தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் மூலம் நிதி விசாரணை நடைபெற்று என்னிடத்தில் அது வழங்கப்பட்டது. அது நேற்றைய தினம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, அது தொடர்பாக விவாதம் நடைபெற நான் முன்மொழிந்தேன். அதை தொடர்ந்து இங்கே இருக்கக்கூடிய மாண்புமிகு உறுப்பினர் பெருமக்கள் திரு. வேல்முருகன், ஈஸ்வரன்,ஜவஹருல்லா, திரு.சதன் திருமலை குமார், திரு.ராமச்சந்திரன், திரு.சின்னதுரை, […]
Tag: சட்டமன்றம்
ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனையில் பிரதாப் ரெட்டியையும் விசாரிக்க வேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்திருக்க கூடிய அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை […]
கடந்த 2018 மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை, அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்தும், பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும், அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. […]
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவது குறித்தும், கலந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எங்களுக்கு தகவல் வந்த அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எங்களுடைய ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்பாக மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து வந்திருக்கிறோம். அலுவல் […]
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது 107 வது அரசியல் சாசன சட்டத்தின் படி தன்னாட்சி பெற்ற கூட்டுறவு இணையம் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டு முறை தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது சங்க தேர்தல் நடைபெற்று கூட்டுறவு சங்கம் சிறப்பாக இயங்கி வந்தது. அவர் மறைவிற்குப் பின்னும் நடைபெற்றது. அதிமுக கொண்டுவந்த காரணத்தினாலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளின் […]
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அம்மா உணவகங்கள் கவனிக்கப்படவில்லை என்றும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டோம் என்று பட்டியலை படித்தார். இது போன்ற பட்டியலை படிக்க வேண்டும் என்றால் என்னிடம் எக்கச்சக்கமாக உள்ளது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஓமந்தூரார் […]
தமிழக சட்டமன்றம் வெட்டிமன்றமாகவும் புராணங்களை பாடும் மன்றமாகவும் செயல்படுவதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்றுவரும் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 220ஆவது குருபூஜை விழாவிற்கு வருகை தந்த முக்குலதோர் புலிபடை தலைவர் கருணாஸ் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் எனவும், பாராளுமன்ற வளாகத்திலேயே பிரதமர் மோடி தலைமையில் […]
தமிழக சட்டமன்ற வளாகத்தில் திடீரென்று ஒரு நபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்போது காவல் துறை தடுப்பு அருகே ஒரு நபர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயற்சி செய்தார். இதை கவனித்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை ஊற்றி அவரை பத்திரமாக மீட்டனர். முதற்கட்டமாக ஊடகத்துறையின் அடையாள அட்டையை காட்டி கலைவாணர் அரங்கத்திற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் அவரை […]
தமிழக சட்டப்பேரவையில் நாள்தோறும் பல்வேறு துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு சம்மந்தப்பட்ட துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி காலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. […]
தர்மபுரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதையடுத்து அவர் பேசியதாவது: “மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று மசோதாக்களின் நன்மைகள் குறித்து கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு திமுக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அவர்களது வீடுகளுக்கு முன் விநாயகர் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தேர்தல் வாக்குறுதி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். அதிமுக தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதா ? என்ற கேள்வியை எழுப்பிய முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கொரோனா நிவாரண நிதி நாலாயிரத்து கொடுத்துள்ள திமுக அரசு, தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத 14 வகையான மளிகைப் […]
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் என்பது தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், திருப்புவனம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர் பி உதயகுமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியிருந்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்துவதற்காகவே வெள்ளை அறிக்கை என்பது வெளியிடப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதலமைச்சர், பல்வேறு விஷயங்களில் கடந்த காலங்களில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறீர்களா ?என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். முன்னுரையில் […]
அதிமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பெரிய பட்டியலே இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டி பேசியிருக்கிறார். அதேபோல திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்திருக்கிறார். அதிமுக கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக என்ற கேள்வியை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்வைத்திருக்கிறார் முன்னுரையில் திட்டம் வரும் என்று கூறினீர்களே.. கொண்டு வந்தீர்களா என்ற கேள்வியும் அதிமுகவை நோக்கிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் வைத்திருக்கிறார்.
ஆன்லைன் ரம்மி போன்ற இணைய வழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து ஈடுபடுவதன் மூலம் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்களுடைய பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து விடும் அவலத்தை தடுத்துவிடும் விதமாக கடந்த நவம்பர் மாதம் அவசர சட்டத்திற்கான ஒப்புதல் தமிழக ஆளுநர் வழங்கியிருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்றைய கேள்வி நேரத்திற்குப் பிறகு இதற்கான சட்ட மசோதாவை துணை […]
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. திருவல்லிகேணி – சேப்பாக்கம் தொகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தைப் பொருத்தவரை தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைந்தார். திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி சாமி […]
புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் நிதி தாமதமாக கிடைக்கும் என்பதால் அரசின் செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால் அரசினுடைய அடுத்த மூன்று மாத செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய இன்று காலை புதுச்சேரி […]