இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையின் விலை மீண்டும் குறைந்துள்ளது. மத்திய அரசு கடந்த சில மாதங்களாக சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக சமையல் எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெயின் ஒரு லிட்டர் விலை 180 ரூபாயிலிருந்து 170 ரூபாயாக குறைந்துள்ளது. அதன் பிறகு மார்க்கரின் விலை 154 ரூபாயிலிருந்து 146 ரூபாயாக குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு லிட்டர் கடுகு எண்ணெயின் விலை 173 ரூபாயிலிருந்து […]
Tag: சமையல் எண்ணெய்
மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி குறிப்பிட்ட சில சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி தீர்வைகளில் சலுகை வழங்கப்பட்டது. உலக அளவில் தற்போது கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி மற்றும் இறக்குமதி தீர்வை குறைப்பு போன்றவற்றால் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையின் சில்லறை விற்பனை விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு சுத்திகரிக்கப்பட்ட, சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி […]
சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகையை மார்ச் 2023 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், விலையைக் கட்டுக்குள் வைக்கவும் சமையல் எண்ணெய் மீதான சுங்க வரிச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி உள்ளூர் சந்தையில் சில்லறை விற்பனை விலையில் கடலை எண்ணெய் லிட்டருக்கு 188 நல்லெண்ணெய் 172.66, வனஸ்பதி ≈152.22, சூரியகாந்தி எண்ணெய் 176.45, பாமாயில் 132.94க்கு விற்பனையாகி வருகிறது.
உலக சந்தையில் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றின் விலை குறைந்து வந்த நிலையில் மத்திய அரசு சமையல் எண்ணெய் விலை இங்கு குறைய வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதுடன் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. இந்நிலையில் இந்தியாவில் இறக்குமதி அதிகரித்துள்ளதால் சமையல் எண்ணெய் விலை தற்போது குறைந்துள்ளது.இந்த அறிவிப்பை இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் 1960 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாமாயில் டின் […]
சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள், பேக்கர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு எண்ணெய் பாக்கெட் லேபிள்களில், சரியான நிகர அளவை அறிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, உற்பத்தியின் எடையுடன் வெப்பநிலையைக் குறிப்பிடாமல் தொகுதி அலகுகளில் நிகர அளவை அறிவிக்கும் லேபிளிங்கை சரி செய்யுமாறு நுகர்வோர் விவகாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அதாவது, ஜனவரி 15, 2023 வரை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சட்ட […]
கடந்த மாதம் சமையல் எண்ணெய் 10 முதல் 15 ரூபாய் வரை விலை குறைப்பு செய்யப்பட்டிருந்தது. வரும் காலங்களிலும் இதன் விலை இன்னும் குறையும் என்று எதிர்பாக்கப்படுகிறது. அடுத்த ஒரு வாரத்திற்குள் தற்போது இருக்க கூடிய எண்ணெய் விலையில் இருந்து பெரிய அளவிலான விலை குறைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உற்பத்தியாளர்களையும் , விற்பனையாளர்களையும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சமையல் எண்ணெய்களின் எம்ஆர்பி யில் உடனே 15 ரூபாய் குறைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உணவு மற்றும் […]
இந்தியாவானது தன்னுடைய சமையல் எண்ணெய்யின் தேவையில் 60 % இறக்குமதி செய்கிறது. சென்றசில மாதங்களாக சர்வதேசசந்தையில் விலை அதிகரித்ததால் இந்தியாவில் அதன் சில்லரை விலையும் உயர்ந்தது. எனினும் அண்மை காலமாக அந்த சந்தையில் விலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் சென்ற மாதம் லிட்டருக்கு ரூபாய் 10 -ரூ.15 வரை விலை குறைக்கப்பட்டது. அதன்பின்பும் விலையானது குறைந்துள்ளதால், அது தொடர்பாக விவாதிப்பதற்கு மத்தியஉணவு செயலாளர் சுதன்சு பாண்டே, அனைத்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் […]
இல்லத்தரசிகளுக்கு அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது அது என்னவென்றால் சமையல் எண்ணெய் விலை 10 முதல் 15 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் இரண்டு மாதங்களுக்கு முன்பு சமையல் எண்ணெய் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், நிறுவனங்களும் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய உணவு […]
உக்ரைன், ரஷ்யா போர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சர்வதேச சந்தையில் தட்டுப்பாடு, ஏற்றுமதி தடை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போனது. இதனால் பொதுமக்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்தியாவிலும் விலை குறைய தொடங்கிவிட்டதாக மதிய உணவு துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே கூறியுள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள விபரங்களின்படி சமையல் […]
பாகிஸ்தானில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நெய் மற்றும் சமையல் எண்ணைய்க்கான விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, அங்கு சில தினங்களுக்கு முன்பாக எரிபொருளின் விலையானது, வெகுவாக அதிகரித்தது. இந்நிலையில் சமையல் எண்ணெய் விலையும் ஒரு லிட்டருக்கு சுமார் 213 ரூபாயாக அதிகரித்தது. எனவே, அங்கு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 605 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. மேலும், ஒரு கிலோ நெய் 208 ரூபாய் அதிகரித்து, 555 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சமையல் எண்ணெய் விலை தொடர் உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஒரு கிலோ சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 70 ரூபாய் அதிகரித்து 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைப் போலவே ஒரு கிலோ பாமாயில் 110 ரூபாயிலிருந்து 152 ரூபாய்க்கும், கடலை எண்ணெய் 140 ரூபாயிலிருந்து 182 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் […]
விரைவில் சமையல் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்களின் ஏற்றுமதியைத் தடை செய்வதற்கான இந்தோனேசியாவின் நடவடிக்கைக்குப் பின், உள்நாட்டு சமையல் எண்ணெய் விலைகள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும் என்று தொழில்துறை அதிகாரிகள் கூறி, இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். முன்பே உக்ரைன் போர் காரணமாக சூரியகாந்தி எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது பாமாயில் விநியோகம் தடைபட்டால் அதன் விலை கிடுகிடுவென உயரும். விலைகள் முன்னதாகவே அதிகமாக இருந்தது, இந்தோனேசியாவின் முடிவு […]
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் காரணமாக பிரித்தானியா நாட்டில் சமையல் எண்ணெய் வாங்க சூப்பர் மார்க்கெட்டுகள் கட்டுப்பாடு விதித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யபடையெடுப்பால் விநியோக சங்கிலி பிரச்சனைகள் காரணமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி Tesco சூப்பர் மார்கெட்டில் ஒரு வாடிக்கையாளர் 3 வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் Waitrose மற்றும் Morrisons-ல் ஒரு வாடிக்கையாளருக்கு 2 என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கான ஏராளமான சூரியகாந்தி எண்ணெய் உக்ரைனிலிருந்து […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 43 நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. போரை கைவிட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தநிலையில் உக்ரைன் -ரஷ்யா போர் சூழலால் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. சமையலுக்கு பயன்படுத்த கூடிய சூரியகாந்தி எண்ணெய் உக்ரைன் நாடு அதிக அளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது. அந்நாட்டில் இருந்து இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல் மூலம் சூரியகாந்தி எண்ணெய் வினியோகிக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் […]
உணவகங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணையை பயோடீசல் ஆக மாற்றும் பணியை திருப்பூர் உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணையை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துவது கூடாது இதை மீறும் உணவகங்கள் மற்றும் மனிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் […]
இந்தியாவில் சூரிய காந்தி எண்ணெய் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் 80 சதவீதம் உக்ரேனில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் போர் தொடங்கி உள்ளதால் சூரியகாந்தி எண்ணெய் விலை ரூபாய் 40 வரை விலை உயர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் 150 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் போர் தொடங்கிய பிறகு தற்போது லிட்டர் ரூபாய் 196 வரை விலை உயர்வை சந்தித்துள்ளது. அதனைப்போலவே மலேசியா […]
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் உச்சத்தில் இருப்பதால் பாமாயில், சூரியகாந்தி எண்ணை விலை உயரும் என்று கூறப்படுகிறது. இவற்றை உலக அளவில் அதிகமாக ரஷ்யா, உக்ரைன் நாடுகள் தான் ஏற்றுமதி செய்கின்றன. ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை உள்ளிட்ட காரணங்களால் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என்று தெரிகிறது. இதனால் அவற்றின் விலை கடுமையாக உயரும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் சமையல் எண்ணெயின் விலையை குறைத்துள்ளது என்று எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமையல் எண்ணெயின் விலை பண்டிகை காலத்தில் நுகர்வோர் நலன் கருதி குறைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்சு பாண்டே கூறியது இந்தியாவின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் சமையல் எண்ணெய் விலையை 10 முதல் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது இதன்மூலம் 30 முதல் 40 வரை குறைத்துள்ளது. மேலும் குறைக்கப்பட்ட விலையில் […]
அதானி வில்மர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சமையல் எண்ணெய் விலையை 10% முதல் 15% வரை குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி பான் சூன், பிரான்ட்ஸ், சன் ரிச், ருச்சி கோல்டு, டால்டா, ககன், ஃப்ரீடம் சன் பிளவர் ஆயில், வீடா லைப் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் 10 முதல் 15 சதவீதம் விலையை குறைத்து உள்ளன. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமையல் எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் வரை குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சர்வதேச சந்தையில் பாமாயில், சோயா, சன் பிலௌர் எண்ணெய் வகைகளின் விலை மிகவும் அதிகரித்ததன் காரணமாக உள்நாட்டிலும் சமையல் எண்ணெய் விலை கடுமையான விலை உயர்வை சந்தித்தது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் பயனடையும் […]
நாட்டில் பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு பாமாயில், சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கான சுங்க வரியை மத்திய அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5% சுங்கவரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்,சோயாபீன் எண்ணெய் மீதான 2.5% சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி மற்றும் வேளாண் செஸ் வரிகளை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு இன்று முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறியுள்ளது. […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதிலும் ஒருசில மாநிலங்களில் மக்களை தடுப்பூசி செலுத்த தூண்டும் வகையில் மக்களை கவரும் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் அம்தாவத் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்தாவத் மாநகராட்சியில் மக்கள் 100% தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக தடுப்பூசி போடும் […]
நாட்டில் பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு பாமாயில், சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கான சுங்க வரியை மத்திய அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளது. பாமாயிலுக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகவும், சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 7.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசிற்கு 1,100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். சில்லறை விலையில் லிட்டருக்கு 5 ரூபாய் விலை குறையும். சமையல் எண்ணெய் […]
தேசிய சமையல் எண்ணெய் பாமாயில் திட்டத்திற்கு ஒரு பகுதியா வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பாமாயில் சாகுபடி திட்டத்திற்கான சாகுபடியை தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ. 11,040 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ. 8,844 கோடியும் மாநில அரசின் பங்காக ரூ. 2,196 கோடியும் இவற்றுடன் மானியத் தொகையும் அடங்கும். எண்ணெய் வித்துக்கள் மற்றும் பாமாயில் ஆகியவற்றின் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று […]
ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் வகைகள் விலை சராசரியாக 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மட்டும் அல்ல, குடும்பங்களின் அத்தியாவசியத் தேவையாக பயன்படுத்தப்பட்டுவரும் சிலிண்டர் மற்றும் சமையல் எண்ணெய்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக தங்களது வேலைகளை இழந்து பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு இது பேரிடியாக உள்ளது. அந்த வகையில் ஜூலை மாதத்தில் மட்டும் சமையல் எண்ணெய் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் சமையல் எண்ணெய் ஒரு ஆண்டில் 77 சதவீதம் விலை உயர்ந்துள்ளதாக […]
சமையலில் அன்றாடம் தேவையான ஒரு பொருளாக சமையல் எண்ணெய் இருக்கிறது. இதில் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், கடலை எண்ணெய் போன்ற எண்ணெய்கள் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அதிகளவிலான எண்ணெய்கள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்தவகையில் இந்தியாவுக்கான தேவையில் சுமார் 80 சதவீதம் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 70 முதல் 100 சதவீதம் அளவுக்கு விலை அதிகரித்துள்ளதாக சமையல் எண்ணை மொத்த […]
நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]
சமையல் எண்ணையை சில்லறை விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுவதாக தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்துள்ளது. இந்த வழக்கானது நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதிகள் சமையல் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்ய மொத்தம் எத்தனை ஆய்வுகள் உள்ளன? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சமையல் எண்ணெய் ஆய்வில் கடந்த 5 வருடங்களாக […]
தமிழகத்தில் சமையல் எண்ணெய்யைப் பேக்கிங் செய்யாமல் சில்லறை விற்பனையில் விற்கக் கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உலக மக்களின் அன்றாட வாழ்க்கையில் தேவையான உணவுக்கு மிகவும் முக்கியம் சமையல் எண்ணெய். அவ்வாறு பயன்படுத்தும் சமையல் எண்ணெயை நல்லதாக உபயோகிக்க வேண்டும். ஆனால் மக்கள் அதனை கவனிப்பதில்லை. இந்நிலையில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் விற்பனைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் பேட்டின் செய்யாமல் சில்லரை விற்பனையில் சமையல் […]
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளை சில்லரை விற்பனையில் ”பேக்கிங்” செய்யாமல் விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருள்நிதி என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவில் சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுகிறது. இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சட்டப்படி […]
பேக்கிங் செய்யாமல் சில்லரை விற்பனையில் சமையல் எண்ணையை விற்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணைகளை சில்லறை விற்பனையில் விற்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் விற்பனைக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு சட்டத்தின்படி சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யாமல் எவ்வாறு விற்கப்படுகிறது ? என்னை தரத்தை ஆய்வு செய்வதற்காக எத்தனை […]