சென்னை மாவட்டங்களில் சனிக்கிழமையான நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டங்களில் சனிக்கிழமையான நாளை (17.12.2022) பள்ளிகள் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9ஆம் தேதி விட்ட விடுமுறையை ஈடு செய்ய வெள்ளி கிழமை அட்டவணைப்படி நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வெள்ளிக் கிழமை பாடவேளையை பின்பற்றி இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tag: சனிக்கிழமை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கியது. எனவே கன மழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில் சென்னையில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 3ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதே போல மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 19ஆம் தேதி அன்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்வதற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை வரும் 19ஆம் தேதி ஆகும். வழக்கமாக இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை உண்டு. இந்த நிலையில் வேலை நடத்த போராட்டத்தை மூன்றாம் சனிக்கிழமை அன்று அறிவித்ததால் அன்று […]
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. இதற்கிடையில் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கனமழையின் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். மேலும் சில இடங்களில் […]
களைகட்டும் தீபாவளி ஷாப்பிங் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீபாவளி ஷாப்பிங் களைகட்டி வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் நேற்று முதலே துணிக்கடை, பட்டாசுக் கடைகளில் கூட்டம் குவியத் தொடங்கிவிட்டது. குறிப்பாக சென்னையில் தி.நகர், பாண்டி பஜார். குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உயர் கோபுரங்கள் அமைத்து போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி சனிக்கிழமை இன்று முதல் திங்கட்கிழமை அக்.24ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மற்றும் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆன்லைனில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் மட்டுமே அனுபவித்து வந்ததால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளதாக ஆய்வுகள் வெளியிடப்பட்டது. இதனால் விரைந்து பள்ளிகள் நேரடி முறையில் செயல்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால் நடப்பு கல்வியாண்டில் வழக்கம் போல் ஜூன் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. […]
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ங்களில் இன்று சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்வதற்காக இன்று அந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனால் தேர்வுக்கு குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உள்ளதால் பாடத் திட்டங்களை விரைந்து நடத்தி […]
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறை வழங்க பரிசீலிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதமும் கடுமையான கோடை காலம் ஆகும் இந்த காலத்தில் இந்தியாவில் வெயிலின் தாக்கம் சற்று தீவிரமாக இருக்கும். இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்கள் பள்ளிக்கு வர மிகவும் சிரமப் படுவதை கருத்தில் கொண்டு இனி வரும் […]
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறை வழங்க பரிசீலிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதமும் கடுமையான கோடை காலம் ஆகும் இந்த காலத்தில் இந்தியாவில் வெயிலின் தாக்கம் சற்று தீவிரமாக இருக்கும். இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்கள் பள்ளிக்கு வர மிகவும் சிரமப் படுவதை கருத்தில் கொண்டு இனி வரும் […]
அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் வேலைநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி இன்ஜினியரிங் கல்லுாரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நிறைவு பெற்று மீண்டும் வகுப்புகள் தொடங்கியுள்ளது. இந்த வகுப்புகள் ஜூன் 30 வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையிலும் அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாளாகும். ஆகவே மாணவர்கள் வருகைப்பதிவு குறையாமல் வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும். அடுத்த செமஸ்டர் தேர்வு ஜூலை 6ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் மாதத்தில் ஆவணங்கள் பதிவு அதிகம் இருக்கும் என்பதால், சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்களில் தமிழ்நாடு பதிவுச்சட்ட விதி 4 “சிறப்பு அவசரநிலை” அடிப்படையில் விடுமுறை கால ஆவணப்பதிவிற்கான கட்டணமான ரூபாய் 200 மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணப்பதிவிற்கான டோக்கன் அனைத்து வேலை நாட்களிலும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களின் ஆவணப் பதிவை உரிய […]
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் மக்கள் நலனுக்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]
சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை கட்டாயம் வாங்காதீர்கள். அப்படி வாங்கினால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். ஆனால் இரும்பு பொருளை தானமாக மற்றவர்களுக்கு சனிக்கிழமையில் வழங்கினால் கடன் தீரும் என்பது நம்பிக்கை. தீராத கடன் தீர சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம். சனி நீராடினால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அதாவது சனிக் கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். ஆனால் சனிக்கிழமையில் எண்ணெய் வாங்கக்கூடாது. எண்ணெய் […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விட வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. பின்னர் நிலைமை படிப்படியாக சீரடைந்த காரணத்தினால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வந்து செல்கின்றனர் . இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக தொடர் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளதால் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்த […]
ஹிட் சீரியல்களை சனிக்கிழமையும் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ரோஜா, பூவே உனக்காக, அன்பே வா, வானத்தைப்போல போன்ற சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றன. மேலும், டி.ஆர்.பியிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், அன்பே வா, பூவே உனக்காக, சித்தி-2 போன்ற சீரியல்களை சனிக்கிழமையும் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கேட்ட சீரியல் ரசிகர்கள் […]
அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அளித்து வந்தது. இதன்படி பள்ளிகள், கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. இதற்கிடையில் தீபாவளி விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. இந்தநிலையில் விடுமுறை நாட்களை ஈடுகட்டும் வகையில் அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை […]
தமிழகத்தில் பள்ளி வேலை நாட்களை 5 நாட்களாக குறைக்கவும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமை வரை செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதத்தில் போடப்பட்ட ஊரடங்கிலிருந்து தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரை மக்களின் அத்தியாவசிய தேவைகள் என்பது குறைந்த வண்ணமே இருந்தது. ஆனால் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் பல வகையான தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் முக்கியமானவை, பொது போக்குவரத்து அரசு அலுவலகங்கள் நூறு சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் போன்றவை ஆகும். இந்த தளர்வுகள் மக்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் […]