கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பான விசாரணைக்காக தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் ஆஜராகி உள்ளனர். அதாவது, கனியாமூர் சக்தி பள்ளி முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கிருத்திகா உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
Tag: சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சீரமைப்பு பணியின்போது சாக்கு மூட்டையில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தார்.. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 17ஆம் தேதி வன்முறை ஏற்பட்டு பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக பள்ளியில் மறு சீரமைப்பு செய்யாமல் இருந்து வந்த நிலையில், […]
கள்ளக்குறிச்சி பள்ளியில் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட பொருட்களை ஊர் மக்கள் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி பள்ளி முன்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பல காவலர்களும் இதில் காயமடைந்தனர். இதில் பள்ளியில் உள்ள பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. குறிப்பாக பள்ளி பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அங்கு பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ள மேசை, […]