அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில்சிபல் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். கட்சியிலிருந்து விலகிய கபில்சிபல் உ.பி மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கபில்சிபலுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த 16ஆம் தேதியன்றே ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி விட்டதாக கபில்சிபல் தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் […]
Tag: சமாஜ்வாதி
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்திரபிரதேசத்தில், பிரச்சாரம் நடத்தியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் வரும் 10-ம் தேதியிலிருந்து முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அலிகார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்திருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, டெல்லிக்கு எங்களை அனுப்பி வையுங்கள். பிரச்சினைகள் முழுவதும் தீர்ந்து விடும். சாதியை அடிப்படையாக வைத்து கணக்கெடுப்பது குறித்து பேசுவோம். பா.ஜ.க விற்கான கதவை மக்கள் அடைத்து விட்டார்கள். மாவ் பகுதியில் நடந்த என் முதல் கூட்டத்தில், […]
உத்திரபிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத் எங்கள் நாட்டிற்காக உயிரை கூட தியாகம் செய்வோம் என்று கூறியிருக்கிறார். உத்திரபிரதேசத்தில் அடுத்த மாதம் 10-ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கவிருக்கிறது. மேலும், மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியான பா.ஜ.கவிற்கும், எதிர்கட்சி சமாஜ்வாதிக்கு இடையே கடும் போட்டி இருக்கிறது. கொரோனா காரணமாக தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை […]
உபி.யில் பாஜகவைச் சேர்ந்த மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். பாஜகவில் ஓபிசி, பட்டியலினத்தவர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக புகார் தெரிவித்து மாநில அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியா ராஜினாமா செய்தார். பாஜகவிலிருந்து மவுரியா விலகிய நிலையில், அகிலேஷ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அமைச்சர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..