மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மலைப் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை […]
Tag: கோவை
கோவை திருச்சி சாலையில் அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஊரடங்கினால் சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நிலையில் கோவை திருச்சி சாலையில் கார் ஒன்றை இளைஞர் அதி வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையை கடக்க முயன்றுள்ளனர். அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் […]
கோவையில் சிக்கன் உண்ணும்போது கோழிக் கறித் துண்டு தொண்டையில் சிக்கிக் கொண்டதால் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடவள்ளி பகுதியில் காமாட்சி என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி பிங்கி என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து லிங்கேஷ் என்ற நபருடன் வசித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு கபிலேஷ் என்ற 4 வயது மகன் இருக்கின்றான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லிங்கேஷ், பிங்கி மற்றும் அவரின் மகன் கபிலேஷ் […]
கூண்டுக்குள் 8 மாதமாக அடைப்பட்டிருந்த அரிசி ராஜா என்ற யானை தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அருகே 2017ஆம் ஆண்டு ஜூன் 2ம் நாள் ஒரு காட்டு யானை நான்கு பேரை மிதித்துக் கொன்றது. இது பற்றி தகவலறிந்து விரைந்துவந்த வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு அந்த யானையைப் பிடித்தனர். அதில் மூவர் படுகாயமடைந்தனர். அதையடுத்து ஜூன் 3ஆம் தேதி அந்த காட்டுயானையை வரகழியாறு வனப்பகுதியில் விட்டு விட்டனர். அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மே […]
ஆட்டோ டிரைவர் வண்ண குடைகளை விற்பதால் மன மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ்(32 வயது). திருமணமாகி மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். பயணிகள் ஆட்டோ ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். கொரோனா வைரசால் மாதம் முழுவதும் வருமானம் இல்லாமல் தவித்த காளிதாஸ் குடும்பத்தை காப்பாற்ற என்ன வழி என்று சிந்தித்தார். அவருடைய தந்தை செய்த குடை வியாபாரத்தை ஆட்டோவில் கொண்டு சென்று விற்பனை செய்ய முடிவெடுத்தார். தற்போது குடை, பர்ஸ், […]
குடிப்பதற்காக வீட்டில் உள்ள வெள்ளிகொலுசை எடுத்துவந்து அடமானம் வைக்க வந்த இரு நபர்கள் கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில் அடகுகடை வைத்திருப்பவர் ராஜமாணிக்கம் (31). இவர், தங்க நகைகளுக்கு மட்டும் அடகு பணம் கொடுத்து வருகிறார். இவரின் அடகு கடைக்கு நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த தீபக் மற்றும் சபரீசன் ஆகிய இருவரும் வந்துள்ளனர். அவர்கள் கடை உரிமையாளரான இராஜமாணிக்கத்திடம் சென்று வெள்ளி கொலுசை வைத்து […]
செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை செல்வபுரம் பாரதிநகர் என்ற பகுதியில் செல்வகுமார் மற்றும் லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ராதாகிருஷ்ணன் என்ற 12 வயது மகனும் செல்வி என்ற 6 வயது மகளும் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர். ராதாகிருஷ்ணன் ஏழாம் வகுப்பு படித்து வந்த நிலையில், செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை […]
கோவையில் இன்று முதல் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை செல்போன் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. தற்போது 6 வது கட்ட நிலையில் ஊரடங்கு செயல்பட்டு வரும் சூழ்நிலையில், அதில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அந்தந்த மாவட்டங்களில் கொரோனாவின் அளவைப் பொருத்து மாவட்ட […]
கடந்த சில வாரங்களாக கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் உறுதி செய்யப்பட்டு வருவது பொதுமக்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சவால்களை மேற்கொண்டு, தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதிகம் பாதித்த பகுதியில் உள்ள வணிகர்களும் வியாபாரிகளும் ஆலோசனை நடத்தி கடைகளை அடைக்க முடிவெடுத்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. அந்த வகையில் தற்போது செல்போன் கடை சங்கமும் ஒரு முடிவெடுத்துள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக மொபைல் […]
கோவை மாவட்டத்தில் இன்று 270 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் இதுவரை இல்லாத உச்சமாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் இதுவரை இல்லாத அளவாக இன்று 7,758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,51,055 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று ஒரே […]
கோவையில் இன்று மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. முதல் ஐந்து கட்ட ஊரடங்கில் பல […]
கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் காரணத்தினால் கோவையில் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை 3 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோவையைப் பொருத்தவரை கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் வரை கிட்டத்தட்ட 2966பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கின்றது. கோவையிலும் அதே நடைமுறைதான் கடந்த ஒரு மாதமாக பின்பற்றி வரப்படுகின்றது. ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் […]
தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பரவி வரும் கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு விதமான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாவட்டம் தோறும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமித்து கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ள இடங்களில் முழு முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்த […]
கோவை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவையில் நாளை முதல் 27ஆம் தேதி வரை 3 நாள் முழுக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒரு கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மூன்று நாட்களுக்கு முழு முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் என்பது தமிழகம் முழுவதும் இருந்து இருக்கிறது. அந்த சூழலில் கோவையிலும் அதேபோல் நடைமுறையில் தான் கடந்த ஒரு […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி, தன்னைத்தானே வீட்டில் 5 நாட்கள் வரை அவர் தனிமைப்படுத்திக் கொள்கிறார்.. அதன் பின்னர் வழக்கம்போல் தன்னுடைய பணியை அவர் மேற்கொள்வார் என்று அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனிடையே கொரோனா சிகிச்சை […]
பொள்ளாச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போக்ஸோவில் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சின்னவதம் பச்சேரியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பக்கத்து வீட்டில் வசிக்கும் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த குழந்தையின் தந்தையான ராஜா, குழந்தைகள் பாத்ரூம் செல்வதாகக் கூறி சென்ற நேரத்தில் பக்கத்து வீட்டு சிறுமியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். பின்னர் இதுபற்றி சிறுமி தன்னுடைய தாயாரிடம் கூறியதைதொடர்ந்து, […]
பொள்ளாச்சியில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அவிநாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள போடிபாளையம் பகுதியில் பாபு என்ற இளைஞர் அதே பகுதியில் வசித்துவரும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி, பின் யாரும் இல்லாத விநாயகர் கோயிலுக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று, ரகசியமாக தாலி கட்டிவிட்டு, அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த சிறுமியை இளைஞர் கர்ப்பமாக்கியுள்ளார். […]
பி.கே. புதூர் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை பி.கே. புதூர் பகுதியில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக குனியமுத்தூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் உத்தரவின் பேரில், சப் – இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது பி.கே. புதூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடந்து […]
கொரோனா பாதுகாப்பு கவச உடையை நாய் ஒன்று கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கொடிசியா ‘டி’ அரங்கில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு 400 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்படாமல் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா தடுப்பு கவச உடையணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றார்கள். இவர்கள் உபயோகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு உடைகள் அங்கிருக்கும் ஒரு பெட்டியில் […]
கோவையில் மைசூர்பாவை சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என விளம்பரம் செய்த கடை உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வர, மற்றொருபுறம் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்ததோடு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் […]
மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்காததால், குளத்தில் இறங்கி கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த தம்பதியர் நம்பிராஜன் மற்றும் செல்வி.. இவர்கள் இருவரும் குறிச்சி குளத்தில் நம்பிராஜன் அம்மாவுக்கு திதி கொடுப்பதற்காக நேற்று மாலை வந்துள்ளனர். திதி கொடுத்து முடித்த பின் நம்பிராஜன் தனது மனைவியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தரமுடியாது என செல்வி மறுப்பு தெரிவித்து, கோபத்துடன் ஆட்டோவில் […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 171 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. ஜூலை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்று டாஸ்மாக் மூலம் சென்னை மண்டலத்தில் 20 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. அதேபோல் திருச்சி மண்டலத்தில் 38 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 37 கோடி ரூபாய்க்கும், கோவையில் 34 கோடி ரூபாய்க்கும் மது […]
தமிழகத்தில் இருக்கும் 10 மாவட்டங்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை காண வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு கூறியிருப்பதாவது, “அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாட்டினால் தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தேனி, […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரத்தை சேர்ந்த 28 வயது இளங்கோ கோவையிலுள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகின்றார்.. அங்கு வேலை செய்து வந்த அஞ்சலி (24) என்ற பெண்ணும், இளங்கோவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கல்யாணம் செய்து கொண்டனர்.. இந்த தம்பதியருக்கு 6 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்த அஞ்சலி தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை […]
மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிய வந்திருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் கண்டியூர் என்ற வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டத்தில் பெண் யானை இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 15 முதல் 20 வயது வரை இருக்கக்கூடிய அந்த பெண் யானையை காதுப் பகுதியில் காயம்பட்ட நிலையில் இறந்து கிடந்ததால் முதற்கட்ட விசாரணையில் எப்படி இறந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு […]
மேட்டுப்பாளையத்தில் காதில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்த பெண் யானை துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.. யானைகளின் வலசை செல்லும் காலம் என்பதால் பல்வேறு இடங்களிலிருந்து வந்த யானைகள் அங்கு தங்கியுள்ளது.. பவானி ஆற்றில் தண்ணீர் உள்ளதால் மலைப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் தண்ணீருக்காகவும், உணவிற்காகவும் தேக்கம்பட்டி பகுதிக்கு நாள்தோறும் வருவது வழக்கமாக உள்ளது. […]
16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது 16 வயது மகளை காணவில்லை என்று கடந்த ஜூன் 28ஆம் தேதி குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். புகாரினடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சிறுமியும், இடையர்ப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷாத் என்ற 20 வயது இளைஞரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தது கண்பிடிக்கப்பட்டது. மேலும் அந்த […]
குளியலறையில் பதுங்கியிருந்த பாம்பு பிடிபட்டபோது ஏராளமான குட்டிகளை ஈன்றுள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கோவில்மேடு திலகர் வீதியில் இருந்த வீட்டின் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. அதனை கண்ட வீட்டின் உரிமையாளர் மனோகரன் அதே பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் முரளி என்பவரிடம் தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த முரளி குளியல் அறையின் மூலையில் பதுங்கி இருந்த பாம்பை மீட்டு தான் கொண்டு வந்த பையில் வைத்து எடுத்துச் சென்றார். அதை வனப்பகுதிக்குள் […]
கொரோனா பரவலை தடுக்க ஸ்டாலின் என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இன்று கோவையில் செய்தியளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு கூறுவதாக தெரிவித்தார்.கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை ஸ்டாலின் கூறவில்லை என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு குறித்து 16 முறை ஆலோசனை நடத்தி உள்ளேன் என்றும், மாவட்ட ஆட்சியர்களுடன் 7 முறை ஆலோசனை நடத்தியுள்ளேன் எனவும் […]
1.58 லட்சம் தொழில்துறையினருக்கு ரூ.4,145 கோடி நிதியுதவியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இன்று கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை புத்துயிர் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என […]
கோவையில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்திய ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை கேட்டறிந்தார். ஆலோசனை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது, ” அரசு எடுத்த நடவடிக்கையால் கோவையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை […]
கோவையில் மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். கோவையில் ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர் 3வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். உக்கடத்தில் ரூ.39.74 கோடியில் புனரமைக்கப்பட்டு பெரிய குளத்தில் வடபுற குளக்கரையை மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைத்துள்ளார். வாலங்குளம் மேம்பாலத்தின் கீழ் ரூ.23.83 கோடியில் புனரமைக்கப்பட்டு பகுதி, ரூ.2.68 கோடியில் கட்டப்பட்டுள்ள அன்னுர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். […]
கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்தி வரும் ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை முதல்வர் கேட்டறிந்து வருகிறார். நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு மாலை 6 மணிக்கு மக்களிடையே முதல்வர் உரையாற்றினார். அதன்பின்பு இன்று காலை கோவை வந்தடைந்த முதல்வர், தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும், […]
போத்தனூர் அறுகே 16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்து துன்புறுத்திய முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். கோவை அடுத்த போத்தனூர் அருகேயிருக்கும் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த 66 வயது முதியவரான முகமது பீர் பாஷா என்பவர் அதேப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உனக்கு ஓகே வா” என்று காதல் கடிதம் எழுதி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இது குறித்து சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டை முடித்துக்கொண்டு மாலையில் சேலம் செல்கிறார். இதையடுத்து முதல்வர் வரும் 25ம் தேதி சேலத்தில் இருந்து கோவை பயணம் மேற்கொள்கிறார். அங்கு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். இதையடுத்து வரும் 26ம் தேதி அவர் திருச்சி பயணம் செய்ய உள்ளார் அங்கு குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து 25ம் […]
படிக்கச் சொல்லி பெற்றோர் திட்டியதால் மனவேதனையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவருக்கு 16 வயதில் கனிஷ்கா என்ற மகள் உள்ளார்.. கனிஷ்கா மேல்நிலை பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில், அடுத்த ஆண்டு 10ஆம் வகுப்பு என்பதால் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் குழுவில் ஷேர் செய்யப்பட்டு வந்தது. இதனை அனைத்து மாணவர்களும் படித்து […]
கோவையில் வாயில் காயம்பட்டதால் அவதிப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கோவை மாவட்டம் ஆனைகட்டி வட்டாரம் ஜம்புகண்டி மலைக்கிராமம் அருகே 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று முன்தினம் முதல் சுற்றி திரிந்து வந்தது. இதைடுத்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று யானையை கண்காணித்தனர். அதில், யானைக்கு வாயில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது. காயத்தை குணமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் […]
தன்னுடைய பெற்றோரை ஒருமையில் பேசியதாக காவல் உதவி ஆய்வாளருடன் ஒருவர் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி உணவுக்கடை நடத்திவருபவர் வேல்மயில். இவர் வழக்கம்போல் ஜூன் 17ஆம் தேதி தன்னுடைய மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் கடையில் வியாபாரம் செய்துவந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மணிக்கு மேல் கடையைத் திறந்துவைப்பதற்கு அனுமதியளிக்காத போதிலும், அவர் கடையை திறந்து வைத்துள்ளார். அதனால் அப்போது ரோந்துப் […]
11 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த 2 மாணவர்களை போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் தாயை இழந்த 11 வயது சிறுமி தந்தை மற்றும் அத்தையின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றார்.. தந்தை மற்றும் அத்தை ஆகிய இருவரும் கூலி வேலைக்குச் செல்வார்கள்.. இதனால் வீட்டில் தனியாக இருக்கும் அந்த சிறுமி, கீழ் வீட்டில் டிவி பார்க்கச் செல்வது வழக்கம்.. கீழ் வீட்டில் இருக்கும் 10ஆம் வகுப்பு […]
17 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குழந்தைகள் காப்பகம் நடத்திவந்த நபர் போக்சோவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். போக்ஸோவில் கைதுசெய்யப்பட்ட நபர் கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் அப்பகுதியில் 7 ஆண்டுகளாக குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்திவந்துள்ளார். இந்த காப்பகத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்த பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது உறவினர் ஒருவர் சேர்த்துள்ளார். இந்தசூழலில், மேற்கொண்டு காப்பகத்தை நடத்தமுடியாமல் போன காரணத்தால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் மற்றும் […]
கோவை அருகே வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனைக்கட்டி அருகே மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் திடீரென யானை படுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டம் ஆனைகட்டி வட்டாரம் ஜம்புகண்டி மலைக்கிராமம் அருகே பத்து வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று காலை முதல் சுற்றி திரிந்து வந்தது. இதைடுத்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ […]
கோவையில் சாதி மறுத்து திருமணம் செய்த பெண் கடத்தப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலப்பு திருமணம் செய்த பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் திருச்சி சஞ்சீவி நகர் பகுதியை சேர்ந்த பிரபாவை கடந்த 2 வருடமாக காதலித்து வந்தார். இதற்கு பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர்களை எதிர்த்து சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர். குறிப்பாக கார்த்திகேயன் […]
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ஈரோடு, திருச்சி, மதுரை, தூத்துக்குடி […]
கோவையில் விதிகளை மீடியா பிரபல நகைகடையான ஜிஆர்டி-க்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உரிய அனுமதியின்றி சென்னையில் இருந்து 30 ஊழியர்கள் கோவை அழைத்து வரப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணம் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் 5ம் கட்ட ஊரடங்கு தற்போது உள்ள நிலையில், நிபந்தனைகளுடன் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் நகைகடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக […]
இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ 7 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தின் உயர் கல்வி ஆலோசனை மையத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நபி என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த 2 பேரும் உயர் கல்வி குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்றுவருவது வழக்கம்.. முதலில் […]
கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் சுந்தராபுரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் இந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு கடந்த 9ஆம் […]
கோவை அரசு மருத்துவமனையில் 7 வயதுடைய சிறுவனின் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.. திருப்பூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவருடைய மகன் ரிதிகேஷ்வரன்.. 7 வயதுடைய இந்த சிறுவன் அந்த பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சிறுவன் வீடு அருகேயுள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து நேற்று முன்தினமும் […]
கத்தியால் குத்தப்பட்ட பெண்ணின் உடலில் 30 மணி நேரம் சிக்கியிருந்த கத்தியை அகற்றி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கொட்ட ராஜா நகரில் வசித்து வருபவர் பால்ராஜ். இவருக்கு மல்லிகா(40) என்ற மனைவி உள்ளார்.. இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக மல்லிகாவை ஒரு நபர் கத்தியால் ஓங்கி குத்தியுள்ளார். அந்த கத்தி 7 அங்குலம் இருந்ததால் அவருடைய நெஞ்சு பகுதியில் பாய்ந்தது. இதனால் மல்லிகா […]
கோவையில் திருமணத்துக்கு நோ சொன்ன கள்ளக்காதலியை அடித்து கொலை செய்த, கோழிக்கடைக்காரர் காவல்துறையினருக்கு பயந்து போய் தற்கொலை செய்து கொண்டார். கோவை காளப்பட்டி நேருநகர் 6ஆவது வீதியை சேர்ந்த 37 வயதுடைய பத்மநாபன் என்பவர் அந்தப்பகுதியில் கோழி இறைச்சிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு கல்யாணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பத்மநாபனை விட்டுவிட்டு அவரது மனைவி, 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதேபோல அதேப்பகுதியை […]
கோவையில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்த நபர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். கோவையில் ஏற்கனவே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தற்போது குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 479 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் நீரழிவு போற்ற வேறு ஒரு நோய்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களே […]