ஜோதிடர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான்கொம்பு, தோல் ஆகியவற்றை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரெட்டியபட்டியில் மான்கொம்பு, தோல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜோதிடம் பார்த்து வந்த சுந்தரமூர்த்தி என்பவரது வீட்டில் மான் கொம்பு, ஆமை ஓடு, மான்தோல், நரிப்பல் ஆகியவை பதுக்கி வைத்து இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். […]
Tag: சட்ட விரோத செயல்
சட்டவிரோத செயலை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள்புரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று மனகாவலன் […]
நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தொடர்ந்து வரும் நிலையில் காவல்துறையினர் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் அருகில் உள்ள கீரம்பூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடை அருகில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய […]
சட்ட விரோதமாக மறைத்து வைத்திருந்த 2500 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் காவல்துறையினருக்கு துரிஞ்சல் ஆற்றின் கரையோரத்திலும், வசந்த கிருஷ்ணாபுரத்திலும் சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரல்கள், பாத்திரங்கள் மற்றும் மண்பானைகளில் 2500 லிட்டர் சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் சுமார் […]