தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தை வளமான, வலிமையான மாநிலமாகவும் அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றவும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சமூகம் மேம்பாட்டிலும், தனிமனித வளர்ச்சியிலும் கவனம் செலுத்தக்கூடிய வகையில் நாள்தோறும் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். அனைவரின் நலனை முன்னிறுத்தியே திட்டங்கள் தீட்டப்படுகிறது. இதுவரை 3,337 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். அறிவிப்புகளின் நிலை கண்காணிக்கப்பட்டு உரிய […]
Tag: சட்டசபை கூட்டத்தொடர்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடரில் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு வழங்கிய அதிமுக உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அம்மா உணவகங்கள் கவனிக்கப்படவில்லை என்றும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டோம் என்று பட்டியலை படித்தார். இது போன்ற பட்டியலை […]
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியிருக்கிறார். ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் தமிழ்நாட்டின் சட்டசபை கூடும் போது ஆளுநர் உரையாற்றுவது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்தின் தொடக்கத்திலும் சட்டசபை கூட்டமானது, இன்று தொடங்கியிருக்கிறது. அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில், நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநரின் உரையின் போது அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தார்கள். அதன் பின்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் […]
கொரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் இந்த முறை மீண்டும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்றன. ஆனால் மீண்டும் கொரோனா பரவும் நிலையில் கலைவாணர் அரங்கிலேயே இந்த கூட்டத்தொடரும் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10:00 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக ஆளுநராக பதவியேற்ற பின் ஆர்.என்.ரவி முதன்முறையாக உரையாற்ற இருக்கிறார். ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருக்கிறது. ஆகவே […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி ஆளுநர் பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற உள்ளது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி ஏற்க உள்ளனர். அவர்கள் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு வசதியாக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள சபாநாயகராக பிச்சாண்டியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் […]