பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்ததில் காவல்துறையினர் மூவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் குவெட்டா பகுதியின் பாத்திமா ஜின்னா சாலையில் திடீரென்று சமூகவிரோதிகள் சிலரால் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு கடை தீப்பற்றி எரிந்துவிட்டது. அதன்பிறகு, உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். இந்த பயங்கர விபத்தில் காவல்துறையினர் மூவர் பலியானதாகவும் 25 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
Tag: சமூக விரோதிகள்
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஐ.நா வளாகத்தின் மீது அரசாங்கத்திற்கு எதிரான சில சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்று ஐ.நா தூதரகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகரிலுள்ள ஐ.நா வளாகத்தின் மீது அரசுக்கு எதிரான சில சமூக விரோதிகள் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடந்த தாக்குதலில் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி சில அதிகாரிகள் காயமடைந்துள்ளார்கள். இருப்பினும் […]
நாகையில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளில் சமூக விரோதிகள் தீ வைத்ததால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல்-சங்கமங்கலம் பகுதிக்கு இடையில் சாலையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளை சிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து கொட்டப்பட்டு வருகிறது. தற்காலிகமாக இந்த குப்பைகள் சாலை வரை கொட்டப்பட்டுள்ளது. இதில் சமூக விரோதிகள் சிலர் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் அதிக அளவில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த புகையால் அப்பகுதியில் […]
ஜம்மு காஷ்மீரில் ஆக்கிரமிப்பு செயலில் ஈடுபட்டவர்கள், சமூக விரோதிகளுடன் இணைந்து தாக்கியதில் போலீசார் மற்றும் வனத்துறையினர் 18 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் உள்ள படோட் நகரில் ஆக்கிரமிப்பு செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது. அந்த தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதனையறிந்து கொண்ட பயங்கரவாதிகள் சமூக விரோதிகள் சிலருடன் கும்பலாக சேர்ந்து கொண்டு காவல்துறையின் மீது தாக்குதல் […]