேலும் உத்தரவை மீறும் […]
கோவை ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரு குளம் நிரம்பினால் வாய்க்கால் வழியாக அடுத்தடுத்து குளங்களுக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்த நிலையில் முத்தண்ணன் குளத்தில் உபரி நீர் ராஜ வாய்க்கால் வழியாக செல்வ சிந்தாமணி குலத்திற்கு சென்றது. ஆனால் ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் பொண்ணையராஜபுரம் […]
கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மசக்காளி பாளையம் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் காயங்கள் இருப்பது குறித்தும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வரும் தினேஷ் குமார் என்ற இளைஞர் […]
கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் செயற்குழு கூடிய கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் நடைபெற்றது. கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் […]
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கோவா மற்றும் மும்பையின் பல இடங்களில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்புமுனைகள் ஏற்பட்டு வந்த நிலையில் உள்ளன. இந்த தற்கொலை வழக்கை விசாரிக்ககையில் பலரின் கூட்டு முயற்சிகள், போதைப்பொருள் கடத்தல் போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, சுஷாந்த் மரண விவகாரத்தை ஒட்டி எழுந்த போதை பொருள் புகார் தொடர்பாக மும்பை மற்றும் கோவாவில் 7 இடங்களில் போதை […]
கோவையில் ஊறுகாய் தராததால் வடமாநில வாலிபரை சக தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பீகாரை சேர்ந்த 17 வயதுடைய சித்து குமார் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் அங்கு ஒரு விடுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அவருடன் கார்த்திக்(35), பஷ்ரங்கி குமார்(20) உள்ளிட்ட மூன்று பேர் தங்கியுள்ளனர். கம்பெனி விடுதியில் தங்கி வேலை பார்க்கும் அவர்கள் 4 […]
திருமண வரவேற்பிற்கு அழைத்து செல்லாததால் குழந்தையை கொன்று மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கதிரேசன்-தாமரைச்செல்வி. இத்தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 அன்று தாமரைச் செல்வியின் உறவினருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண விழாவிற்கு குடும்ப சகிதம் 3 பேரும் சென்று வந்த நிலையில் தாமரைச்செல்வி கதிரேசனிடம் திருமண வரவேற்பிற்கு செல்லவேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் கதிரேசன் அதற்கு […]
கோவை அரசு மருத்துவமனையில் முழுமையாக குணமடையாத நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளி மூச்சுத் திணறலால் அவதிப்பட எந்த ஒரு மருத்துவமனையில் அனுமதிகாமல் அலைக்கழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கோவை கிருஷ்ணா நகரைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நோய் தொற்று குணமாகாத நிலையில் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மீண்டும் அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று […]
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நள்ளிரவில் கொரோனா நோயாளி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கிருஷ்ணா நகர் சொக்கமுத்து விதியைச் சேர்ந்த 57 வயது பெண்மணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் இருந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு நோய் குணம் அடைந்தது […]
3½ லட்சம் விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத காரணத்தால் அதிகாரிகள் நிராகரித்ததாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது . இதில் உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும், இல்லையெனில் நிராகரிக்கப்படும் என்று அரசு கூறியிருந்தது . இதுகுறித்து கோவை மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் இ பாஸ் பெற உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் […]
கோவையில் போலுவம்பட்டி வனப்பகுதியில் உணவு உட்கொள்ள முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ள. கடந்த சில மாதங்களில் மட்டும் இளம் வயது யானைகளின் இறப்பு அதிகரித்து வருவது வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வனத்துறையினர் சிறப்பு குழு ஒன்றை அமைத்து, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் […]
பொள்ளாச்சி அருகிலுள்ள ஆழியார் புளியங்கன்டில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களது குடியிருப்புகளை புதுப்பித்த தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை அருவன பகுதியில் வசித்து வந்த மலைவாழ் மக்கள் வெளியேற்றப்பட்டு, நவமலை, ஆழியார், வாய்க்கால் மேடு, புளியங்கன்டி பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளில் வசித்து வரும் இவர்கள், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் […]
கோவை, நீலகிரி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும். குளச்சல் முதல் […]
13 வயது சிறுமியை தனது நண்பருடன் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் உள்பட இருவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்தனர். கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகர் பகுதியைச் சேர்ந்தவன் சந்தோஷ். வயது 23 ஆகிறது.. இவன் அங்குள்ள ஒரு தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறான். இவன் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பல நாள்களாக அவருடன் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்தநிலையில், […]