ஆகஸ்டு 1ம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகை செயலி மூலம் பதிவு செய்யப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளனர். காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
Tag: சம்பளம் பிடித்தம்
பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் அடுத்த மாதம் 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். மத்திய அரசை கண்டித்து கடந்த 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அரசு அதிகாரிகள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று அரசு உத்தரவிட்ட போதிலும், தொழிற் சங்கத்தினர் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி சென்னையில் முதல் நாள் வேலை நிறுத்தத்தில் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் விலை உயர்வு, பணிநிரந்தரம், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு ஆகிய பல காரணங்களுக்காக இன்றும், நாளையும் நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. அதில் காப்பீடு துறை, வங்கி, மின் துறை, போக்குவரத்து துறை பணியாளர்கள் என 20 கோடி பேர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழக […]