திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,43,375 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 70.04% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் 88,274 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். மேலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எம். […]
Tag: சட்டமன்ற தொகுதி
ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மான்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,49,580 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 73.03% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்ட மான்ராஜ் தலா 70,475 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் […]
சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பாதுகாப்பு முன்னேற்பாடாக தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு […]
வந்தவாசி என்றாலே நினைவுக்கு வருவது கோரைப்பாய் நெசவும், வெண்குன்றம் கிராமத்தில் உள்ள தவளகிரி ஈஸ்வரர் கோவிலும் தான். வந்தவாசி தொகுதி விவசாயம் நிறைந்த இடமாகும். கடந்த 1952 ஆம் ஆண்டு தொடங்கி 2016ஆம் ஆண்டு வரை 16 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது வந்தவாசி தொகுதி. இதில் அதிக முறை திமுகவே வென்றுள்ளது. கடந்த தேர்தலில் திமுக சார்பில் அம்பேத்குமார் போட்டியிட்டு வென்றார். வந்தவாசியில் மொத்தம் 2,35,044 வாக்காளர்கள் உள்ளனர். 450 கோடி ரூபாய் செலவில் கடந்த 10 […]
சேலத்தில் , வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஏற்காடு தொகுதியில் , திமுக சார்பில் போட்டியிட மனு அளித்த வேளாண்துறையில் பணியாற்றி வந்த பெண் பணியிலிருந்து நீக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தில் ,தலைவாசல் பகுதியில் வேளாண் உதவி தொழில்நுட்ப மேலாளர் பதவியில் திலகவதி என்பவர் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த திலகவதி, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் ஏற்காடு தொகுதியில் போட்டியிடுவதற்கான மனுவை ,சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில், […]
தமிழகத்தின் வடமேற்க்கில் உள்ள தொகுதியான பாலக்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பி அன்பழகன். இவர் அதிமுக கட்சியில் ஒரு கிளை செயலாளர் என்ற நிலையிலிருந்து படிப்படியாக பல்வேறு கட்டங்களுக்கு உயர்ந்தவர். உயர்கல்வித் துறைக்கு அமைச்சராக தற்போது இருப்பவர். பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்றி பெற்றார்.போற்ற கள்ளி சிவன் கோயில், சென்றாய பெருமாள் சுவாமி கோவில்,கொலு மலை கோயில் போன்ற பல்வேறு பிரசித்திபெற்ற வழிபாட்டு தளங்களை கொண்ட ஒரு தொகுதி பலகோடுடகும். கேசர் குளி, தும்பல […]
காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட லிங்கத்தை வைத்து சிவன் கோவில் கட்டப்பட்ட காரணத்தினாலேயே இந்த ஊருக்கு சிவகாசி என்று பெயர் வந்தது. சிவகாசி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி. இந்த தொகுதியை பொறுத்தவரையில் கடந்த 1971 ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக இரண்டு முறையும் ,அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 1991ஆம் ஆண்டு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் இந்த தொகுதியில் ஒருமுறைகூட திமுக வெற்றி […]
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து சேப்பாக்கம் தொகுதி காலியானதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 10ம் தேதி காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் பிரிந்தது. ஜெ. அன்பழகனின் மறைவு திமுகவினரை […]