இந்தியாவின் ரூபாய் மதிப்பானது வெளிநாட்டு கரன்சியுடன் ஒப்பிடுகையில் நன்றாக இருப்பதாக மத்திய நிதி மந்திரி கூறியுள்ளார். அதாவது ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 80 ரூபாயை தாண்டியுள்ளது. இது வரலாறு காணாத வீழ்ச்சி என்று கூறப்படுகிறது. ஒரு டாலருக்கு 39 காசுகள் சரிந்து முதல் முறையாக 81-ஐ தாண்டி 81.27 ஆக இருக்கிறது. அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் பெஞ்ச் மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இதனால்தான் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. இந்த இந்திய […]
Tag: சரிவு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பருவமழை காரணமாக மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்து இருந்தது. அது மட்டும் இல்லாமல் ஆவணி மாதம் முழுவதும் தொடர் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த தினங்கள் அதிக அளவில் இருந்த காரணத்தினால் பூக்களின் விலை உச்சத்தை எட்டி இருந்தது. அதுவும் மல்லிகை பூவின் விலை அதிக அளவில் இருந்ததால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது மதுரை மல்லிகை பூ 3000 […]
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை விட இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வாகன விற்பனை 8 சதவீதம் சரிந்துள்ளதாக டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான டீலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கார்கள், மோட்டார்கள், சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், டிராக்டர்கள் விற்பனை கடந்த மாதம் குறைவாக இருந்தது. அனைத்து வகை வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு ஜூலையில் 15 லட்சத்து 59 ஆயிரத்து 106 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மோட்டார் வாகனங்களின் விற்பனை 14,36, […]
தமிழகத்தில் வியாபார மந்தம் காரணமாக பழங்களின் விலை சரிவை சந்தித்துள்ளது. வழக்கமாக ஆடி மாதத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்ந்து காணப்படும். ஆனால் நடப்பு ஆண்டில் பழங்கள் விற்காமல் தேங்கியுள்ளது. தமிழகத்தில் ஒரு சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பழங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி கிலோவுக்கு இருபது ரூபாய் முதல் 30 ரூபாய் வரை பழங்களின் விலை குறைந்துள்ளது. கிலோவாரியாக ஆப்பிள் 190 ரூபாய், மாதுளை 180 ரூபாய், சாத்துக்குடி […]
ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஆல்ப்ஸ் மலைத்தொடரும் ஒன்று. இந்த மலைத்தொடர் இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த மலைத்தொடரில் சுற்றுலாப் பயணிகள் மலையேறுதல், பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகசங்களில் பலரும் ஈடுபடுவார்கள். இத்தாலி நாட்டில் வழியாக செல்லும் இந்த மழைதொடரில், சுமார் 3300 மீட்டர் உயரத்தில் மர்மலாடா என்ற சிகரம் உள்ளது. புன்டா ரோக்கா என்ற பகுதியில் வழியாக இந்த சிகரத்தை அடையலாம். இந்த பகுதியில் பலர் மலையேற்றதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். […]
ஒமிக்ரான் வைரஸால் தூண்டப்பட்ட கொரோனா தென்கொரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. தினமும் கிட்டதட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது இந்த நிலை மாறி வருகிறது. அதாவது தென்கொரியாவில் கடந்த 9ஆம் தேதி அன்று 1 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 481ஆக சரிந்தது. தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை […]
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.176 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 38,424க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 22 குறைந்து ரூ.4,803க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40-க்கு விற்கப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.39,080 விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து, ரூ.4,885 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.74.70க்கு விற்பனையாகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.880 குறைந்திருக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து சில தினங்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 39,280 க்கு விற்பனையாகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 4,910 க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.74.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]
“மெட்டா” என்று பெயரிடப்பட்டிருக்கும் முகநூல் நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 8% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது இந்த நிறுவனம் 18 வருட காலத்தில் முதல்முறையாக வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. கடந்த காலாண்டில் முகநூல் பயனாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது பயனாளர்களின் எண்ணிக்கை குறைவிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே மெட்டா, இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் செல்லிடப்பேசி கட்டணங்கள் உயர்த்தப்பட்டது […]
பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளநிலையில் ஒரே நாளில் 15 லட்சம் கோடியை இழந்துள்ளது மெட்டா நிறுவனம். பேஸ்புக் சமூக வலைத்தளமானது தனது பயன்பாட்டாளர்ளை இழக்கத் தொடங்கியுள்ளதை தொடர்ந்து அதன் சந்தை மதிப்பு 20% வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடத்தில் 4 வது காலாண்டில் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பேஸ்புக்கை தினசரி பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 192.9 கோடியாக குறைந்து விட்டது. ஆனால் அதற்கு முந்தைய காலாண்டில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 199 கோடியாக இருந்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் தொடங்கப்பட்டது […]
பெங்களூருவில் பழமையான 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தததில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியிலுள்ள லக்கசந்திரா ரோட்டில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஒரு வீடு உள்ளது. இந்த வீடு மூன்று மாடிகளை கொண்டதாகும். இந்த வீடு 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே வீடு இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த […]
பாகிஸ்தானில் தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்த வருடத்தில் தற்போது வரை இல்லாத அளவிற்கு மிக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தேசிய சுகாதார அமைப்பு கூறியுள்ளதாவது, கடந்த ஒரே நாளில் 1043 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது தான் இந்த வருடத்தில் பதிவான குறைந்த பட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் 39 நபர்கள் தற்போதுவரை உயிரிழந்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் மொத்தமாக […]
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரண தங்கம் சவரனுக்கு 208 சரிந்து 33 ஆயிரத்து 904 விற்பனை செய்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் பொருளாதார இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன் பிறகு விலை குறைந்தாலும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. ஆனால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. நேற்றைய முடிவில் ரூ.4,264 […]
தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்து இருப்பதாக இன்று வெளியான கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்து […]
பறவை காய்ச்சல் காரணமாக கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் நாமக்கல் முட்டை விலை குறைந்துள்ளது. நாடு முழுவதும் பறவை காய்ச்சலால் அலட் கொடுக்கப் பட்டுள்ள நிலையில் முட்டைகள் தேக்கம் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியதில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு முட்டைகள் அனுப்பப்படவில்லை. இதனால் ஒரு கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை சரிந்து உள்ள காரணத்தினால் அதன் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் […]
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் ….!!
பங்குச் சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின வர்த்தகநேர தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 176 புள்ளிகள் சரிந்து 40,531 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 35 புள்ளிகள் குறைந்து 11,904 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73, 74 காசுகளாக இருந்தது.
பங்குச்சந்தையில் சரிவை கண்டது இந்தியா…!!
அமெரிக்கப் பங்குச் சந்தைகள் மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலி இந்திய பங்குச் சந்தைகளும் நேற்று சரிவை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. நேற்று காலை சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் நேற்று மாலை சரிவுடன் முடிவடைந்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,116 புள்ளிகள் சரிந்து 36 ஆயிரத்து 553 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 326 புள்ளிகள் […]
இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு..!!
அமெரிக்க பங்குச்சந்தைகள் மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளும் இன்று சரிவை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. இன்று காலை சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் மாலை சரிவுடன் நிறைவடைந்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,116 புள்ளிகள் சரிந்து 36 ஆயிரத்து 553 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 326 புலிகள் குறைந்தது […]
நாட்டில் உற்பத்தி துறை செயல்பாடு மிகவும் சரிவடைந்துள்ளதாக மாதாந்திர கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எச்.எஸ் மார்கிட் இந்தியா நாட்டின் உற்பத்தித் துறை பற்றி மாதாந்திர கணக்கெடுப்பு ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வில், கடந்த ஜூலை மாதத்தின் உற்பத்தி கொள்முதல் ஆனது பிஎம்ஐ தரவு 46 ஆக இருக்கின்றது. ஆனால் சென்ற ஜூன் மாதத்தின் உற்பத்தி கொள்முதல் பிஎம்ஐ தரவு 47.2 ஆக இருந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரே மாதத்தில் ஒரு விழுக்காடு உற்பத்தி குறைந்துள்ளது. அதற்கு காரணம் ஊரடங்கு […]
உலகத்தின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 3.2% சரிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஐநா சபை தெரிவித்துள்ளது ஐநா சபை வெளியிட்ட அறிக்கையில் தொற்று தீவிரமடைந்ததற்கு முன்பாக அதாவது கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட கணிப்பில் நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பொருளாதாரம் 3.2% சரியும் என்றும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வந்தால் ஊரடங்கு மூன்றாம் காலாண்டுக்கு நீடிக்குமானால் பொருளாதாரம் சரிவு 4.9 சதவீதத்தை தொட்டுவிடும். இதன் காரணமாக […]
உலக வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் அமெரிக்கா சந்தையில் சரிந்துள்ளது. உலகம் முழுவதும் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருவதால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு நோய் தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பதால் சமூக விலகலை கடைப்பிடித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கி, அனைத்து நாடுகளிலும் விமானங்களும் சேவை இல்லாமல் ஓய்வு எடுத்து […]
கோழியால் கரோனா பரவுகிறது என்ற வதந்தியால் கறிக்கோழி மற்றும் முட்டையின் விலை கடும் சரிவை கண்டது இதைத்தொடர்ந்து சென்னையில் மீன் கடைகளும் காற்று வாங்கத் தொடங்கியுள்ளன. சீனாவில் உருவான கரோனா வைரஸ் நாடெங்கும் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதைவிட அது மிருகங்களிடமிருந்து பரவியிருக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இருப்பினும் மக்கள் தேவையற்ற […]
கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கறிக்கோழியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் கறிக்கோழியின் விலை கடுமையாக சரிந்து உள்ளதால் அதன் உற்பத்தியை குறைக்க பண்ணை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். பல்லடத்தில் கொள்முதல் விலை ரூபாய் 28 க்கு விற்கப்பட்டது. சில்லரை விற்பனையில் 60 ரூபாய்க்கு விற்கப்படும் கோழி இறைச்சியை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கோழிப்பண்ணையாளர்கள் வரும் […]
நாமக்கல்: கொரானா பீதியின் காரணமாக நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் சரிந்துள்ளது. கொள்முதல் விலையில் 30 காசுகள் குறைந்து ரூ.3.45-ஆக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்துள்ளது.