தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும். அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு வழிவகுக்கும். […]
Tag: சரி செய்ய
உறங்கும்போது பலருக்கும் ஏற்படும் பிரச்சனை குறட்டை. இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் எளிய வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது சர்வசாதாரணமாகிப் போன நிலையில் இது அருகில் இருப்பவர்கள் சற்று அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குறட்டையால் நமக்கு ஆரோக்கியமான தூக்கம் இல்லாமல் அன்றைய நாள் சோர்வடைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. ‘ஸ்லீப் அப்னியா’ என்ற அழைக்கப்படும் அதிக சத்தமான குறட்டை தூக்க கோளாறுக்கு வழிவகுக்கும். இந்த கோளாறின் காரணமாக மூச்சுவிடும் போது […]
நாம் உண்ணும் உணவே சில சமயங்களில் நமக்கு செரிமானம் ஆகாமல் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது நமக்கு சில பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை எப்படி சரி செய்வது என்பதை பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம். சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாமல் இருந்தால் அதை சரிசெய்ய ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு ஓமத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். சோம்புவில் ரசாயனங்கள் உள்ளன அதனால் வெறும் சோம்பை வாயில் போட்டு மென்று உமிழ்நீரை விழுங்கி சிறிதளவு […]
சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய சில எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். இயல்பாக ஒரு பெண் 21 நாள் முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படவேண்டும். அப்படி ஏற்படவில்லை என்றால் இது இயல்பான மாதவிடாயாக கருதப்படாது. இப்பொழுதுள்ள காலத்தில் பெண்களிடம் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை, வயிறு வலி, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சினைகள் உள்ளது. சரியான விகிதத்தில் உள்ள சத்தான உணவுகளை நாம் சாப்பிடும் போது, சரியான அளவு நீரை அருந்தும் […]
கழற்சிக்காய் ஒரு அற்புதமான முலிகையாகும். இது பொதுவாக சாலையோரங்களில் முற்புதற்களுக்குள் இருக்கும். ஆனால் இந்த கழற்சிக்காய் தரும் நன்மைகளோ ஏராளம். தற்போது பெண்கள் பிசிஓடி நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சினைப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகள் காணப்படும். இது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறைபாட்டால் ஏற்படக்கூடியது. அதோடு இந்த நோயின் காரணமாக குழந்தையின்மை பிரச்னை, […]
அதிமதுரத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். அதிமதுரம் என்பது ஒரு வகை நாட்டு மருந்து பொருள். இதில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கின்றது. உடலுக்கு ஊட்டச் சத்தாகவும், சொட்டு முத்திரத்தை சரி செய்து, சிறுநீர் புண்களை சரிசெய்யும். கல்லடைப்பையும் சரி செய்கின்றது. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து 5 […]
ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும் அம்மன் பச்சரிசி இலையைப் பற்றி நாம் இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். அம்மன் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள இடத்தில் வளரும். மழைக்காலங்களில் நன்கு வளரும். இதன் இலை மற்றும் கொடியை நறுக்கினால் பால் கசியும். இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அம்மன் பச்சரிசி இலையை சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு நெய் விட்டு சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். குழந்தை பால் கொடுக்கும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் நன்கு தாய்ப்பால் சுரக்கும். […]
பல் வலி அதிகமாக இருக்கும் போது கிராம்பு எண்ணெய் கொண்டு நம் நாம் இதை குறைக்க முடியும். எப்படி என்பதையும் தெரிந்து கொள்வோம். பல் வலி வந்தால் பத்தும் பறந்து போகும், அளவுக்கு மற்ற நோய்கள் எதையும் கவனிக்க விடாது. அவ்வளவு பாடாய்ப்படுத்தும் பல்வலிக்கு கட்டாயம் சிகிச்சை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரும் கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தி பல் வலியை குணமாக்கும் என்று நினைத்து விடுகின்றனர். கிராம்பு அல்லது கிராம்பு எண்ணெய் இரண்டுமே பல் வலிக்கான […]
தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு […]
அடிக்கடி ஏற்படும் வாய்ப்புண் தொந்தரவுகளை நீக்க நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே உள்ள சில பொருள்களை வைத்து உங்கள் வாய் புண்ணை எளிதில் சரிசெய்ய முடியும். அது என்ன என்பதை எளிதில் தெரிந்து கொள்வோம். வாய்ப்புண்மிகவும் வேதனையான ஒரு விஷயம். ஏதாவது நாம் சாப்பிடும் போது கூட அந்த புண்களில் பட்டு அது வலியை கொடுக்கும். நீங்கள் உணவு சரியாக சாப்பிட முடியாது. அதிலும் காரமான உணவுகளை உங்களால் தொடவே முடியாது. அப்படி […]
குழந்தைகள் வைத்து விளையாடும் ஆன்டி டாக்ஸிக் கிரையான்ஸ்கள் (crayons) வைத்து லிப் பாம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ஹை குவாலிட்டி உள்ள கிரையான்ஸ் (சிவப்பு அல்லது பிங்க் நிறம்) தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் தேன் – 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிச் சூடு செய்யவும். பின்பு நன்கு தடிமனான கண்ணாடி டம்ளரைச் சூடான தண்ணீர் மீது நிற்க வைக்கவும். தற்போது டம்ளர் நன்கு சூடாகும் வரை காத்திருக்கவும். இந்த நேரத்தில் எடுத்து வைத்துள்ள கிரையான்ஸை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். […]
பாதவெடிப்பு பிரச்சனையால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிப்படைகின்றனர். அதற்கு காரணம் பாதங்களை சுத்தமாக வைக்காததால் தான். வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் தண்ணீரில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். வீட்டில் பாத்திரம் கழுவுவது, சோப்பு போடுவது, வீட்டை கழுவி சுத்தமாக்குவது, துணி துவைப்பது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அதிக அளவில் ஈழத்தில் இருக்கின்றனர். உப்பு தண்ணீரில் அதிக அளவில் கால் படுவதால் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு புண்ணாக மாறி வலியை ஏற்படுத்தும். பாதத்தில் […]
பைல்ஸ் என்று அழைக்கப்படும் மூல நோய் ஆசனவாயில் மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூல நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் எவ்வாறு சரி செய்வது என்பதை பார்ப்போம். நம் உடலில் வெப்பம் அதிகமாகும்போது மூல நோய் ஏற்படுகின்றது. அதிக அளவில் காரம், மிளகு, மிளகாய், இஞ்சி, பாஸ்ட்புட், சிக்கன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இந்த மூல நோய் ஏற்படுகின்றது. உட்கார்ந்து […]