சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி சென்ற இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது சோளத்தட்டுகளுக்கு அடியில் 50 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சரக்கு ஆட்டோ ஓட்டுனர் […]
Tag: சட்ட விரோதமான செயல்
தடை செய்யப்பட்ட புகையிலைகளை விற்பனை செய்த குற்றத்திற்காக 150 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சூப்பிரண்டு கலைச்செல்வன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் காவல்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இந்த சோதனையின் போது தடைவிதிக்கப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா ஆகிய புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் அதை பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் […]
சட்ட விரோதமாக மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்த 23 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அதிக விலைகளுக்கு மது பாட்டில்கள் விற்பனை மற்றும் அதிக அளவில் சாராய விற்பனையும் நடைபெற்று வந்துள்ளது. இது பற்றிய தகவல் […]