சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் 50 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி ஹைதராபாத்திற்கு வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வைணவ ஆச்சார்யார் ராமானுஜரின் 216 அடி உயர சமத்துவ சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சனிக்கிழமை பிற்பகலில் டெல்லியில் இருந்து ஹைதராபாத்துக்கு தனி விமானம் மூலம் வந்து இறங்கினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பலரும் விமான நிலையம் வந்தனர். ஆனால் […]
Tag: சந்திரசேகர ராவ்
விவசாயிகள் போராட்டத்தின்போது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் இதனை வரவேற்றுள்ளனர். அந்தவகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் விவசாயிகள் போராட்டத்தின்போது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
பெட்ரோல்- டீசல் மீதான வாட் வரியை உயர்த்திய முட்டாள்தான் அதனை குறைக்க வேண்டும் என மத்திய அரசை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் ஆட்சி அமைந்ததிலிருந்தே வாட் வரி உயர்த்தப்படவில்லை. ஒரு பைசா கூட நாங்கள் உயர்த்தவில்லை. எந்த முட்டாள் நம்மிடம் வாட் வரியை குறைக்கச் சொல்வான்? வாட் வரியை உயர்த்திய முட்டாள்தான் அதைக் குறைக்க வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் மீதான செஸ் […]
ஹைதராபாத் தெலுங்கானாவில் ஏழை மக்கள் நலன் கருதி நோய் கண்டறியும் சோதனை மையங்களை அரசு தொடங்கியுள்ளது. ஹைதராபாத் மாநிலம் தெலுங்கானாவில் ஏழைகள் நலன் கருதி நோய் கண்டறியும் சிறிய சோதனை மையங்களை அரசு திறந்துள்ளது. அதில், அல்ட்ராசோனோகிராபி (யு.எஸ்.ஜி) போன்ற முக்கிய நோயறிதல் சேவைகள், எக்ஸ்-ரே போன்ற கதிரியக்க சேவைகள், ஈ.சி.ஜி (எலெக்ட்ரோ கார்டியோகிராபி) போன்ற அடிப்படை இருதய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். இதுகுறித்து அமைச்சர் மஹ்மூத் அலி செய்தியாளர்களிடம் பேசியதாவது, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் […]
தெலுங்கானாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தற்போது தெலுங்கானாவில் நோய் தொற்று பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் இதுவரை ஒருவர் மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். மேலும் 20,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காணொலி மூலம் மக்களை சந்தித்த அவர் கூறியதாவது, “ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தாமல் இருந்திருந்தால், நிலைமை மிகவும் மோசமாக மாறியிருக்கும் எனக் கூறினார். கொரோனா […]