ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த திருநங்கை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தா காலனி ராஜா நாயுடு வீதியை சேர்ந்த திருநங்கையான சிங்கராஜா என்கின்ற நவீனா என்பவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அருகே இருக்கும் பகுத்தம்பாளையம் பகுதியில் தனது நண்பரின் வீட்டிற்கு 3 பேருடன் வந்துள்ளார். இவர்கள் நேற்று காலை 10 மணிக்கு எம்ஜிஆர் நகர் அருகே ஓடும் பவானி ஆற்றுக்கு சென்று குளித்து கொண்டிருந்த பொழுது நவீனா ஆற்றின் ஆழமான […]
Tag: கோவை
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சிவசக்தி. இவர் அழகு நிபுணராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் சிவசக்தி, திருமண நிகழ்விற்காக மணமகளுக்கு அலங்காரம் செய்வதற்காகப் பொள்ளாச்சியில், இருந்து ஈரோட்டிற்குப் பேருந்தில் சென்றுள்ளார். பின்னர் பேருந்து பல்லடத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிவசக்தி எழுந்துள்ளார். அந்நேரம் எதிர்பாராத விதமாகப் பேருந்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தியுள்ளார். பிறகு கீழே சென்று பார்த்தபோது அவர் […]
தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக அளவு யானைகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் மனிதர்கள் செயல்பாடு அதிகமாக இருப்பதால் யானைகள் ஊருக்குள் நுழைந்து பல்வேறு சிரமங்களை ஏற்படுத்திவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் விவசாய நிலங்களும் பெரிதும் நாசம் ஆகிவிடுகிறது. இதனைத் தடுப்பதற்கு விவசாயிகள் மின்வேலிகள் என்ற விஷத்தை கையில் எடுக்கின்றனர். ஆனால் அது வேறு மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது. இது தொடர்பாக கோவை வனம் சந்திரசேகர் கூறுகையில், யானைகளுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருப்பது மின் வேலிகள் […]
கோவை ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் தங்கள் விடுப்பை “சரண்டர்” செய்து அதற்கான தொகையை பெற்றுக்கொள்வது வழக்கம் ஆகும். ஊழியர் ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் விடுப்பை சரண்டர் செய்யும் அடிப்படையில் கிடைக்கும். இத்தொகையை வழங்குவதற்காக பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களுக்கு லஞ்சம் தர வேண்டும் என்று வற்புறுத்தி பெற்றுள்ளனர். அதன்படி ஒவ்வொரு ஊழியரிடமிருந்தும் கட்டாயப்படுத்தி 25,000-50,000 ரூபாய் வரையிலும் லஞ்சம் பெறப்பட்டு உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் சில பேர் லஞ்சம் ஒழிப்புத் […]
கோவையை சேர்ந்த சுவாதி ஸ்ரீ என்ற மாணவி மாநில அளவில் யு.பி.எஸ்.சி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் யு.பி.எஸ்.சி எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதை தொடர்ந்து நேர்முகத்தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் கோவை மாவட்டம் துடியலூர் அருகே தொப்பம்பட்டி பகுதியில் வசித்த மாணவி சுவாதி ஸ்ரீ அகில இந்திய அளவில் 42-வது இடத்தையும், தமிழக […]
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலாளிக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து கோவை போச்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் வசித்து வருபவர் 57 வயதுடைய ரவிச்சந்திரன். இவர் சிங்காநல்லூர் பகுதியில் இருக்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2020-ஆம் வருடம் நவம்பர் மாதம் அதே பகுதியில் வசித்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்த குடியிருப்புவாசிகள் அவரை பிடித்து […]
சூலூர் அருகே கோவில் ஒன்றில் பெண்கள் வழிபாடு செய்த காரணத்தினால் மோதல் ஏற்பட கோவிலைப் மூடிபோட்டு போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கருத்தம்பட்டி பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு மாற்றப்பட்டு பக்தர்கள் பிரதிஷ்டை செய்தனர். விநாயகர் சிலை மாரியம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டதால் விநாயகர் கோவில் பராமரிப்பு இன்றி இருந்து […]
கோவை மாவட்டத்தில் முதல்முறையாக 3 1/2 வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழ் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. சாதி சான்றிதழ் என்பது குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் வேலைவாய்ப்புகள் அனைத்திற்கும் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்டவரின் மதம் குறிப்பிட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் சங்கனூர் கே.கே புதூரில் வசித்த நரேஷ் கார்த்திக். இவருடைய மகள் வில்மா (3 1/2). வில்மாவிற்கு மதம், சாதி சாராதவர் […]
ஆழியாறு அணைக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகளை ரோந்து வந்த காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் அணையில் ஆழம் தெரியாமல் இறங்கி குளிப்பதும், செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற சென்ற கல்லூரி மாணவர் […]
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமானத்தில் இருந்து கோவைக்கு நேற்று மதியம் 2.40 மணிக்கு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 119 பேர் பயணம் செய்தனர். கோவை அருகே சென்ற போது பலத்த காற்று வீசியதால் கோவை விமான நிலையத்தில் விமானம் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டம் அடித்தது. வானிலை மோசமான காரணத்தினால் கோவையில் தரை இறக்க முடியாததால் மீண்டும் அந்த விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் மாலை 4.15 […]
வால்பாறை ஆறுகளின் தண்ணீர் அதிகமாக வருவதால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 70.23 அடியாக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் சோலையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை 160 அடி கொள்ளளவில் அமைந்துள்ளது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்து 60 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இதன் காரணமாக மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் மே மாதத்தில் கோடை மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் எதிர்பாராத விதமாக பருவநிலை மாற்றம் […]
தொழிலாளர்களின் பங்கு தொகையை செலுத்தாமல் பணத்தை மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், போத்தனூரில் தனியார் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் அந்தோணி. இவர் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்தவேண்டிய பணத்தை வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார். இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகள் மைதிலிதேவி, விஜயலட்சுமி ஆகியோர் ஆய்வு நடத்தியபோது […]
கோவை செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கடந்த 1752 ஆம் வருடம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவே துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோவை அரசு கலைக் கல்லூரியில் பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பாதுகாப்பியல், சுற்றுலாவியல், அரசியல், அறிவியல், பிஎஸ்சி கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், உளவியல், புவியியல், பிகாம், பிகாம் சிஏ, போன்ற 23 இளநிலை பட்டப்படிப்பு முதுகலை படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றது. இதனை தவிர 16 பாடப்பிரிவுகளில் எம்ஃபில் மற்றும் பிஹெச்டி படிப்புகளும் […]
மருதமலை முருகன் கோவிலில் லிப்ட் அமைப்பதற்கு ரூ 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோவை மாவட்டம், பேரூரில் பட்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று முன்தினம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்து விட்டு ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கோவிலுக்கு வரும் முதியோர் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ரூ 5.25 லட்சம் மதிப்பீட்டில் தனியார் நன்கொடை வழங்கிய பேட்டரி கார் சேவையை ஆரம்பித்து வைத்தார். […]
கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம்பாளையம் ராயர் கோவில் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பெண் ஒருவரிடம் இருந்து 50 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதை தடுப்பதற்காக காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயண உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை திடீரென கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் மர்ம நபர்கள் தடை […]
மேட்டுப்பாளையம் – நெல்லை இடையே இயங்கும் கோடைகால சிறப்பு ரயில் கிணத்துக்கடவு போத்தனூரில் நின்று செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து நெல்லைக்கு வாராந்திர கோடைகால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகின்றது. இந்த ரயில் பொள்ளாச்சி, கோவை, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம், சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, ராஜபாளையம், பாவூர்சத்திரம், அம்பை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கின்றது. மேட்டுப்பாளையத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7.45 […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் குறைந்து, பல்வேறு இடங்களில் விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று ரூ.120 க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் விஜய் மகள் இயக்க தெற்கு நகர இளைஞரணியில் அக்கிம் என்பவர் பொருளாளராக இருக்கிறார். இவரது மகளான […]
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயங்கி வருகின்றது. மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடையும். ஊட்டியிலிருந்து மதியம் 2 மணிக்கு கிளம்பி மாலை 5.35 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து அடையும். உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆனந்தமாக மலைப்பகுதியில் இருக்கின்ற இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றார்கள். […]
தோட்டக்கலைத்துறை சார்பாக காளான் வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டம், அன்னூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, அன்னூர் வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகள், பெண்கள், சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட தோட்டக்கலைத் துறை சார்பாக சிறிய அளவில் காளான் வளர்ப்பு பண்ணை அமைப்பதற்கு மானியம் கொடுக்கப்படுகிறது. இந்த காளான் பண்ணை 600 சதுர அடி பரப்பளவில் அமைப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் கொடுக்கப்படுகிறது. குத்தகை நிலம், சொந்த இடம் […]
பொருநை கண்காட்சி, ஓவியக்கண்காட்சி வ. உ. சி மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாவட்டம், வ.உ.சி மைதானத்தில் பொருநை கண்காட்சி, ஓவிய கண்காட்சிதொடக்க விழா நடைப்பெற்றது. இந்த விழாவை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்துள்ளார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி, தங்கம்தென்னரசு, தா.மோ. அன்பரசன்,மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் பெங்கலூர் பழனிச்சாமி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், கலெக்டர் சமீரன், ஆ.ராசா எம்.பி., செய்தி மக்கள் தொடர்புத்துறை […]
நீட் தேர்வு பயத்தில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியில் வசித்து வருபவர் அபிஷேக்(30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி 27 வயதுடைய ராசி. இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. ராசி கடந்த 2020 -ஆம் வருடம் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார். மேலும் அவர் உயர் மருத்துவ படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராவதற்கு மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் […]
கோவை நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை சென்றடைந்தார். கோவை வஉசி மைதானத்தில் கண்காட்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக ஓவியக் கண்காட்சியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்ட தொழில் முனைவோருடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “குணத்தால், […]
கோவை, நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவைக்கு வந்தார். கோவையில் நடக்கவுள்ள 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். இந்நிலையில் கோவை, வ.உ.சி. மைதானத்தில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘பொருநை’ அகழ்வு ஆராய்ச்சி கண்காட்சி இன்று தொடங்கப்படவுள்ளது .கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் ஓராண்டு […]
காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக மாணவி காதலுடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலன் மாணவியை தாக்கியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் சென்ற ஒரு வருடங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராம் மூலம் விளாங்குறிச்சி சார்ந்த என்ஜினீயர் பாலமுருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் தொலைபேசி வாயிலாகவும் காதலித்து வந்த நிலையில் […]
மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாளையம்பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் மதுக்கரை மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று வியாபாரத்தை முடித்து விட்டு இரவு வீடு திரும்பிய போது கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் […]
போலீஸ் போல நடித்து வாகன சோதனையில் ஈடுபட்டு லாரி டிரைவரிடம் பணத்தை பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயலில் வசித்த 45 வயதுடைய நாகராஜன் என்பவர் கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து ஒரிசா மாநிலத்திற்கு சோலார் பேனல் ஏற்றுக்கொண்டு லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த லாரி நேற்று அதிகாலை 1 மணி அளவில் மதுக்கரை அருகில் எல் அண்டு டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ரோட்டின் ஓரம் லாரியை […]
வீட்டிற்குள் நுழைந்து 14 பவுன் நகையை திருடி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் நெகமம் காட்டம்பட்டியில் வசித்து வருபவர் கிரி கதிரவேல்(54). இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து துக்க நிகழ்ச்சிக்கு போயிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிரி கதிர்வேல் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த […]
பொள்ளாச்சி – உடுமலை சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகின்ற நிலையில், சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி – உடுமலை சாலையில் நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. மதுரை, பழனி போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கியமான சாலை இதுதான். மேலும் கேரளா, கோவை செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் […]
கோவையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையே திடீரென்று முந்திச்செல்வது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை முற்றியதால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் பேருந்தை இயக்காமல் நிறுத்தியுள்ளனர். முந்திச்செய்வது யஹோடர்பாக ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செடிமுத்தூரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியதாவது, செடி முத்தூர் காலனியில் 70 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த காலனியில் பொதுக்கழிப்பிடம், தனிநபர் கழிப்பிடம் என்று எதும் இல்லை. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம். எனவே இதன் காரணமாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மிகவும் அவதிப்பட்டு […]
சாதி பெயரை சொல்லி பள்ளி மாணவர்களை திட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப் கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நல்லூத்துக்குளி சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து கொடுத்த மனுவில் கூறியதாவது, நல்லூத்துக்குளி மேற்கு காலனியில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22 குழந்தைகள் படித்து […]
கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு ஆனந்த் மகேந்திரா குழுமம் வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். இதனை நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அந்த பாட்டியிடம் சாவி வழங்கப்பட்டது. கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து பிரபலமானவர் கமலாத்தாள். இவருக்கு வயது 75. இவர் கோவை மாவட்டம் வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவரது சேவையை பாராட்டி பல அமைப்புகளும் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் மகேந்திர குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா […]
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் குவியும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5.50 கோடியில் 9 முடிவற்ற பணிகள் திறப்பு விழா நேற்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தமிழகம் முழுவதும் உள்ள […]
11 கடைகளில் கெட்டுப்போன இறைச்சியில் தயார் செய்யப்பட்ட 16 1/2 கிலோ ஷவர்மாவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட தேவ நந்தா(16) என்ற சிறுமி உயிரிழந்த நிலையில், 50-க்கும் அதிகமானோர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷர்மா, பிரியாணி தயாரிக்கும் அசைவ ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர். அதில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு […]
தேவி ஸ்ரீ பூமாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை கண் திறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்சமயம் புனரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த அம்மன் சிலையை அங்கு உள்ள ஒரு வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த அம்மன் சிலைக்கு வழக்கம் போல் பூஜைகள் நடந்தது. அப்போது அம்மன் சிலையில் […]
ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திரும்ப அடைக்க நகை திருட்டில் ஈடுபட்டதாக காதல் ஜோடிகள் வாக்குமூலம் கொடுத்தனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியில் வசித்து வருபவர் காளியம்மாள்(65). இவர் கடந்த மாதம் 28-ம் தேதி அன்று தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல நடித்து காளியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் நகையை பறித்து விட்டு […]
ரேஷன் கடையில் வாங்கும் பொருட்கள் விற்கபட்டால் ஸ்மார்ட் கார்டு ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் அத்தியவசிய பொருட்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாகவும் முழுமையாகவும் செல்கிறதா என்பதை உறுதி செய்யும் பொருட்டு தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை சரிபார்ப்பு பயோமெட்ரிக் மூலம் விவரங்கள் சரி பார்த்து பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையானது கடந்த 2020 -ஆம் […]
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அலுவலர், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தன் தலைமை தாங்கி உள்ளார். மேலும் போக்குவரத்து துறை மேலாளர்கள், பேருந்து உரிமையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தன் பேசியதாவது, பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு பேருந்துகள் […]
தனியார் ஆஸ்பத்திரியில் வெடிகுண்டு வைத்ததாக மிரட்டிய செவிலியரின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், பூசாரிபாளையம் நாயக்கர்தோட்டத்தில் வசித்து வருபவர் பெயிண்டர் மதிஒளி(41). இவருடைய மனைவி சரஸ்வதி(40) சிங்காநல்லூரில் உள்ள நவீன் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையில் மதி ஒளிக்கும், அவருடைய மனைவி சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை வந்துள்ளது. சரஸ்வதி தன்னுடன் சண்டை போடுவதற்கு நவீன் ஆஸ்பத்திரியில் உள்ள ஊழியர்கள் தான் காரணம் என்று மதிஒளி கருதி அந்த மருத்துவமனையில் உள்ள […]
பெண் மருத்துவரிடம் நகையை பறித்துச் சென்ற 3 மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், காரமடை காந்திநகரில் வசித்து வருபவர் ராம் தீபிகா(36). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி பிரிவில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த 24 -ஆம் தேதி அன்று மதியம் பணியை முடித்துவிட்டு ஸ்கூட்டியில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் 3 வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து சென்றார்கள். அப்போது திடீரென்று அவர் அணிந்து […]
தனது வீட்டிற்கு கரண்ட் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒரு பெண் மகள், மகனுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். கோவை மாவட்டம், அன்னூர் அருகில் பூசாரிபாளையத்தில் வசித்து வருபவர் சுந்தரம். இவர் மனைவி நதியா. இவர்களுக்கு பட்டப்படிப்பு படிக்கின்ற ஒரு மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் நதியா நேற்று காலை தனது மகள், மகனுடன் கலெக்டர் அலுவலகம் வந்த நிலையில், அவர்கள் 3 பேரும் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பாக அமர்ந்து […]
குட்டியுடன் காட்டு யானை உயிரிழந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, வனக் கோட்டத்தில் உள்ள சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக நடமாடுகின்றது. தற்சமயம் அந்த வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டதால் உணவு, நீர்நிலைகளை தேடி காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் வேறு இடத்திற்கு கடந்து செல்கின்றன. இந்நிலையில் சிறுமுகை வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர், கடந்த 24-ஆம் தேதி சிறுமுகை வனச்சரகம், மோதூர், பெத்திக்குட்டை, காப்புக்காடு, இரட்டை கண் பாலம் சரக வனப் பகுதிகளில் […]
கோவையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளியை அடுத்த தொண்டாமுத்தூர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே சிறுவர்கள் விளையாடுவதற்கு பூங்கா ஒன்று இருக்கிறது. இந்த பூங்காவில் பிரதீஷ் – சுகன்யா தம்பதியின் மகன் லக்சன் ஐந்தாம் வகுப்பு படித்துவரும் 10 வயது சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்தான்.பூங்காவில் பராமரிப்பு சில நாட்களாக இல்லை என கூறப்படுகிறது. அங்கே மின் விளக்குகளுக்கு […]
கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் சரிவர எரியாததால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். கோவை-பொள்ளாச்சி இடையேயான மெயின் ரோட்டில் கிணத்துக்கடவு இருக்கின்றது. அதை சுற்றி நிறைய கிராமங்கள் இருக்கின்றன. அங்கு செல்லும் கிராம மக்கள் கிணத்துக்கடவு இறங்கி தான் அவர்கள் கிராமத்திற்கு செல்வார்கள். இதனால் கிணத்துக்கடவு ரோட்டில் எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் சென்ற சில வருடங்களுக்கு முன்பாக கோவையிலிருந்து கிணத்துக்கடவு வழியாகச் செல்லும் சாலை நான்கு வழி […]
மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அருகே இருக்கும் வடசித்தூர் பள்ளிவாசல் அருகில் வாழ்ந்து வந்தவர் பெயிண்டர் சாலமன் ராஜ். இவருக்கு சரஸ்வதி பிரேமா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் இருக்கின்றனர். காந்திபுரம் பகுதியில் சென்ற 20 ஆம் தேதி சாலமன் ராஜ் பெயிண்ட் வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது கொண்டம்பட்டி அருகே நிலை […]
பொள்ளாச்சியில் தப்பி ஓடிய கைதியை சில மணி நேரத்திலேயே போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கருமாபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பரமசிவம். இவரின் உறவுக்கார பெண்ணுடன் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் தவறாக பழகியதால் பரமசிவம் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று மாணிக்கம் மற்றும் பரமசிவன் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மாணிக்கம் பரமசிவத்தை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகின்றது. இதுகுறித்த […]
தமிழ்நாடு அரசு கோவையை புறக்கணிப்பது தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையை எப்போதுமே திமுகவின் பிரஸ்டீஜ் பிரபலமாக பார்த்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தல் இதற்கு ஒரு உதாரணம். மாநிலம் முழுவதும் கணிசமான இடங்களை திமுக பெற்று இருந்தாலும் கோவையில் உள்ள 10 இடங்களில் 9 அதிமுகவும் ஒன்றில் அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவின் வெற்றிவாகை சூடியுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்டாலின் இந்த அரசு […]
கோவை மாவட்டத்தில் மூன்று இடங்களில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. கோவை மாவட்டத்தில் மூன்று இடங்களில் புதிதாக 252 கோடி மதிப்பிலான மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. அவை கோவை காளப்பட்டி ரோடு சந்திப்பிலிருந்து துடியலூர் ரோடு சந்திப்பு வரை 1.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.60 கோடியே 40 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. சிங்காநல்லூர் உழவர் சந்தை முதல் ஜெயசாந்தி தியேட்டர் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.140 கோடியே 80 லட்சம் […]
தற்காலிக செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக அமர்ந்து பணி நீடிப்பு செய்யக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கொரோனா காலகட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு பணி ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் பணியில் இருந்து விலகுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளார்கள். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் செவிலியர்கள் நேற்று கோவை ஆட்சியர் […]
கோதவாடியில் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க செயின், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் உள்ள கோதவாடியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு கோதவாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தினமும் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கோவில் பூசாரி பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் கோவிலை திறக்க வந்தபோது கோவில் பூட்டு […]