கோவையில் கார் சிலிண்டர் வெடித்தது குறித்து அம்மாவட்டத்தில் வருகிற திங்கட்கிழமை பா.ஜ.க சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடை விதிக்க கோரி கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவ்வழக்கில் எதிர்மனுதரராக தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை சேர்க்கப்பட்டிருந்த சூழ்நிலையில், நீதிமன்ற விசாரணையின்போது அந்த அழைப்பு மாநில தலைமையால் அறிவிக்கப்படவில்லை என்று அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வழக்கறிஞரும் பா.ஜ.க மாநில துணைத் […]
Tag: கோவை
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் அப்சர்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை 5 பேரையும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த சூழலில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார் கோவை […]
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கார் […]
பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை, எனவே 31ஆம் தேதி பந்த்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில் அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது என்ஐஏக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக அழைப்பு விடுத்துள்ள ஒரு நாள் பந்த்-க்கு தடை விதிக்க வேண்டும், சட்ட விரோதமானது என அறிவிக்க […]
கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மாநில பாரதிய ஜனதா கடசி தலைவர் அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் பால் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் மன்றம் எச்சரித்துள்ளது.
கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பந்த்துக்கு ஆதரவு தரமாட்டோம் என வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 31 ஆம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்த்துக்கு வணிகர் சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.. இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் பந்த்தில் வணிகர்கள் […]
கோவையில் பாஜக அறிவித்துள்ள பந்த்-துக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை 31ஆம் தேதி கோவை மாவட்டத்தில் முழு கடை அடைப்பிற்கு பாரதிய ஜனதா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த பந்திற்கு தடவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் சிலிண்டர் […]
கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 2019 முதல் NIA-வால் அவ்வப்போது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சூழ்நிலையில் இப்படி NIA உடைய வளையத்தில் விசாரணைக்கு இருக்கக்கூடிய ஒரு நபர்கள், திடீரென்று ஒரு பயங்கரவாத செயலை எப்படி நிகழ்த்தி இருப்பார்கள் என்பது மிகவும் அதிர்ச்சி கூறியதாக இருக்கிறது. எங்கே உளவுத்துறையும், NIAவும் இதை தவற விட்டு விட்டார்களோ […]
கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், வருகின்ற திங்கட்கிழமை அக்டோபர் 31ஆம் தேதி மாநகரம் முழுவதும் காலை ஆறு மணியிலிருந்து, மாலை 6:00 மணி வரை முழுமையான பந்திற்கு வேண்டுகோள் விடுகிறது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். வியாபாரிகள் ஒரு நாள், நமக்காக,,, அல்ல நம்முடைய சமுதாயத்திற்காக, நம்முடைய எதிர்ப்பு குரலை தருவதற்கும், எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும், எத்தகைய பயங்கரவாத செயல்களுக்கும், கொங்கும் மண்ணின் தலைநகராக விளங்கக்கூடிய கோவையிலே இடமில்லை என்பதை […]
கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை மாவட்ட நிர்வாக ஆட்சித் தலைவரும், காவல்துறை ஆணையாளர் அவர்களும் ஜமாத் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஒரு அசாதாரணமான சூழ்நிலை கோவையில் நிலவி வருவதை குறித்து ஜமாத் சார்பாக மாவட்ட நிர்வாகத்தோடு ஆலோசனை நடத்தியதில் நடைபெற்ற சம்பவத்திற்கும், […]
கோவை உக்கடம் அருகே நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து பற்றி தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டு தொடர்புகள் இருக்க வாய்ப்பு இருப்பதையும் கருத்தில் கொண்டு இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கும் மாற்றப் பரிந்துரைப்பதாகவும் மாநிலத்தின் பொது அமைதி சட்டம் ஒழுங்கிற்கு ஊறுவிளைவிக்கும் செயல்களை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த […]
கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிவிபத்து நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்து வருகிறது. இதற்கிடையே கார் சிலிண்டர் வெடிவிபத்து அரசியலாக்கி பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக சார்பில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா பற்றியும் […]
கார் வெடிப்பில் சிக்கி பலியான நபரின் வீட்டில் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கார் வெடிப்பில் சிக்கி பலியான ஐமேசா முபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 75 கிலோ வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வெடிப்பொருட்களை கைப்பற்றினர். இந்த வெடிப்பொருட்களை வைத்து மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற முபின் திட்டமிட்டு […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பற்றி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அதன்பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பற்றி நடைபெற்ற 12 மணி நேரத்திற்கு கார் […]
கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கார் சிலிண்டர் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேசா முபின் என்ற வாலிபர் பலியானார். இதனை தொடர்ந்து அவருக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று ஜமேசா முபினுடைய பெரியப்பா மகன் […]
கோவை உக்கடம் பகுதியில் தீபாவளிக்கு முந்தைய நாள் கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து ஏற்பட்டது. இது சிலிண்டர் விபத்து என்று காவல்துறையினர் கூறினார்கள். அதை பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் முயற்சி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதன்முதலில் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீடு மற்றும் அவருடைய நண்பர்களின் வீடுகளில் வெடி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மூலமாக கோவையில் நடக்க இருந்த மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற […]
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜமேசா முபின் வீடுகளில் இருந்து ரெண்டு எல்பிஜி சிலிண்டர், மூணு ட்ரம். அதில் என்ன பொருட்கள் இருந்தது ? அப்படிங்கிறது தடையவியல் ரிப்போட்டுக்கு அனுப்பி இருக்கின்றோம், சீக்கிரம் வந்துரும். கைது செய்யப்பட்ட நபர்களில் மூன்று நபர்கள் சிசிடிவி ஃபுட்டேஜில் இருந்தவர்கள். இந்த மூணு பேரு ரியாஸ், நவாஸ், ஃபெரோஸ் இந்த மூன்று நபர்கள் முபினுடைய வீட்டிலிருந்து, குண்டுக்கு தேவையான பொருட்கள், சிலிண்டர் இதெல்லாம ஏத்துறதுக்கு […]
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த கூட்டு சதியில் வேறு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் ? எங்கெங்கெல்லாம் அவர்களுக்கு தொடர்பு இருக்கின்றது ? என்பதை தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றோம். விசாரணையின் அடிப்படையில் கண்டிப்பாக பத்திரிகைகளுக்கும், பொது மக்களுக்கும் தகவல் அளிக்கப்படும். இந்த புலன் விசாரணையின் அடிப்படையில் நாம போயிட்டு இருக்கோம் என தெரிவித்தார். கேரள சிறையில் உள்ள இலங்கை தேவாலயம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை ஜமேசா முபின் […]
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, 23ஆம் தேதி அதிகாலை உக்கடம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அருகில் ஒரு மாருதி 800 வாகனத்தில் இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் ஒரு சில டிரம்ஸ் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்த வாகனம், கோவிலுக்கு அருகில் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த உக்கடம் பகுதியை சேர்ந்த முபின் என்ற நபர் சம்பவ […]
கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை உக்கடம் பகுதியில் 23.10.2022 அன்று நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு விசாரணை பற்றியும் பொதுவான சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றியும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை பற்றியும் கோவை […]
கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற பரிந்துரை மற்றும் கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து வலியுறுத்திட முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது உத்தரவிட்டிருப்பதாக செய்தி குறிப்பு வெளியாகி இருக்கிறது. கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்தும் தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் விரிவான […]
சென்னை தலைமைச் செயலகத்தில் கோவை சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், முதலமைச்சருடைய முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்கள். கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றது. அதற்கு […]
NIA DIG வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் நேற்று இரவு கோவை வந்துள்ளதாகவும், தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கோவை வந்திருக்கக்கூடிய NIA அதிகாரிகள் அங்கு இருக்கக்கூடிய உள்ளூர் போலீசுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவையில் கடந்த 23ஆம் தேதி காரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில் ஜமேசா முபீன் என்ற ஒரு நபர் உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் மீது உபா சட்டத்தின் கீழ் […]
கோவையில் கார் வெடித்த சம்பவம் தொடர்பாக டிஜிபி, தலைமைச் செயலாளருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் ஆகியோருடன் முதலமைச்சர் தற்போது ஆலோசனை ஈடுபட்டு வருகிறார். சற்று முன்பாக தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சரை சந்தித்த அதிகாரிகள் இதுகுறித்து ஆலோசனை ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை என்பது, தற்போது […]
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கோவை சென்று இருக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கை பெரிய அளவில் விசாரிப்பதற்காகவும், ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நேரடியாக விசாரிப்பதற்கு சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் கோவை விரைந்திருக்கிறார். நாளை வழக்கு சம்பந்தமாக நேரடியாக கொடநாடு சென்று அவர் விசாரிக்க இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. இன்று காலை 10:30 மணிக்கு […]
கோவையில் கார் வெடித்து சிதறி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று அதிகாலை நேரத்தில் கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சிலிண்டர் வெடிகுண்டு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக காவல் […]
கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவம் தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே கார் வெடித்த இடத்தில் இருந்து ஆணிகள், கோழி குண்டுகள், பாஸ்பரஸ், இரும்பு குண்டுகள் போன்றவை சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழைய துணிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த இவரது வீட்டில் மேற்கொண்ட […]
கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது தீபாவளிக்கு முந்தினம் அக்டோபர் 23ஆம் தேதி கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு அதிகாலை 4 மணிக்கு ஒரு கார் விபத்து நடைபெற்றதாக செய்தி வந்தது அதன் பின் அந்த காரில் இருந்து சிலிண்டர் வெடித்துள்ளது என்ற செய்தி வந்தது. அதன் பின் தமிழக காவல்துறை டிஜிபி ஏடிஜிபி போன்ற விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து […]
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மர்ம நபர் எடுத்துச் செல்லும் மூட்டையில் என்ன இருக்கிறது என்பது பற்றி போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. கோவை மாவட்டம் டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று காலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி, ஏடிஜிபி […]
கோவை மாநகரின் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் நேற்று அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கியது பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கார் ஓட்டுனர் ஒருவர் பலியாகி உள்ளது பரபரப்பை கூட்டி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஜிபி முதல் டிஜிபி வரை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த உண்மை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு […]
கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, புலன் விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கூடுதலாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இந்த புலன் விசாரணையானது மாவட்டத்தை விட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்ல வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. அதன் அடிப்படையில் மூன்று தனிப்படைகள் அமைத்து ஒன்பது தனி படைகள் தற்போது புலன் விசாரணையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை […]
காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் இன்று அதிகாலையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், காருக்கான எரிப்பொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் இறந்தவர் குறித்த எந்த விபரமும் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், […]
கோவை உக்கடத்தில் கார் வெடித்த இடத்திற்கு சென்றார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நிலையில், சம்பவ இடத்திற்கு தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவருடன் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தடவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது. […]
கோவை உக்கடத்தில் கார் வெடித்த இடத்திற்கு சென்றார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கார் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நிலையில், சம்பவ இடத்திற்கு தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வருகை தந்து ஆய்வு நடத்தி வருகின்றார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவருடன் ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் தடவியல் சோதனையும் நடைபெற்று வருகிறது. […]
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மாருதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கைரேகை நிபுணர்களும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் மோப்பனாயும் வரவழைக்கப்பட்ட விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. […]
கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை வரை அனைத்து வியாபார தளங்களும் இரவு 1 மணி வரை செயல்படும் என காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள பல்வேறு ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் இதர வியாபார கடைகளில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் […]
கடந்த மாதம் கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் அலுவலகங்கள் மீதும், வீடுகள் மீதும் பெட்ரோல் பாட்டில் குண்டு வீச்சு மற்றும் எரிபொருள் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் மீது கண்டிப்பாக தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என முன்னரே போலீஸ் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.இந்த […]
கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் பாட்டில் வீசிய விவகாரத்தில் இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர் யாராக இருந்தாலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு அறிக்கையாக வெளியிட்டு, எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டார்கள். இதில் குறிப்பாக இரண்டு பேர் மீது தேசிய […]
பிளாக் ஷிப் நிறுவனமும், 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனமும் இணைந்து யுவன் சங்கர் ராஜாவுக்கு அவரது இசை உலகின் வெள்ளி விழா பரிசாக, ஒரு உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். விரைவில் பிளாக் ஷிப் டிவியில் தொடங்க இருக்கும் லவ் யூ யுவன் என்ற நிகழ்ச்சியின் முதல் பகுதியாக இது படமாக்கப்பட்டது. இதையடுத்து ஒரே நேரத்தில் 11 ஆயிரம் மாணவர்கள் யுவனின் பில்லியன் ஹிட் பாடலான ரவுடி பேபிக்கு ஆடிபாடி […]
தீபாவளி போனஸ் கேட்டு கொடுக்காததால் தூய்மை பணியாளர் ஒருவர் கடையின் வாசல் முன்பு குப்பை கொட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை ஆர் எஸ் புரம் ராமச்சந்திரா ரோட்டில் கருத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் எல்இடி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவரிடம் கடந்த நான்காம் தேதி தூய்மை பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது அப்போது இவர் 20 ஆம் தேதிக்கு பின் தருகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் […]
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க கூடிய வகையில் குற்ற தடுப்பு நடவடிக்கையாகவும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க டிஜேபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இதற்கு ”ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்திற்குள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ள ரவுடிகளுக்கு குறி […]
தன்னை ஆடு திருடன் என கூறிய காரணத்தினால் ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றார். இந்த சூழலில் நேற்று அவரது கடையில் இரண்டு ஆடுகள் வழிமாறி சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சின்ன சாமியிடம் அந்த பகுதியை சேர்ந்த […]
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்எம்எஸ் கலை அறிவியல் கல்லூரியின் இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார். இதை பார்க்க வருபவர்களுக்கு இலவச அனுமதி என்றவுடன் சுமார் 15,000 பேர் அங்கு கூடி உள்ளனர். எதிர்பாராத அளவிற்கு கூட்டம் குவிந்ததால் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் கல்லூரியின் மதில் சுவரில் ஏறி ரசித்துள்ளனர். சுற்றுச்சுவர் மீது அதிகம் பேர் ஏறியதால் சுவர் இடிந்து விழுந்துள்ளது. […]
18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டார்கள். கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து சென்ற 2-ம் தேதி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இரண்டாவது நாளாக நேற்று முன்தினமும் காலை 9 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் காலை 9 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தை […]
கோவை மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இவற்றில் சில அறிவிப்ப்புடன் கிடப்பில் போட்டு விட்டனர். மற்றவை தொடங்கப்பட்டு மெதுவாக பணிகள் நடந்து வருகின்றன. சில ரத்து செய்யப்படுமோ? என்ற சந்தேகத்துடன் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒருங்கே நிறைவேறினால் கோவையின் முகமே மாறிவிடும், வளர்ச்சியில் பல அடித்து தூரம் பாயும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிலும் 17 திட்டங்கள் கோவையில் விரைவாக […]
திமுக தற்போது உட்கட்சி தேர்தலை நடத்தி வருகிறது. இதில் கீழ் மட்ட உறுப்பினர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 71 மாவட்ட செயலாளர்களில் 7 பேர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர். அமைப்பு ரீதியாக 5 ஆக இருந்த கோவை மாவட்டம் தற்போது மூன்றாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வடக்கில் தொண்டாமுத்தூர் ரவியும், தெற்கில் தளபதி முருகேசனும், மாநகர் மாவட்டத்திற்கு நா. கார்த்திக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு தேமுதிக கட்சியில் இருந்து தளபதி முருகேசன் திமுகவில் […]
நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சென்ற 2019 ஆம் வருடம் முதல் கண்காணிப்பாளராக டாக்டர் கலைச்செல்வி பொறுப்பு வகித்து வருகின்றார். இவர் மீது அடிக்கடி புகார்கள் துறை ரீதியாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்து 34 பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் […]
பொள்ளாச்சியில் தனிப்படை போலீஸாருக்கு வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். கோவையில் சென்ற 22ஆம் தேதி பாரதிய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகளின் வீடு உடைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டது. இதனால் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதனிடையே பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. […]
ஓசியில் போக மாட்டேன் என்று சொல்லி மூதாட்டி பேசிய வீடியோ வைரல் ஆன விவகாரத்தில் அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் அதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்று திமுக விளக்கம் அளித்துள்ளது. இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க கூடிய அரசு பேருந்தில் பாட்டி ஒருவர் இலவச பயணம் மேற்கொள்ள மாட்டேன் என வலுக்கட்டாயமாக பணத்தை கொடுத்து பயணம் செய்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ தொடர்ந்து வைரலானது […]
கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அந்த கடிதத்தில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி […]