பிரபல நாட்டில் சபாநாயகரின் கணவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் சபாநாயகரான நான்சி பெலோசி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைவானுக்கு பயணம் செய்தார். இதனால் அவர் சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானார். இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி நான்சி பெலோசியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரது கணவர் பால் பெலோசியை சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை […]
Tag: சபாநாயகர்
நான்சி பெலோசியின் கணவரை தாக்கிய சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் ஆன நான்சி பெலோசி கடந்த சில மாதங்களுக்கு முன் தைவானுக்கு பயணம் மேற்கொண்டு சீனாவின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார். நான்சி பெலோசியின் வீடு சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து நான்சி கணவர் பால்பெலோசி சுத்தியலால் கை, கால்கள் தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்ப […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரைக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருக்கிற பொழுதும்.. இரு மொழி கொள்கைதான், தமிழ் – ஆங்கிலம் தான். புரட்சித்தலைவி அம்மா இருக்கிற பொழுதும் இரு மொழி கொள்கைதான். அதேபோல இரு பெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசும்… இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரு மொழி கொள்கையை தான் கடைபிடிக்கும். அதை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை தலைவர் என்ன இறுதி முடிவு எடுத்தாரு? ஒரு நாற்பது எம்எல்ஏ திமுகவிலிருந்து வெளியே போயிடுறாங்க. இன்னைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் என முடிவு பண்ண முடியுமா ? சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் முதலமைச்சராக இருக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியும். ஆனால் இதை ஏற்க மறுக்கிறார். ஏனென்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை திராவிட […]
தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்தார். இதனிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்து, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். இதிலிருந்து அதிமுகவில் ஓபிஎஸ் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ் ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்கிய எடப்பாடி […]
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் சட்டமன்ற துணை தலைவராக ஆர்.பி உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம் என்று பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரைக்கும் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்க கூடிய நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதம் எழுந்து, அதன் பிறகு அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவில் துணை தலைவராக ஆர்பி […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவாக இருந்தாலும் தன்னை கலந்து ஆலோசிக்க வேண்டும் என ஓபிஎஸ் அதில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த ஜூலையில் கடிதம் அளித்திருந்தார்.. இந்த நிலையில் சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டப்பேரவை 17ஆம் தேதி கூடவுள்ள நிலையில் ஓபிஎஸ் கடிதம் […]
இலங்கையின் சபாநாயகர் நாட்டின் இந்திய தூதரை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நடக்கும் மக்களின் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்தது. எனவே, கடந்த 13ஆம் தேதி அன்று அதிபர் கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார். கடந்த வியாழக்கிழமை அன்று அவர் தன் மனைவியுடன் சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக அறிவித்தார். நேற்று ரணில் […]
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பகுதி அடைந்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதன்பின் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்பையா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர் ஆனால் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத் பையா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். […]
அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து,அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலகத்திற்கு அதிமுக கடிதம் அனுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வேறு ஒருவருக்கு அளிக்கப்பட உள்ள நிலையில், அந்த பதவி யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அதிமுக சட்டமன்ற […]
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இலங்கையில் கடும் மோசமான நிலையில் இருக்கிறது. மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிரடியாக அதிபரின் மாளிகைக்குள் நுழைந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே, மாளிகையில் இருந்து தப்பிய அதிபர் கோட்டபாய ராஜபக்சே கப்பலில் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனடியாக அவசர கூட்டத்தை கூட்ட […]
அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகரின் கணவரான பால் பொலோசி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் கைதாகியிருக்கிறார். அமெரிக்காவின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகராக இருக்கும் நான்சி பொலோசி என்பவரின் கணவரான பால் பொலோசி, நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் காவல்துறையினர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவரின் வாகனம் வேகமாக வந்ததால் காவல்துறையினரை வழிமறித்தனர். அதன்பின்பு, சபாநாயகரின் கணவர் தான் வாகனத்திற்குள் இருக்கிறார் என்பதை காவல்துறையினர் தெரிந்து கொண்டனர். அவர் அதிகமாக […]
இலங்கை அதிபர் நாடாளுமன்றத்தை உடனே கூட்டுவதற்கு சபாநாயகரிடம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தது, கொழும்பு நகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இந்நிலையில், மக்கள் கடுமையாக கொந்தளித்திருக்கிறார்கள். இதன் காரணமாக உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்சே, சபாநாயகரிடம் உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்துக்கு பின் அவர் வெளியிட்ட அறிவிப்பில், வரும் ஏப்ரல் 6 முதல் மானிய கோரிக்கை தாக்கல் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான எம்எல்ஏக்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்கள் கேள்வியும், அமைச்சரவை அமைச்சர்களின் பதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று சபாநாயகர் அப்பாவு […]
தமிழக சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் ஏப்ரல் 6 ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஏப்ரல் 6 முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 30ஆம் தேதி அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என முடிவு ஆகும் என்றார்.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்த தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் கே. என். ரவி இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஏதோ சில காரணங்களை கூறி ஏற்றுக்கொள்ள தகுந்ததாக இல்லை என மீண்டும் சட்டசபைக்கு அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து திமுக தலைமையில் கடந்த 5 ஆம் […]
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை சபாநாயகர் அப்பாவும் துவங்கி வைத்தார். அதோடு அவர் துப்புரவு பணியாளர்களுக்கு 84 பேட்டரி வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் பிறகு அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அதில் கூறியதாவது, “தமிழகத்தைப் பொருத்தவரை வைரஸ் பரவல் வேகம் எடுத்து வருகிறது. எனவே அரசு அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் சீராக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. […]
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அமுதாலவலாசா பகுதியில் உள்ள மைதானத்தில் சி.எம். கோப்பை என்ற பெயரில் மாவட்ட வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை சபாநாயகர் சீதாராம் தொடங்கிவைத்தார். கபடி வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய போது எதிரே இருந்தவரை தொட முயற்சித்தார். அப்போது அவரது கால் இடறி கீழே விழுந்தார். உடனடியாக அதிகாரிகள் அவரைத் தூக்கினர். அதன்பிறகு விளையாட்டில் இதெல்லாம் சகஜமப்பா என்று சபாநாயகர் கூறி, மேலும் […]
இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் அகில இந்திய சபாநாயகர் கலந்து கொள்ளும் 82 வது மாநாடு நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு தமிழக சபாநாயகர் அப்பாவும் மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அப்போது திடீரென நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவை அப்பாவு சந்தித்து டெல்லியிலிருந்து சண்டிகருக்கு அவருடன் ஒன்றாக பயணம் செய்தார். அதன்பிறகு சண்டிகரில் இருந்து சிம்லாவுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் […]
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருப்பவர் செல்வம். இவர் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வத்திற்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்த போது சபாநாயகர் செல்வத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. நெஞ்சு வலி ஏற்பட்டதால் புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மே 11-ல் சட்டப்பேரவை கூட்டமும், மே 12-ல் சபாநாயகர் தேர்வும் நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 11ஆம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் பதவி ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் மே 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தன் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதன் பிறகு புதுச்சேரியில் […]
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து சேப்பாக்கம் தொகுதி காலியானதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 10ம் தேதி காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் பிரிந்தது. ஜெ. அன்பழகனின் மறைவு திமுகவினரை […]
7 மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்டை சபாநாயகர் ஓம் பிர்லா திரும்ப பெற்றார். மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் தொடர்ந்து டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து முதலில் விவாதம் தேவை என்று சொல்லி வந்தார்கள். ஆகவே அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை அனுமதிக்க முடியும் என்று கூறினார்கள். இதனால் மற்ற அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, கூச்சல் குழப்பம் இடையே ஒரு சில அலுவல்களை மட்டும் […]
காங்கிரஸ் எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டுமென்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆனால் மக்களவை, மாநிலங்களவையில் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம்பிர் லா இருக்கையை முற்றுகையிட்டு, சபாநாயகர் இருக்கையில் […]
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக மக்களவை உறுப்பினரை மாணிக்கம் தாகூரரை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சஸ்பெண்ட் செய்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது.மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும். அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை மேற்கொள்ளலாம் என்று அமளி செய்தனர். இதனால் மக்களவையில் அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. தொடர் […]
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 மக்களவை உறுப்பினரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சொல்லி வரும் ஒரே கோரிக்கை என்னவென்றால் டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து முதலில் விவாதம் தேவை.அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை அனுமதிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.இதனால் மற்ற அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. கூச்சல் குழப்பம் இடையே ஒரு சில அலுவல்களை மட்டும் சபாநாயகர் நடத்திக்கொண்டிருந்தார். […]