Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட குவிந்த கூட்டம்….காற்றில் பறந்தன சமூக இடைவெளி….கொரோனா பரவும் அபாயம்….!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் தடுப்பூசி கொள்ளுமாறு கூறப்பட்டது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வமுடன் நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதே போன்று தஞ்சாவூர் மாவட்டத்திலும் இன்று பொதுமக்கள் கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆர்வத்தில் அதை மறந்துட்டோம்… ஆபத்தை அறியாத மக்கள்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏரியில் மீன்பிடித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட ஏரி ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏரியின் நீரானது விவசாயம் மற்றும் குடிநீர்காக பயன்பாட்டில் உள்ளது. தற்போது ஏரியில் உள்ள தண்ணீர் வற்றி குட்டை போல் மாறியுள்ளது. இந்த ஏரியில் தற்போது மீன் வரத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் அருகில் உள்ள கிராம மக்கள் மீன்களை பிடிப்பதற்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாகக் குவிந்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த கடைகளுக்கு அனுமதி இல்லை… சோதனை செய்த தாசில்தார்… 7 கடைகளுக்கு அபராதம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி திறந்த கடைகள் உட்பட சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காய்கறி, பலசரக்கு கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அங்காடி மற்றும் பேன்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் கொரானா… அலட்சியமா இருக்காதீங்க… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2,271 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

காற்றில் பறந்த சமூக இடைவெளி…. காங்கிரஸ் தலைவரிடம் பாயும் கேள்விகள்….!!

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் சமூக இடைவெளியை பின்பற்றாத காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலபுரகிக்கு நேற்று சென்றுள்ளார். கலபுரகி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அதே சமயத்தில் டி.கே.சிவகுமாருக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து வரவேற்றுள்ளனர். அந்நேரத்தில் டி.கே.சிவகுமாரும், காங்கிரஸ் தொண்டர்களும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு மறந்துவிட்டனர். அதனால் அப்பகுதியில் சமூக இடைவெளி […]

Categories

Tech |