மெக்சிகோவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வட அமெரிக்கா நாட்டில் மெக்சிகோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:05 மணிக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கோகன் மாகாணத்தின் எல்லைக்கு அருகில் 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் […]
Tag: சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பெரு நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5-ஆக பதிவானது. பெரு என்ற தென் அமெரிக்க நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நாட்டின் வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 என்று பதிவாகியிருக்கிறது. நாட்டின் புவியியல் ஆய்வு மையமானது, அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்திருக்கிறது. மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானாலும், சுமார் 112 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததால், அதிக சேதங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தெற்கு பகுதியில் தொடர்ந்து இரண்டு முறை மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் தெற்கு பகுதியில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியிருப்பதாக ஐரோப்பிய மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையமானது தகவல் தெரிவித்திருக்கிறது. ஹோர்மோஸ்கன் என்னும் மாகாணத்திலிருக்கும் பந்தர் அப்பாஸ் என்ற துறைமுகப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், துபாய் வளைகுடா பகுதிகளிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு, தெற்கு பகுதிகளிலும் அதற்கான அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.