சீனாவின் கிழக்கே தைவான் நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலின்படி இது 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. தைவான் நாட்டின் கிழக்கே இருக்கும் தலைநகரான தைபேயிலும் நடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. பெரிய நடுக்கத்திற்கு பிறகு அவ்வப்போது சிறிய நடுக்கங்களும் ஏற்பட்டதாக தைவான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாதிப்பு விவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.
Tag: சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவில் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகராக கருதப்படும் லே நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலிருந்து 65 கி.மீ. தொலைவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவி அறிவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக […]
அமெரிக்க கண்டத்தின் பசிபிக் தீவுக்கு உட்பட்ட பகுதியில் தன்னாட்சி குடியரசாக உள்ள பலாவ் நாட்டில் மெலிகியோக் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தென்கிழக்கே 1,165 கி.மீ. தொலைவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 5.01 மணியளவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 50 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]
ஈரான் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 5 பேர் பலியாகியுள்ளனர். ஈரான் நாட்டில் தெற்கே ஹார்முஜ்கன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென கூடுதலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்டுள்ளது. அதன்படி முதல் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது தரைப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சில மணிநேரம் கழித்து இரண்டாவது நிலநடுக்கமானது அளவுகோலில் 6.3 […]
மின்டோரா மாகாணத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்துள்ள மின்டோரா மாகாணத்தில் இன்று நள்ளிரவு 1.12 மணி அளவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 34 கி.மீ தொலைவிலும் 74 கி.மீ ஆழத்திலும் மையமாக கொண்டுள்ளது. இந்த தகவலை புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் […]