மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்த மற்றொரு சாதனையையும் ரோஹித்சர்மா காலி செய்ய தயாராக இருக்கிறார்.. 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் […]
Tag: சச்சின்
இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார். ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகவும் அபாரமாக செயல்பட்டு வருகிறது. இந்த அணி 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இதற்கு இந்த அணியிலுள்ள தினேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டம் தான் மூலகாரணமாக உள்ளது. இவர் மிகவும் சூப்பராக விளையாடி பெஸ்ட் பினிஷராக செயல்பட்டு வருகிறார். […]
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின், கமல் உள்ளிட்டவர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா என […]
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு சச்சின் டுவிட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். இதையடுத்து ரஜினிக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். There are very few actors who are able to create […]
ஒவ்வொரு முறையும் தங்களின் படத்தின் மூலம் அதிர்வலையை உருவாக்கும் தலைவர் ரஜினிக்கு வாழ்த்துக்கள் என்று சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை வென்றதற்க்கு கிரிக்கெட் வீரர் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ” தங்கள் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக்குறைவு. அதனை ரஜினிகாந்த் ஒவ்வொருமுறையும் செய்து காட்டியுள்ளார். தொடர்ந்து தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். […]
வெளிநாடுகளில் ரகசியமாக பல கோடி ரூபாய் முதலீடு மற்றும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்தவர்கள் பட்டியலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெயரும் இடம்பெற்றுள்ளது.. கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணங்கள் வெளியாகியுள்ளது.
ரத்த தானம் மிகவும் சிறந்த தானமாக கருதப்படுகின்றது. ரத்தம் பெறுபவருக்கு மட்டுமில்லாமல், அதை கொடுப்பவருக்கும் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் அவசர தேவைக்கான ரத்தம் இன்னும் நான்கு நாட்களில் முடிந்துவிடும் அபாயம் உள்ளதாக பத்திரிகை ஒன்றில் வெளியானது. இதை குறிப்பிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பை மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலை இருக்கக் கூடும் என்று கூறினார். எனவே இயன்றவரை அனைவரும் ரத்ததானம் செய்ய வேண்டும் […]
சச்சின் விமர்சனம் குறித்து டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் “சிறப்புரிமை பெற்ற மக்கள் உரிமைகளுக்காக அணிவகுக்கவோ போராடவோ மாட்டார்கள். அவர்களின் உலகம் பாதுகாப்பானது, சுத்தமானது மற்றும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே உருவாக்கப்பட்ட சட்டங்களினால் ஆளப்படுவது” என்ற எழுத்தாளர் ஜான் கிரிஷமின் வாசகம் அதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இந்த பத்திரிக்கை விமர்சித்த இப்பதிவை பார்த்த நெட்டிசன்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் உனக்கென்னப்பா என்ற வசனத்தை குறிப்பிட்டு, […]
இளசுகளே மண்ட பத்திரம் என்று சச்சின் தெண்டுல்கர் இளம் வீரர்களுக்கு அறிவுரை கொடுக்கும் வகையில் ட்விட் செய்துள்ளார். கடந்த 24 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியை சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டி ஒரு விழிப்புணர்வு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய அந்தப் போட்டியை சச்சின் இதில் சுட்டி காட்டி இளம் வீரர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். சச்சினின் ட்விட்டர் பதிவில், போட்டி வேகமாகிவிட்டது, ஆனால் பாதுகாப்பானதாக உள்ளதா? சமீபத்தில் […]
சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டு காலம் விளையாடி கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 68 அரை சதங்களையும், 51 சதங்கள் அடித்தவர். கிரிக்கெட் உலகில் இவரின் சாதனைகளை இதுவரை எவரும்முறியடிக்கவில்லை. கொரோனா காரணத்தால் வீட்டில் முடங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர் அவ்வபோது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் மழையில் நனைந்தபடி உள்ள புகைப்படங்களை […]
ரஃபேல் விமானம் இந்திய ராணுவத்தின் வான்படைக்கு கூடுதல் பலம் என பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ விமானப் படையில் ரபேல் விமானம் இடம்பெற்றது தேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டு ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவான விளக்கங்களும் அவ்வபோது சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியாகி வருகின்றன. இந்நிலையில் பல பிரபலங்களும் இந்த ரபேல் விமானம் குறித்து தங்களது கருத்துக்களை […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன் சச்சின் டெண்டுல்கர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் 2011 உலக கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர் கேரி கிறிஸ்டன். இவர் சமீபத்தில் தனியார் விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பொழுது இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி பற்றியும் சச்சின் டெண்டுல்கர் பற்றியும் தனது நினைவுகளை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நான் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட […]
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களில் சச்சினை விட ரோஹித் சர்மா தான் சிறந்தவர் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் வெகுகாலமாக ஆரம்ப பேட்ஸ்மேனாக சச்சின் களமிறங்கி விளையாடியவர். அவருக்கு பிறகு ரோஹித் ஷர்மா 2013 லிருந்து தற்போது வரை தொடக்க வீரராக களத்தில் இறங்கி வருகின்றார். சச்சின் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தவர். ரோஹித் ஷர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார் […]
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உறுதி அளித்துள்ளார். அப்நாலாயா என்ற தன்னார்வ அமைப்பு இந்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில், எங்களது அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களின் உணவு செலவை ஏற்றதற்காக சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்தது. மேலும் ஒரு மாதத்திற்கு நாள்தோறும் 5,000 பேருக்கு உணவளிக்க சச்சின் டெண்டுல்கர் முன் வந்துள்ளார்” […]
இந்தியாவில் கொரோனோ வைரஸால் 170க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 11ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசின் உத்தரவை ஏற்று அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். एक समाज के तौर पर हमारी ज़िम्मेदारी है कि हम में से जो लोग positive टेस्ट हुए है, […]
அகமதாபாத்தில் இருக்கும் மோதேரா கிரிக்கெட் மைதான திறப்பு விழாவுக்கு சச்சின் , கபில்தேவ்வை அழைக்காதது ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகின்ற பிப்ரவரி 24 , 25 என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோதேரா கிரிக்கெட் மைதானத்தை […]