கனமழை எதிரொலியாக இன்று நீலகிரியில் 4 தாலுகாக்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களிலும், கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த மாவட்டங்களில் விடுமுறை என்பது குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
Tag: கோவை
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக ஒரு சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் ஊழியர்கள் நீலாம்பூர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து கடை உரிமையாளர் உதயகுமார்(37) வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1,15,000 மதிப்பிலான 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து சூலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த […]
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் டேவிட்பால் என்ற சின்னப்பன் (57). இவர் கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் வசித்து வருகிறார். இதனிடையில் இவர் பெரியநாயக்கன் பாளையத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்திவந்தார். இந்நிலையில் டேவிட்பால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் வாயிலாக தகவல் கொடுத்தார். இதை நம்பி டேவிட்பாலை தொடர்பு கொண்ட பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தார். அதன்படி தமிழகம் முழுதும் 44 பேரிடம் ரூபாய் […]
கோவை மாவட்டம் வால்பாறையில் பல எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சக்தி எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் புகுந்தது. அவை திடீரென தொழிலாளர்களின் வீடுகளின் சுவரை இடித்து சேதப்படுத்தி அட்டுழியம் செய்தது. இதனையடுத்து யானைகள் அந்த வீட்டிலிருந்த உணவுபொருட்களை எடுத்து சாப்பிட்டது. அதன்பின் வீட்டுக்குள் இருந்த பொருட்களை எடுத்து வீசி சேதப்படுத்திது. இது தொடர்பாக தகவலறிந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளி அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட […]
கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறையில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. இந்நிலையில் நேற்று வால்பாறை மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த தொடர்மழை காரணமாக நடு மலை, வெள்ளி மலை டனல் ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் பரம்பிக் குளம்-ஆழியாறு திட்டத்தின் அடிப்படை அணையாக திகழும் சோலையாறு அணை நிரம்பியது. அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு வினாடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சோலையாறு அணையின் பாதுகாப்புகருதி எப்போது வேண்டுமானாலும், அணை […]
கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் சடையப்பதேவர் வீதியில் வசித்து வருபவர் கந்தவேல் (48). இவரது மனைவி ரமாபிரபா (41). இந்த தம்பதியினரின் மகன் அருண் (16). இதில் கந்தவேல் சென்னை வண்டலூரிள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியதால் அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இதனால் மகன் அருண் சென்னையிலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து கொரோனா காரணமாக ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கள்ளிப்பாளையத்திலுள்ள அவருடைய நண்பரது பண்ணை வீட்டில் கந்தவேல் குடும்பத்துடன் வசித்து […]
கோயம்புத்தூர் மாவட்ட பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சப் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலமை தாங்கினார். அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது கோவை மாவட்ட கருப்பட்டி உற்பத்தியாளர் நலம் நாடு சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில், பொள்ளாச்சி மற்றும் உடுமலை வட்டாரத்தில் 1500 பேர் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சி கூட்டுறவு சங்கங்கள் […]
கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறையினருக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் குளேஸ்வரன் பட்டி அமைதி நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் அமைதி நகர் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது […]
கோவை ஸ்ரீராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும், திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதி கொண்டது. அப்போது டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணியின் வீரர்கள் அமித்சாத்விக், சந்தோஷ் ஷிவ் போன்றோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அதிரடியாக விளையாடினர். இதன் காரணமாக அணியின் […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில […]
கோவை ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். குடும்ப வறுமையின் காரணமாக இவர் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அப்பெண்ணிடம் உறவினர் ஒருவர் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒரு சிறுநீரகத்தை கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்குவார்கள் என கூறினார். இதனையடுத்து அப்பெண் அந்த தனியார் மருத்துவமனை தொடர்பாக இணையதளத்தில் தேடியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரு மருத்துவரின் […]
கோவையை அடுத்த காரமடை பகுதியில் யானை தந்தங்கள் விற்பனைக்கு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரமடை அருகில் கோடதாசனூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் (51), அதே பகுதியை சேர்ந்த பிரபு (27), ஏழுசுழி கிராமத்தை சேர்ந்த வெள்ளிங்கிரி (40), ராமமூர்த்தி ( 39), குமரேசன் (31), அஜீத் (25), ரஞ்சித் (25) காரமடையை சேர்ந்த ஆறுமுகம் ( 56) […]
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அனைத்து துறை தலைமை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கோவை மாவட்டத்தில் அதிகமான மழை பெய்தால் கூட மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, நீர்வளத்துறை, […]
கோவை மாநகரில் ஐஜி அந்தஸ்திலானா ஆணையர் தலைமையில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதன் கீழ் 4 துணை ஆணையர்கள், 12க்கும் மேற்பட்ட உதவியாளர்கள், 35க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 2,200 பேர் பணியாற்றி வருகின்றன. அதனை தொடர்ந்து காவல்துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் நபர்கள் பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அதனை போல தேர்தல் சமயங்களிலும் அப்போதைய சூழலை பொறுத்து பணியிடம் மாற்றம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஒரு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் […]
கோவை வடவள்ளியில் வசித்து வருபவர் என்ஜினீயர் சந்திரசேகர். கோவை தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்து வரும் இவர், அ.தி.மு.க. சார்பாக வெளிவரும் நாளேட்டின் வெளியீட்டாளராகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கட்டுமான நிறுவனம் நடத்திவரும் அவர் காண்டிராக்டராகவும் இருக்கிறார். இவருடைய வீட்டில் சென்ற சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு அரசின் லஞ்சஒழிப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் வடவள்ளியிலுள்ள […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பாலக்காடு வழித் தடத்தில் சென்ற 1932 ஆம் வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி ஆனைமலை ரோடு ரயில் நிலையம் செயல்பட துவங்கியது. அத்துடன் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருக்கும்போது ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை தவிர்த்து பெரும்பாலான ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனிடையில் அகலரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இதையடுத்து ஆனைமலை ரோடு ரயில் நிலையத்தில் திருச்செந்தூர் ரயில் மட்டும் நின்று செல்கிறது. இதற்கிடையே ரயில் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவையில் மழை கொட்டி தீர்த்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோவை மாவட்டம் அதிமுக இளைஞரணி துணை செயலாளராக இருப்பவர் வடவள்ளி சந்திரசேகர். இவருடைய மனைவி சர்மிளா மாநகராட்சி கவுன்சிலர் ஆக உள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாஸ்க் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகராட்சி ஆணையர் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் […]
கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றால அருவி. இந்த சுற்றுலா தளம் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் இயற்கை அழகினையும், வனவிலங்குகளையும் கண்டு ரசிப்பதற்கும், அருவியில் குளிப்பதற்கும் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம். அருவியில் குளித்துவிட்டு வனப்பகுதியில் உள்ள இயற்கை அழகை கண்டு ரசிப்பது வழக்கம். தற்போது சில நாட்களாக […]
கோவையில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் உமேந்தர் (34). இவர், விடுமுறைக்கு சென்னை வந்தார். சம்பவத்தன்று கேளம்பாக்கம், ஓ.எம்.ஆர் மெரினா மாலில், குடும்பத்தோடு படம் பார்த்து விட்டு, கூடுவாஞ்சேரிக்கு செல்வதற்கு, ஓலா கார் புக்கிங் செய்துள்ளார். அந்த காரை ஆத்தூரைச் சேர்ந்த ரவி (41) என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஆனால் உமேந்தர் கார் சிறியதாக இருந்ததால் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே இதில் எப்படி செல்ல முடியும் என்று ஓட்டுநர் ரவியிடம் கேட்டுள்ளார். […]
கோவை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏளனமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோவை குற்றால அருவி அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சோதனை சாவடி வரை வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு அங்கிருந்து அருவிக்கு வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் அனைத்து செல்லப்படுகிறார்கள். இதற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியையும் […]
கோவையில் அடர்ந்த வனப் பகுதிக்குள் மலைவாழ் குடியிருப்பு அதிகளவில் இருக்கிறது. இங்கு பெரும்பாலான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பல பேர் வனக் குழுவில் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் வனப் பகுதியை பாதுகாத்து வருவதுடன், கோவை வனப்பகுதியிலுள்ள எல்லையை வகைப்படுத்தவும் உதவியாக இருக்கின்றனர். ஆகவே பழங்குடியின மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியை பழங்குடியின மக்கள் இலவசமாக பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த […]
கோவை கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்லை சேர்ந்தவர் நடராஜன் (வயது 83). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், இன்று இரவுக்குள் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், மேலும் மின் கட்டணத்தை செலுத்த கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் அடைந்த நடராஜன், உடனடியாக அந்த லிங்கை கிளிக் செய்து, தனது […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நகராட்சி நிர்வாக நோய் தடுப்பு நடவடிகளை தீவிரட்டு உள்ளது. அதாவது மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனையடுத்து மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கண்ட்ரோல் ரூம் பொறுப்பாளர் முகுந்தன் […]
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நேரு விளையாட்டு அரங்கத்தின் எதிரே அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் வசதிகளுடன் கூடிய வைஃபை ஸ்மார்ட் ட்ரீ மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ட்ரீ சோலார் பேனல் மூலமாக செல்போன் சார்ஜ் செய்யும் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஒரே நேரத்தில் 150 பேர் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன் […]
கோவையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 130 பங்குகள், பாரத் பெட்ரோலியத்துக்கு சொந்தமான 80, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 49 பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. இந்த பெட்ரோல் பங்குகளுக்கு தேவையான பெட்ரோல், டீசல் நிறுவனத்திற்கு சொந்தமான இருகூர் மற்றும் அத்தப்பகவுண்டன் புதூரிலுள்ள கிடங்குகளிலிருந்து லாரிகள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கோவையில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு தேவையான பெட்ரோல், டீசல் கிடங்கிலிருந்து வழங்குவதில் விற்பனைக்கு ஏற்றவாறு ரேஷன் முறை பின்பற்றப்படுவதால் தான் கோவையில் தட்டுப்பாடு […]
கோவை மாவட்டத்தின் புதிய காவல் ஆணையராக வி.பாலகிருஷ்ணன் கடந்த திங்கள்கிழமையன்று பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவருடைய தலைமையில் முதல் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வருகிற 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களிடம் இருந்து தினமும் பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை மனுக்கள் பெறப்படுகிறது. மிகவும் அவசரமான சூழ்நிலையில் மட்டுமே நேரம் கருதாமல் மனுக்கள் பெறப்படும். தமிழக முதல்வரின் அறிவிப்பின்படியும், டிஜிபியின் உத்தரவின்படியும் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் […]
கோவை மாவட்டத்தின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று முக்கிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து மேற்கு மண்டலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பல திட்டங்களை வரிசையாக செயல்படுத்தி வருகின்றனர். ஸ்டாலின், அமைச்சர்கள் என வரிசையாக சென்ற பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். இந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் கட்சியின் தலைமையை […]
பெரம்பலூர் அருகே சிவாலயத்தில் அர்ச்சகர் தாக்கியதால் பக்தர் ஒருவருக்கு மண்டை உடைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓகளூரைச் சேர்ந்த ராகவேந்திரன் தனது நண்பர்களுடன் வாலீஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளார். நண்பகல் 12 மணிக்கு நடை சாற்றப்படும் நேரத்தில் சென்றதால் ராகவேந்திரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் கோயிலுக்குள் செல்ல முற்பட்டதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அர்ச்சகர் செல்லப்பா என்பவர் தட்டால் தாக்கி பக்தரை கீழே தள்ளிவிட்டதாகவும் அதனால் ராகவேந்திரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் […]
நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களை பின்னுக்குத்தள்ளி கோவை வளர்ச்சியில் முதலிடம் பிடித்திருப்பது மிகுந்த பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியாக பல நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. அதன் பிறகு தொற்று குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி பொருளாதாரம் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் டயர் 2 எனப்படும் இரண்டாம் நிலை நகரங்களில் பொருளாதாரம் பெரிய […]
கோவை பீளமேடு சவுரிபாளையம் பிள்ளையார் கோவில் என்ற வீதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் மனோஜ் (19) என்பவர், சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் வேலை செய்து வருகிறார். அவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் ஆர்த்தி என்பவரை அழைத்து கொண்டு பேரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்வபுரம் தில்லை நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதனை இவர் இடது […]
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது நீண்ட காலமாகவே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதுவும் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகளை இழந்து பலரும் பொருளாதார ரீதியாக சிக்கித் தவித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில நகரங்கள் வேலை உருவாக்கத்தில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. அது குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அந்தவகையில் மான்ஸ்டர் வேலைவாய்ப்பு குறியீடு அறிக்கையில், இந்தியாவின் இரண்டாம் அடுக்கு நகரங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்படும். அதன்படி மெட்ரோ நகரங்களிலேயே அதிகமான […]
கோவை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றனர். கோவை மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாக காணப்படும். அதனை போல மாநகர பகுதியான ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி, கிராஸ் கட் ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் அதிக ஜவுளிக்கடைகள், செல்போன் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் உள்ளன. அது முக்கிய பேருந்து நிலையங்களும் உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் எப்பொழுதும் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுவதால் மக்கள் கடும் அவதி அடைகின்றன. இதனை […]
கோயம்புத்தூர் மாவட்டம் கோவை பீளமேடு சேரன் கார்டன் என்ற பகுதியை சேர்ந்த அய்யாவு என்பவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி நண்பனின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்காசி வரை சென்றுள்ளார். அதன்பிறகு நிகழ்ச்சி முடிந்து நேற்று இவர் தென்காசியிலிருந்து கோவையில் இருக்கும் வீட்டிற்கு திரும்பினார். இவர் வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் […]
தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள காட்டு விலங்குகள் எல்லையையொட்டி உள்ள பகுதிகளுக்கு வருகிறது. அதிலும் இரவு நேரங்களில் எல்லைகளை கடந்து மற்றொரு பகுதிகளுக்கு செல்லும் காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருகிறது. இதனால் கோவை வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோவை பூண்டி சாலையில் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல பக்தர்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது முதலில் காட்டு யானைகள் […]
கிணத்துக்கடவுக்குள் செல்லும் சர்வீஸ் சாலையில் வழிகாட்டி பலகை வைக்காததால் 3 கிலோமீட்டர் சுற்றி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கோவை டு பொள்ளாச்சி ரோடு நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டது. இதில் நிறைய வண்டிகள் சென்று வருகிறது. இது பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு வரும் பாதையில் தாமரைக்குளம், கோவில்பாளையம், கோதவாடி பிரிவு சொலவம்பாளையம் பிரிவு உள்ளிட்ட ஊர்கள் இருக்கின்றன. இந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக நான்கு வழி சாலையிலிருந்து சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. இதனால் கோவை பொள்ளாச்சியிலிருந்து வரும் பேருந்துகள் […]
கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாய், பூனை கண்காட்சி நடந்தது. கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் சர்வதேச அளவில் பூனை, நாய் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் ராட்வீலர், பூடில், கிரேட் டேன், சிவாவா, பெல்ஜியன் ஷெப்பர்ட் உட்பட பல்வேறு இன நாய்களும் சிப்பிபாறை, கோம்பை, ராஜபாளையம் போன்ற இந்திய நாய்களும் என 30-க்கும் அதிகமான இனத்தை சேர்ந்த 250 நாய்களும் கலந்து கொண்டன. வெளிநாட்டு, உள்நாட்டு நாய் […]
கோவை மாநகர பகுதியில் இருக்கின்ற கடைகளில் திடீர் ஆய்வு செய்த ஆணையாளர் நடைபாதையில் இருந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்தார். கோவை மாநகராட்சி ஆணையராக மு.பிரதாப் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் திடீரென மாநகரப் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் டவுன்ஹால் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்குள்ள நடைபாதையில் இருக்கின்ற ஆதரவற்ற மூதாட்டி ஒருவரிடம் நலம் விசாரித்தார். அதன்பின் அந்த மூதாட்டியிடம் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறேன். அங்கு செல்ல உங்களுக்கு விருப்பம் […]
திருமணத்திற்காக ஜவுளி எடுத்துவிட்டு வரும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் புளியமரத்தில் மோதி 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் வசித்து வருபவர் 69 வயது ஜெயலட்சுமி. இவருடைய மகன் கார்த்திகேயனுக்கு வருகின்ற 10-ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கின்றது. இதனால் திருமணத்திற்காக ஜவுளி எடுப்பதற்கு காஞ்சிபுரத்திற்கு ஜெயலட்சுமி மற்றும் கார்த்திகேயன் உட்பட 14 பேர் வேனில் சென்றார்கள். அப்போது ஜவுளி எடுத்துக்கொண்டு சத்தியமங்கலம் வழியாக கோவை செல்லும் போது சக்தி எஸ். ஆர். டி கார்னரில் வேன் […]
கோவையில் போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட ஸ்விகி ஊழியரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நலம் விசாரித்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,”கோவை பீளமேடு போக்குவரத்து காவலர் சதீஷ் , ஸ்விகி பணியாளர் மோகன சுந்தரத்தை கன்னத்தில் அறைந்த நிகழ்வு குறித்த விசாரணை நடத்தப்பட்டது. காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோகன சுந்தரத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடவடிக்கையை தெரிவித்து அவர் நலம்பெற வாழ்த்தினேன், “என […]
வால்பாறை குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டுப் பன்றிகளால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பயத்தில் உள்ளார்கள். கோவை மாவட்டம், வால்பாறை அருகில் வனப்பகுதியில் காட்டெருமை, புலி, சிறுத்தை, யானை உட்பட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. அதில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தேயிலை தோட்டம், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது. இதன்காரணமாக வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் இழப்பும் ஏற்படுகின்றது. இந்நிலையில் வால்பாறை குடியிருப்பு பகுதியில் காட்டுப்பன்றி, சிறுத்தை நடமாட்டம் அதிகமாக […]
ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது திருட்டு வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவையை அடுத்துள்ள சூலூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்படி கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது சம்பவத்தன்று இரவு முத்துகவுண்டன்புதூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் காவல்துறையினர் ரோந்து […]
அலுவலகங்கள் வீடுகளில் சார்ஜ் போட்டு வைத்திருக்கும் செல்போன்கள், லேப்டாப்களை திருடிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், ஆர். எஸ். புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது தனியார் மருத்துவமனை அருகில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கண்காணித்தபோது மருத்துவமனைகள் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்ததார். உடனே காவல் துறையினர் அவரைக் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பொள்ளாச்சியில் வசித்த 45 வயதுடைய சசிகுமார் என்பதும், வீடுகள், அலுவலகங்களில் […]
பெண் ஊழியரை தீ வைத்து கொன்ற வழக்கில் சரணடைந்த தொழிலதிபரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானி அருகில் ஒரு கிராமத்தில் வசித்த 37 வயதுடைய பெண் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த பெண் ஈரோட்டில் இருக்கின்ற ஒரு சிமெண்ட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த கடையை கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் வசித்த தொழிலதிபர் நவநீதன் என்பவர் நடத்தி வருகின்றார். […]
தேசிய அளவில் நடைபெற்ற ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அரியானா மாநிலத்தில் தேசிய அளவில் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்தப் போட்டி 13, 15, 17, 19 என வயது வாரியாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. அதில் 17 வயது பிரிவு போட்டியில் கோவையில் வசித்த மாணவர் பிரணவ் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். […]
லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் திவான்சாபுதூர் கல்யாண மண்டபம் வீதியில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே துறை ஊழியர் சண்முகம் (70). இவர் தனது பைக்கில் கோவை அருகில் சூலூர் கல்பாவிஹார் இந்திய விமானப்படை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தனது மகன் 42 வயதுடைய மணி என்பவர் கட்டி வருகின்ற புது வீட்டை பார்ப்பதற்காக சென்றார். அப்போது அந்த பைக்கின் […]
பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வருபவர்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் ஆனைமலை அருகில் நடந்த விபத்தில் பைக் மோதியதில் 3 பேர் உயிரிழந்தார்கள். இந்நிலையில் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருபவர்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகனாந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், அலுவலர்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். […]