ரஷ்யாவின் பல இடங்களில் பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவை உலக நாடுகள் தனிமை படுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது தரை, வான், கடல் என மும்முனைகளிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்துகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் […]
Tag: சமூக ஊடகங்கள்
நம் நாட்டில் சமூக ஊடகங்களில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு இதனை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி பல கட்டுப்பாடுகள் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பாஜக எம்.பி சுஷில் குமார் மோடி ராஜ்யசபாவில் முஸ்லிம் பெண்களை குறி வைக்கும் விதமாக செயல்படும் “புல்லி பாய்” போன்ற செயலிகள் மீது எடுக்கப்பட்டுள்ள […]
சமூக ஊடகங்கள் தனி நபர் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் கடும் அபராதம் விதிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இவை சட்டமாக்கப்பட்டால் விதிமீறல்களுக்கு 15 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், கூகுள், அமேசான் ஆகிய சமூக ஊடகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தனிநபர் தகவல் பாதுகாப்பு விதிகளை மீறாமல் இருப்பதற்கு இந்த கடுமையான நடவடிக்கை உதவும் என்று கருதப்படுகிறது.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்கள் நேற்று திடீரென சமூகவலைதளம் முடங்கியதற்காக மன்னிப்பு கோரியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் நேற்று மாலை சமூக வலைதளங்கள் திடீரென முடங்கியது. மேலும் பயனாளர்கள் இரவிலும் சமூக வலைதளம் முடக்கம் தொடர்ந்ததால் பெரும் அவதிக்குள்ளாகினர். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களை எப்போதும் போல் பயனாளர்களால் பயன்படுத்த இயலவில்லை. இதற்கிடையே பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து வாட்ஸ் அப், […]
சமூக ஊடகங்களில் ஆபாச வீடியோக்களை கொண்டு ஆண்களை அச்சுறுத்திய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பெங்களூரு மாநிலத்தில் சமூக ஊடகங்களில் ஆபாச வீடியோக்களை காண்பித்து ஆண்களை அச்சுறுத்திய கும்பலை சைபர் கிரைம் பிரிவினர் கைது செய்தனர். இது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தானில் பாரத்பூரைச் சேர்ந்த சாஹுன், ஷாருக் கான், நசீர் மற்றும் ஷாஹித் அன்வர் ஆகியோர் பெண்களின் பெயர்களை பயன்படுத்தி போலியாக அவர்களின் கணக்கை உருவாக்கி இந்த காரியத்தை […]
சட்டவிரோத போராட்டத்தை தூண்டும் பதிவுகளை நீக்காததற்கு கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் மீது ரஷ்யா வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் பதிவுகளை கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்கள் நீக்கவில்லை. அதனால் ரஷ்யா ஒவ்வொரு நிறுவனத்தின் மீதும் 3 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் சட்டவிதிகளை மீறியது நிரூபிக்கப்பட்டால், 4 மில்லியன் அபராதம் விதிக்கப்படும். மேலும் டிக் டாக் மற்றும் டெலிகிராம் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத […]
நாடு முழுவதும் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்களின் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற அனைத்து கணக்குகளும் சோதனை செய்யப்படும். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக ஊடகங்களில் தொடர்பில் உள்ளனர். அதிலும் குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு அவர்களின் சமூக ஊடக நடவடிக்கைகளை ஆராய்வதற்கு உத்தரகாண்ட் மாநில காவல்துறை முடிவு […]
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக செயல்பாடுகளை ஆராய்வதற்கு உத்தரகாண்ட் காவல்துறை முடிவு செய்துள்ளது. ஒருவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அவர் மீது ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்று உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரணை செய்வார்கள். உத்தரகாண்ட் காவல்துறை டிஜிபி அசோக்குமார் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் செயல்பாடுகளை ஆராய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க விண்ணப்பதாரரின் சமூக உள்ளடக்களை ஆராயப்பட வேண்டும் என கூறியுள்ளார் . தேச விரோத நடவடிக்கைகளில் […]
சமூக ஊடகங்களில் இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலிக்கு மும்பை போலீஸ் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரத்தில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் மும்பை போலீஸ் குறித்து நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். இது தொடர்பாக தொடர்ந்து டுவிட்டரில் கங்கனா கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் கங்கனா ரனாவத் இரு […]