Categories
தேசிய செய்திகள்

சசிகலா உடல்நிலை… மீண்டும் பரபரப்பு தகவல்…!!!

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் சுவாசப் பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலாவிற்கு,மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை 278 ஆக இருப்பதால் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எடப்பாடி மக்களால் முதல்வர் ஆகல…. எல்லாமே சசிகலா தான்… எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி …!!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா விடுதலை செய்யப்பட்டார். சசிகலா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விவாதங்கள், அதிமுக – சசிகலா என சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக அதிமுகவில் எந்த மாதிரியான மாற்றம் வரும் ? என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அதிமுக தலைமை சசிகலாவுக்கு ஆதரவாக  செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனாலும் கூட்டணியில் இருப்பவர்கள் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சற்றுமுன் சசிகலா உடல்நிலை…. மருத்துவமனை பரபரப்பு அறிக்கை …!!

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சசிகலா பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலாவுக்கு 6 நாட்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளது. சசிகலாவுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுபட்டு வருவதாக விக்டோரியா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி வல்லவராக இருக்கலாம்…. ஆனால் இங்கு வேண்டாம்… கருணாஸ் பரபரப்பு பேட்டி …!!

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என்பது தெரிந்த விஷயம் தான். பிரதமர் மோடியின் விருப்பத்திற்கு மாறாக வேறு ஒருவரை முதல்வராக கொண்டுவந்தவர் சசிகலா. அதிமுக தலைமை சசிகலாவிடம் சென்றுவிடக் கூடாது என மோடி, அமித்ஷா கவனமாக இருந்தனர். கூவத்தூரில் என்ன நடந்தது என அங்கிருந்த அனைவருக்கும் தெரியும். அதிமுகவிற்கு பின் பாஜக  இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, உண்மை ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“விரைவில் மக்களை சந்திப்பேன்”…. சசிகலா அதிரடி…!!!

சசிகலா தனது உடல்நிலை சரியானதும் விரைவில் மக்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார். சசிகலா நேற்று கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானார். அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சீராக உணவு அருந்துவதாகவும், நடப்பதாகவும் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது. சசிகலா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்  என்றும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. வருகிற 30-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா”…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை இருந்த சசிகலா தண்டனை முடிவடைந்து நேற்று விடுதலையானார். இதை அடுத்து இவர் அரசியலுக்கு வருகை தந்தால் பெரிய மாற்றங்கள் வருமா என்று மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவின் விடுதலை மாற்றங்களை ஏற்படுத்துமா? மேலும் சசிகலா அதிமுகவில் இணைவாரா என்று பல கேள்விகள் எழுப்பப் பட்டது. இதற்கு அதிமுகவில் சசிகலா இணைவதற்கு சாத்தியமில்லை என்று முதல்வர் திட்டவட்டமாகக் கூறினார். அதிமுகவில் பலர் சசிகலா வருகையால் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவுக்கு அடுத்த ஆப்பு ரெடி… பரபரப்பு செய்தி…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா நேற்று விடுதலை ஆன நிலையில் அவருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலை தமிழக அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் பொதுவாக விடுதலையாகும் ஒருவருக்கு விடுதலை சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும். ஆனால் நேற்று சசிகலா விடுதலையானபோது சிறைத்துறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சசிகலாவுக்கு அடுத்த ஆபத்து…?? – பரபரப்பு…!!

சசிகலா அமலாக்கத்துறை கடிதங்களுக்கு பதிலளிக்காத நிலையில் தற்போது அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா 4 ஆண்டு சிறை தணடனைக்கு பிறகு நேற்று விடுதலையானார். இதையடுத்து பொதுவாக விடுதலையாகும் ஒருவருக்கு விடுதலை சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும். ஆனால் நேற்று சசிகலா விடுதலையான போது சிறைத்துறை அதிகாரிகள் அவரிடம் விடுதலை சான்றிதழையும், அமலாக்கத் துறை நோட்டீசையும் வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவை சந்திக்கப்போகும் அமைச்சர்கள்…? வெளியான தகவல்..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் சிலர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா 27 ஆம் தேதியான இன்று விடுதலையானார். அதைத்தொடர்ந்து அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருக்கு கொரோனா  உறுதியாகி இருப்பதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை சந்திக்கும் முக்கிய அமைச்சர்கள்… அதிமுகவில் புதிய பூகம்பம்…!!!

தமிழகத்தில் அதிமுக வின் முக்கிய அமைச்சர்கள் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து இன்று விடுதலையானார். இந்நிலையில் அதிமுக வின் முக்கிய அமைச்சர்கள் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் சசிகலா வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஊர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆதரவாளர்களை சந்திப்பார் சசிகலா… டிடிவி.தினகரன் பேட்டி…!!!

தனது ஆதரவாளர்களை சசிகலா கட்டாயம் சந்திப்பார் என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலை தமிழகத்தில் அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அதிமுகவை மீட்டெடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“சசிகலா சென்னை வருகை எப்போது”…? டிடிவி தினகரன் பதில்..!!!

சசிகலா எப்போது சென்னை வருகிறார் என்பது குறித்து டிடிவி தினகரன் பதிலளித்தார் . சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா இன்று காலை சரியாக 11 மணிக்கு விடுதலையானார். இவர் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வருகிறார். தற்போது இவரது உடல்நலம் சீராகவுள்ளதாகவும், செயற்கை சுவாசக் கருவிகள் நீக்கப்பட்டு தாமாக சுவாசித்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து இவர் எப்போது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா வருகையை EPS, OPSகொண்டாடுறாங்க…! ”அதிமுகவை கைப்பற்றுவோம்”… டிடிவி அதிரடி பேட்டி …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா இன்று விடுதலை பெற்றார். அவர்க்கும் கொரோனா தொற்று இருப்பதால் பெங்களுருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  சசிகலா அதிகாரபூர்வமாக விடுதலை ஆகி விட்டார்கள். அந்த மகிழ்ச்சியான செய்தியை எங்களது தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரிவிக்கின்றேன். மருத்துவர்களைப் பார்த்துவிட்டு சசிகலாவை எப்போது நாங்கள் அழைத்துச் செல்லலாம் என்பதை விவாதித்து, அவர்களின் ஆலோசனை பெற்று ஓய்வு தேவைப்படும் என்றால் ஓய்வு […]

Categories
மாநில செய்திகள்

விடுதலையானார் சசிகலா… எப்போது தமிழக வருகிறார்?…!!!

சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்று விடுதலையானார். தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது . இந்நிலையில், சசிகலாவின் உடல்நிலை தற்போது முன்னேறியுள்ளதாகவும், சுவாசக் கருவிகள் உதவியின்றி அவர் சுவாசிப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து சசிகலா உடனடியாக இன்று தமிழகம் வருவாரா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் இதுதொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: சசிகலா விடுதலை – 4ஆண்டு தண்டனை முடிவு …!!

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம் பரப்பன அக்ரகாரா சிறைச்சாலை உதவி கண்காணிப்பாளர் லதா கோப்புகளை கொண்டு வந்து சசிகலாவிடம் கையொப்பம் வாங்கினார். அதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கக் கூடிய சசிகலாவின் உடைமைகள் அவருடைய உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. விடுதலைக்குப் பிறகும் கூட நாளை முதல் தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையிலே இன்னும் […]

Categories
மாநில செய்திகள்

இன்று விடுதலையாகிறார் சின்னம்மா… இனி தான் ஆட்டம் ஆரம்பம்…!!!

தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா சிறை வாசத்தை முடித்து பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு விடுதலையாக உள்ளார். நீண்ட நாட்களாக தமிழக ஊடங்களில் எழுந்த, “சசிகலா விடுதலைக்கு பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா?” என்ற கேள்விக்கு விடை […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சசிகலாவை வரவேற்று சுவரொட்டி…! கலக்கிய நெல்லை அதிமுக…. ஒன்றிணைந்த கழகம் …!!

சசிகலாவை வரவேற்கும் விதமாக நெல்லையில் அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, கேடிசி நகர், தச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதிமுகவை வழிநடத்த வருகைதரும் பொதுச் செயலாளர் அவர்களே வருக, வாழ்க, வெல்க, என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுகவை சேர்ந்த எம்ஜிஆர் மன்ற மாநகர மாவட்ட இணைச் செயலாளர் திரு சுப்ரமணிய ராஜா கூறுகையில், தங்களுக்கு எப்போதுமே சின்னம்மா தான் பொதுச்செயலாளர் என்றும் திமுகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரபரப்பு….! இன்று சசிகலா விடுதலை… எதிர்பார்ப்பில் கழகத்தினர் …!!

இன்று காலை சரியாக 10 மணிக்கு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய சசிகலா விடுதலை செய்யப்பட இருக்கின்றார். பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறைச்சாலையிலிருந்து உதவி கண்காணிப்பாளர் லதா கோப்புகளை கொண்டு வந்து நேரடியாக விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய சசிகலாவிடம் கையொப்பம் வாங்கி சிறைத் துறையின் ஆவணங்கள், கோப்புகளில் கையெழுத்து வாங்குகின்றார். அதனைத் தொடர்ந்து சிறையில் இருக்கக் கூடிய சசிகலாவின் உடைமைகள் அவருடைய உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. விடுதலைக்குப் பிறகும் கூட நாளை முதல் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடே…”இன்று சசிகலா விடுதலை”… அலரும் போயஸ் கார்டன்… திக்..திக்..திக்..!!

பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா ஜனவரி 27,. இன்று விடுதலையாக உள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா உடல்நிலை மோசமான காரணத்தினால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அங்கு அவருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று விடுதலையாகும் சின்னம்மா…! உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் …!!

பெங்களூருவில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொற்று அறிகுறிகள் நீங்கி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை சிறைத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று முறைப்படி அவரை விடுவிக்கும் ஆவணங்களை அவரிடம் வழங்குகின்றனர். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் மருத்துவமனையில் இருந்து சென்னை வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் […]

Categories
தேசிய செய்திகள்

“சசிகலா விடுதலையாகும் நேரம்”… வெளியான அறிவிப்பு..!!

4 ஆண்டுகால சிறைவாசத்தில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவருடைய நான்கு ஆண்டு கால சிறை தண்டனை என்பது நாளையோடு நிறைவடைய இருக்கின்றது. இதற்கிடையே சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர்க்கு பெங்களூர் விக்டோரியா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சசிகலா நாளை காலை 10.30 மணிக்கு விடுதலை – வெளியானது அறிவிப்பு …!!

நாளை காலை 10.30மணிக்கு சசிகலா விடுதலை செய்யப்படுகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவருடைய நான்கு ஆண்டு கால சிறை தண்டனை என்பது  நாளையதோடு நிறைவடைய இருக்கின்றது.இதனிடையே சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர்க்குப்  பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு”…? மத்திய அரசுக்கு மனு..!!

சசிகலாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி வழக்கறிஞர் ராஜராஜன் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று நாளை பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆக உள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களாக அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதை தொடர்ந்து அவருடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திட்டமிட்டபடி… ஜனவரி 27ல் விடுதலையாகிறார் சசிகலா…!!

திட்டமிட்டபடி ஜனவரி 27இல் சசிகலா விடுதலை என்பது உறுதியாகியுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா 27ஆம் தேதி விடுதலை ஆக இருக்கிறார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 27ஆம் தேதி விடுதலை சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்படுவதாக செய்திகள் […]

Categories
தேசிய செய்திகள்

“விடுதலையாகிறார் சசிகலா”… பின்பற்றவேண்டிய விதிமுறைகள்… கர்நாடக அரசு அறிவிப்பு..!!

சசிகலா விடுதலை ஆகும் நாளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கர்நாடக உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. வரும், 27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என தெரிகிறது. அன்றைய தினம் ஏராளமான தொண்டர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் கூடுவார்கள் என்பதால், அவர்களை சிறை எல்லையிலேயே தடுத்து நிறுத்த முடிவு செய்துள்ளனர். வழக்கமான கைதிகளுடன் விடுதலை செய்யாமல், பாதுகாப்பு கருதி தாமதமாக விடுதலை செய்ய உள்ளனர். பிற கைதிகளை, இரவு 7.30 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் டெல்லி பயணம், சசிகலா உடல்நிலை… சீமான் சந்தேகம்…!!!

பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகளாக சசிகலா உடல்நிலை நன்றாக இருந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது சந்தேகம் ஏற்படுத்துவதாக சீமான் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு கடந்த 19 ஆம் தேதி திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவக்குழு பெங்களூரு சிறைக்கு விரைந்தது. அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பந்தாடப்படும் சசிகலா… பெரிய சதி நடக்குது…. கொரோனா வந்தது எப்படி ? பரபரப்பு குற்றசாட்டு …!!

சசிகலாவை  விடுதலை செய்யக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறதோ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விடுதலையாக உள்ள நிலையில் திடீரென கொரோனா பரவியது எப்படி என அனைத்து தரப்பினருக்கும் சந்தேகம் எழுப்புவதாக தெரிவித்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவமனைகளை மாற்றி மாற்றி பந்தாடுவது ஏன் ? என்பதற்கு கர்நாடக அரசும், தமிழக முதலமைச்சரும் பதிலளிக்க வேண்டுமென பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் விடுதலையாகும் காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்… விக்டோரியா மருத்துவமனை தகவல்..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. கடந்த புதன்கிழமை மாலை மூச்சுத் திணறல் அதிகமானதால் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இந்நிலையில் பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக சாதனங்கள் இயங்காததால் சசிகலா நேற்று முன்தினம் விக்டோரியா […]

Categories
தேசிய செய்திகள்

சசிகலா வெளிய வர… இன்னும் 14 நாட்கள் ஆகும்… வெளியான பரபரப்பு தகவல்…!!!

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா 14 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவக்குழு பெங்களூரு சிறைக்கு விரைந்தது. அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று, கடும் நிமோனியா – மருத்துவமனை நிர்வாகம் தகவல்…!!

சசிகலா நுரையீரல் தொற்று மற்றும் கடும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து விக்டோரியா மருத்துவமனையில் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்ட போது அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சசிகலாவின் உடலில் சர்க்கரை அளவு கூடி இருப்பது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சசிகலா உடல்நிலை சீரியஸ்… பரபரப்பு அறிக்கை…!!!

சசிகலாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை பரபரப்பு அறிக்கையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று முன்தினம் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மருத்துவக்குழு பெங்களூரு சிறைக்கு விரைந்தது. அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா உடல்நிலை பாதிப்பு…. புதுக்குண்டை தூக்கி போட்ட வக்கீல்… விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம் …!!

சசிகலா விடுதலையாகப்போகும் நிலையில் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் சசிகலாவுடன் சுதாகரன், இளவரசி போன்றோரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வரும் ஜனவரி 27-ம் தேதியன்று சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கிடையில் நேற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு…” சசிகலா மருத்துவமனையில் இருப்பார்”… வெளியான தகவல்..!!

சசிகலா அடுத்த 3 நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் இருப்பார் என்று இயக்குனர் மனோஜ் கூறியுள்ளார். அரசு மருத்துவமனை இயக்குநர் மனோஜ் கூறியதாவது: “சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. அவர் காலை உணவு அருந்தினார். எழுந்து நடந்தார். மூன்று நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் அவர் இருப்பார் என தெரிவித்துள்ளார். மேலும் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கண்காணிப்புக் குழுவில் சசிகலா வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நோயாளி அல்ல என்றும்” […]

Categories
தேசிய செய்திகள்

“சசிகலா சிகிச்சையில் சந்தேகம்”… மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா உடல் நலம் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாகவும் இவருக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக இருப்பதால் அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சி பொதுச் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சசிகலாவுக்கு கடந்த ஏழு நாட்களாக காய்ச்சல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சசிகலா உடல்நல பாதிப்பு… பரபரப்பு புகார்…!!!

சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகார் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தீவிர சிகிச்சைக்கு சசிகலா தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்…!!!

சசிகலாவுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் தீவிர சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சசிகலா உடல்நிலை… மருத்துவமனை பரபரப்பு அறிக்கை…!!!

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவின் தம்பி மகன்… பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

சசிகலாவை பார்க்கவும் அவருக்கு அளிக்கப்படும் பரிசோதனைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பெங்களூரு சிறைக்கு விரைந்தனர். அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: சசிகலாவின் உயிருக்கு ஆபத்து… பரபரப்பு தகவல்…!!!

சசிகலாவுக்கு சரியாக சிகிச்சை தராததால் அவரது உயிருக்கு ஆபத்து என சசிகலாவின் சகோதரர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பெங்களூரு சிறைக்கு விரைந்தனர். அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு […]

Categories
மாநில செய்திகள்

மூச்சுத்திணறலால் அவதிப்படும் சசிகலா… மருத்துவமனையில் அனுமதி…!

சிறையிலிருந்த சசிகலாவுக்கு இன்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தண்டனை காலம் முடிந்து, வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்தார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன்பின் சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவர்கள் சசிகலாவை பரிசோதனை செய்தனர். அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்ததால் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சசிகலா மருத்துவமனையில் அனுமதி… தீவிர சிகிச்சை… அதிர்ச்சி…!!!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் அவருக்கு திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பெங்களூரு சிறைக்கு விரைந்தனர். அங்கு அவருக்கு லேசான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு… அதிர்ச்சி…!!!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி இரவு 7 மணிக்குமேல் விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியாகியது. ஆனால் அதில் சிறிய மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. சசிகலா விடுதலை செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு விடுதலை […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா விடுதலையில் சின்ன மாற்றம்… வெளியான புதிய அறிவிப்பு…!!!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா விடுதலை செய்யப்படுவது எப்போது என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி இரவு 7 மணிக்குமேல் விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியாகியது. ஆனால் அதில் சிறிய மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. சசிகலா விடுதலை செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு ஈபிஎஸ் வச்ச செக்… மொத்த ஆட்டமும் குளோஸ்…!!!

ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகும் அதே நாளில் ஜெயலலிதா நினைவிட பிறப்பை இபிஎஸ் வைத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுகிறார். அதனால் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திப்பதற்கு டெல்லி பயணம் சென்றிருந்தார். இதனையடுத்து ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 27 சசிகலா விடுதலை… வழக்கறிஞர் தகவல்..!!

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேருக்கும் உச்ச நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது 10 கோடி அபராதம் நீதிமன்றத்தில் செலுத்திய உள்ள நிலையில் அவர்கள் விடுதலை ஆவதற்கான தேதியை தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை… முதல்வர் அதிரடி…!!!

சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சசிகலா வருகின்ற ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆகிறார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா, இளவரசி, விடுதலை தேதி அறிவிப்பு..!!

சசிகலா இளவரசி விடுதலை குறித்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா நன்னடத்தை காரணமாக ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆகிறார் என்ற சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இளவரசி விடுதலை செய்தியும் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இவ்வுலகில் குற்றவாளியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனை காலம் முடிவடைகிறது. இதில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் விதித்த அபராதத் தொகையை செலுத்தி விட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா, இளவரசி விடுதலை… வெளியான பரபரப்பு தகவல்…!!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் இளவரசி விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா நன்னடத்தைக் காரணமாக ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகிறார் என சிறை நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இளவரசி விடுதலை தேதியையும் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.இவ்வழக்கில் குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது தண்டனைக்காலம் இம்மாதத்தோடு முடிவடைகிறது. இதில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றம் விதித்திருந்த அபராதத் […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாஃபியா யார்? – குருமூர்த்திக்கு டிடிவி தினகரன் பதிலடி …!!

சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் சசிகலாவை பற்றி குருமூர்த்தி பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இதற்க்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டனங்கள் எழுந்த நிலையில் அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், துக்ளக் விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப் பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை எதிர்க்க சசிகலா வேண்டும்… குருமூர்த்தி பேச்சு…!!!

அதிமுகவை எதிர்க்க சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என குருமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜாதி கட்சிகள் உருவாகத் திராவிடமே காரணம். பிராமண எதிர்ப்பு தான் ஜாதி கட்சி உருவாகக் காரணம் என்று துக்ளக் விழாவில் பேசிய குருமூர்த்தி கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா நடந்தது. இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா கலந்து கொண்டு பேசினார். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, “யார் தேசியத்தை விரும்பிகிறார்களோ […]

Categories

Tech |