கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மதாத்தனூர் கிராமத்திலிருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 2015ம் வருடம் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் துவக்கப்பள்ளி அதே இடத்திலும் உயர்நிலைப்பள்ளி கிராமத்திற்கு அருகில் குறிப்பிட்ட தொலைவில் 1 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புது கட்டிடம் கட்டப்பட்டு அமைக்கப்பட்டது. கடந்த 2019ம் வருடம் அப்போதைய முதலமைச்சர் இபிஎஸ் அவர்களால் இப்பள்ளி திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் பள்ளிகள் தனித் தனியாக இயங்கி வருகிறது. […]
Tag: சத்துணவு
தான் சேமித்த பணத்தில் அரசு பள்ளியில் படிக்கும் சிறுவன் மதிய உணவுக்கு காய்கறிகள் வாங்கி கொடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று மாணவர்களுக்கு சிறந்த கல்வியை கற்பித்தும் சத்துணவு வழங்கும் கூடமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் கோபிகிருஷ்ணா என்ற சிறுவன் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து பள்ளிக்கு 2 […]
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை அருகில் கவலைவென்றான் அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கிறது. இங்கு சத்துணவு சாப்பிட்ட 42 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். அதாவது இந்த பள்ளியில் நேற்று மதியம் 87 மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டனர். இதையடுத்து மதியம் 3:30 மணியளவில் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி, தலைசுற்றல் ஏற்பட்டது. அதன்பின் சில நிமிடங்களில் பல பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அருகிலுள்ள மங்களக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆசிரியர்கள் அழைத்து […]
சிறப்பாக பராமரிக்கப்படும் பள்ளிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழை வழங்கினார். கோவை மாவட்டத்தில் ஐ.எஸ்.ஓ தர சான்று வழங்க பள்ளிகளில் இயங்கும் சத்துணவு மையங்களில் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. இதில் சிறப்பாக பராமரிக்கப்படும் பள்ளிகளுக்கு சத்துணவு மையம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்களை கலெக்டர் சமீரன் வழங்கினார். மேலும் பணியின்போது இறந்த ஒத்தக்கால்மண்டபம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி சமையலர் விசாலாட்சி என்பவரது மகள் ஜோதிமணிக்கு சமையல் உதவியாளர் […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் சம்பவத் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு பணியில் தலித் பெண் பணியாற்றி வருகிறார். இவர் கையால் சமைத்த உணவை அரசு பள்ளி மாணவர்கள் சாப்பிட மறுத்துள்ளனர். இதனால் அவரை பணிநீக்கம் செய்து உயர் வகுப்பைச் சேர்ந்த வேறொரு பெண் சத்துணவு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அதன் பிறகுதான் மாணவர்கள் வழக்கம்போல் மதிய உணவை சாப்பிட தொடங்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குறித்து சமூக ஆர்வலர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மேலும் நசுக்கப்படுகின்றன […]
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த சூழலில் பள்ளிகள் அனைத்தும் முற்றிலுமாக மூடப் பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. பின்னர் பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் கீதாஜீவன், கொரோனா காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு […]
கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சமைத்த சத்தான உணவை வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முன்னதாக, அட்வகேட் ஜெனரல் ஆஜராகி 9- 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதில் ஏற்கனவே 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் நவம்பர் 1ஆம் தேதி 1-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதால், அவர்களுக்கு முட்டையுடன் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற சட்டசபையில் சத்துணவு சமையல் மற்றும் சமையல் உதவியாளர் ஆகியோருக்கு ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி அரசு அதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்பட்டியல் உயர்வை 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து நிறைய கோரிக்கைகளில் வந்ததால் இந்த கோரிக்கைகளை அரசு ஏற்று ஜனவரி 1-ஆம் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு மற்றும் பத்து முட்டைகளை வழங்க அனைத்து […]
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஊதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு நூர்ஜஹான் வலியுறுத்தியுள்ளார். சத்துணவு ஊழியர் பொதுச்செயலாளர் நூர்ஜஹான் ஓய்வு பெறும்போது குறைந்தபட்சம் பென்ஷன் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச பென்ஷன் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விருப்ப மாறுதல் கேட்கும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் கலந்தாய்வு முறையில் […]
இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவு பொருட்களை அவர்களது வீட்டிற்கு சென்று வழங்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு ஓரிரு மாநிலங்களில் அதிகரித்து வந்தாலும், பல மாநிலங்களில் சீராக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறப்பதற்கு தாமதமாகும் என்பதால், மாணவர்களின் கல்வி சம்பந்தமான தேவைகளை நிறைவேற்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா […]
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சத்துணவால் பயன்பெறும் மாணவர்களுக்கு உணவு பொருள்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஒருபுறம் ஏற்படுத்தி வர, இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி நிலையங்கள், மால்கள், தியேட்டர்கள், கோவில்கள் என அனைத்தும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மூடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு […]
தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு , ஒரே ரேசன் திட்டம் அமுலாகும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்றைய விவாதத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேசும் போது , தமிழகத்தில் நெல்லை , திருநெல்வேலியில் சோதனையை முறையில் அமுலாகி இருந்த ஒரே நாடு , ஒரே ரேசன் திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமுல் படுத்தப்படும் […]