சபரிமலை கோயில் நடை இந்த வருடம் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சென்ற 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. சபரிமலை நடை திறப்பை முன்னிட்டு 13,000 காவல்துறையினர் 6 கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இப்போது “வெர்ச்சுவல் கியூ” வாயிலாக முன் பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கிடையில் ஐயப்பனை தரிசிக்க வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. வெறும் 6 நாட்களில் மட்டும் பக்தர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை தாண்டியது. இவ்வாறு பக்தர்களின் வருகை […]
Tag: சபரிமலை கோவில்
ஓணம் பண்டிகையையொட்டி சபரி மலை ஐயப்பன் கோயிலில் அடுத்த மாதம் செப்டம்பர்7-ம் தேதிமுதல் 10ம் தேதி வரையிலும் சிறப்பு பூஜைகளானது நடைபெற இருக்கிறது. இதேபோன்று புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டு 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்த தினங்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு பம்பையில் உடனடியாக முன்பதிவு செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆவணி மாத பூஜை மற்றும் மலையாள புத்தாண்டை முன்னிட்டு தந்திரி கண்டரரு ராஜிவரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை திறந்தார். இதனை அடுத்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மலையாள புத்தாண்டை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். வருகிற 21-ஆம் தேதி வரை உதயாஸ்தமன பூஜை கலசபிஷேகம், […]
கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிறைப்புத்தரிசி பூஜை வருகிற 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலை கோவிலில் நாளை முதல் நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் நான்காம் தேதி கோவில் நடை திறந்ததும் 6 மணிக்கு நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும். இந்த விழாவில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை ஐயப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பின்னர் பக்தர்களுக்கு […]
பிரசித்தி பெற்ற கோவிலின் நடை திறக்கப்பட இருப்பதால் தரிசனத்திற்கு செல்ல விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கொரோனா பரவால் காரணமாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 2020-ம் ஆண்டு மூடப்பட்டது. அதன் பிறகு மாதாந்திர பூஜைகள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியதால் ஐப்பசி மாத பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த மாதம் ஆனி மாத பூஜைகளுக்காக 14-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை, […]
ஐயப்பன் திருக்கோவிலில் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கிற்காக கோயில் நடை திறக்கப்படவுள்ளது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதிலும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த ஆண்டுகொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 25,000 பேர் […]
புரட்டாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகின்ற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்சி பூஜைக்கு பிறகு மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை மற்றும் அபிஷேகம் நடைபெறும். நாள் தோறும் சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடைபெறும். கொரோனா […]