Categories
சினிமா தமிழ் சினிமா

புலி வாலை பிடித்து சர்ச்சையில் மாட்டி கொண்ட சந்தானம்…. அடுத்தடுத்து கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்…..!!!!

பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் “கிக்”. இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலாகியது. அதன்பின் சந்தானம் மீண்டுமாக திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சந்தானம் புலி உடன் விளையாடும் வீடியோவை தன் இணையதளப் பக்கத்தில் பகிர்ந்து, “இதன் பெயர்தான் புலி வாலை பிடிக்கிறதா” என குறிப்பிட்டுள்ளார். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்கள் கத்தி வைத்திருங்கள்…. அதுதான் உங்களுக்கு நல்லது…. பாஜக எம்பி சர்ச்சை பேச்சு….!!!!

தங்கள் மதம் சார்ந்து பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் கடமை இந்துக்களுக்கு உண்டு என பாஜக எம்பி பிரக்யா தாகூர் கூறியுள்ளார். இது பற்றி பேசிய அவர், இந்துக்கள் தங்கள் வீட்டில் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் காய்கறி வெட்டும் கத்தி போன்ற ஆயுதங்களை ஆவது வைத்துக் கொள்ளுங்கள். தங்களை காத்துக் கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு. நம்மை யாரேனும் தாக்க முற்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். நம்மை நாமே  பாதுகாத்துக் கொள்வது தான் நல்லது. உங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை…? ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள்… பா.ஜ.க எம்.பி சர்ச்சை பேச்சு…!!!!

மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவ்வபோது சர்ச்சையை  ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிகாகோ மாவட்டத்தில் இன்று இந்து ஜெகாரண வேதகி எனும் அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.பி பிரக்யா சிங் தாகூர் கூறியதாவது, உங்கள் வீடுகளில் கூர்மையான ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் இல்லை என்றால் காய்கறி வெட்டும் கத்தியையாவது கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். […]

Categories
மாநில செய்திகள்

“2023ஆம் ஆண்டு தேர்வுகள்” எழுந்த சர்ச்சை…. TNPSC விளக்கம்..!!!!

2023 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் குரூப் ஃ4 தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு சமீபத்தில்  வெளியிடப்பட்டது. 2023 பிப்ரவரியில் குரூப் 2 பிரதான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 2023ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக ஓராண்டில் 10 தேர்வுகள் மூலம் 1.754 பணியிடங்கள் மட்டுமே TNPSC நிரப்ப உள்ளதாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், 2023 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை […]

Categories
சினிமா

“ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரித்து விடுவேன்”…. புதிய பரபரப்பை கிளப்பிய ஜகத்குரு….!!!!

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் பதான். இந்தத் திரைப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி மூன்று மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்று அண்மையில் வெளியாகிய நிலையில் அதில் காவி உடை சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஆபாச காட்சிகள்”… இந்துக்களை தொடர்ந்து முஸ்லீம்களும் பதான் படத்திற்கு கடும் எதிர்ப்பு….!!!!

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து “பதான்” என்ற இந்தி திரைப்படத்தில் ஜோடியாக நடித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரையரங்கிற்கு வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த  பாடலில் தீபிகா படுகோனே காவி உடையணிந்து இந்துக்கள் மனதை புண்படுத்தி இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ஷாருக்கானின் கொடும்பாவியை எரித்தனர். இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பதான் சர்ச்சை… மகளுடன் சென்று படத்தை பார்க்கணும்… ஷாருக்கானிடம் கேள்வி எழுப்பிய பாஜக..!!!

பதான் திரைப்படம் குறித்து ஷாருக்கானிடம் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள்  நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் நிறமும் பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள பேஷ்ரம் ரங் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன்”..? உ.பி பா.ஜ.க நிர்வாகி அதிரடி அறிவிப்பு…!!!!!

பிரதமர் மோடி பற்றி சர்ச்சை கூறிய விதமாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு  மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இவருடைய கருத்திற்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க- வினர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க சார்பாக நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் பாக்தாத் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அதில் பேசிய பா.ஜ.க உள்ளூர் நிர்வாகியும் மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால் அதிரடியான அறிவிப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல இயக்குனரை உருவ கேலி செய்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் மம்முட்டி… ஷாக்கிங் தகவல்…!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவர் ஓம் சாந்தி ஓசன்னா, சாராஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மையப்படுத்தி 2018 என்ற தலைப்பில் ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் டெவினோ தாமஸ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லிஸ்டில் முதலிடத்தில் அண்ணாமலை”… அப்ப உதயநிதிக்கு இடமில்லையா….? வசமாக சிக்கிய நடிகர் ரஜினி….!?!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த்நேற்று  தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டுத்துறை மற்றும் பிற துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் முதல் பக்கத்தில் அரசியல் தலைவர்களுக்கும், 2-ம் பக்கத்தில் சினிமா பிரபலங்களுக்கும், 3-ம் பக்கத்தில் விளையாட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் டபுள் எவிக்ஷன்… பிக்பாஸால் சர்ச்சை… விளாசும் நெட்டிசன்ஸ்..!!!!

பிக்பாஸை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள். பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த வாரம் டபுள் எபிக்ஷன் இருக்கின்றது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயிஷா, ராம், ஜனனி, அசீம், கதிர், ஏ.டி.கே உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டார்கள். எப்போதும் வீட்டில் இருந்து யார் வெளியேற போகின்றார் என்பதை ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்கள். ஆனால் இந்த வாரம் சனிக்கிழமை எழுமினேட் செய்யப்படும் இரண்டு நபர்கள் யார் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர்கள் ராம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநரின் அலமாரியில் தூங்கும் 21 மசோதாக்கள்…. போஸ்டர் ஒட்டி எச்சரித்த திமுக…. பரபரக்கும் அரசியல் களம்….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது என்று சொல்லப்படும் நிலையில் தற்போது கோவை மாநகரில் திமுக சார்பில் ஆளுநருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் தமிழக அரசியலில் பரபரப்பான ஒன்றாக மாறியுள்ளது. அதாவது தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் மற்றும் நீட்விலக்கு மசோதா போன்றவைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஆளுங்கட்சி மட்டுமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகைகளை அதனுடன் ஒப்பிட்டு தரக்குறைவாக பேசிய விஜய்… சோசியல் மீடியாவில் வெடித்த சர்ச்சை..!!!

நடிகர் விஜய் நடிகைகளை தரக்குறைவாக பேசியதாக சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்ரன், ஜோதிகாவை குதிரை என்று சொன்ன தளபதி விஜய்…. பிரபல நடிகரின் பேச்சால் திடீரென வெடித்த சர்ச்சை….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம்‌ உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் ஷாம் ஒரு பேட்டியில் விஜய் பற்றி சொன்னது தற்போது வலைதளத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது நடிகர் ஷாம் நான் திடீர்னு ஹீரோவாக மாறிய போது விஜய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்நாளா…? நன்னாளா…? ஜெ., நினைவு நாளில்…. EPS இப்படி சொல்லிட்டாரே…!!!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவில் அமைந்திருக்கும் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்க்கு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியே வந்து மரியாதை செலுத்த உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜெ., நினைவு நாளான இன்று உறுதிமொழி எடுத்து பேசிய EPS சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில், “ஜெயலலிதா மறைந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

சர்வதேச அரங்கில் இந்தியாவின் தேசிய கொடியை தலைகீழாக பறக்க விட்ட பிரபல நடிகை….. வலுக்கும் கண்டனங்கள்….!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நேரா பதேகி. இவர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தேசியக்கொடியை தலைகீழாக பிடித்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடிகை நேரா பதேகியின் நடனம் இடம்பெற்றது. இந்த நடனத்தை பலரும் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது நடிகை நேரா பதேகி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய கொடியை பிடித்திருந்தார். ‌ அப்போது தேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில்… புலிக்கு அருகில் சென்று இடையூறு… சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை..!!!!

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புலிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மிக அருகில் சென்றதாக நடிகை சர்சையில் சிக்கியுள்ளார். நடிகை ரவீனா தாண்டன் சென்ற 22ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதாபுரத்தில் இருக்கும் சத்புரா புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா சென்றார். அவர், புலிகள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்கு வனத்துறை வாகனத்தில் சென்றார். மேலும் அங்கு சுற்றி திரிந்த புலியை கண்டு புகைப்படம் எடுத்திருக்கின்றார். அவருடன் சென்றவர்களும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருக்கின்றார்கள். இது குறித்த வீடியோ சோசியல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“தொடர் சர்ச்சை கருத்துக்கள்”…. தவறான செய்திகளால் வேதனையில் நடிகை ராஷ்மிக்கா…. அவரே சொன்ன விளக்கம் இதோ….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு நடிகர் ராஷ்மிகா பற்றி சமீப காலமாகவே இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் ராஷ்மிகா கன்னட சினிமாவை அவமதித்ததால் அவரை கன்னட சினிமாவில் இருந்து நிரந்தரமாக விளக்குவதற்கு தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் நடிகர் ராஷ்மிகா தன்னைப் பற்றி பரவும் தகவல்களுக்கு தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அவமானம் இப்ப அதிகாரப்பூர்வமானது”…. தி காஷ்மீர் பைல்ஸ் சர்ச்சை கருத்தால் கொந்தளித்த பிரகாஷ்ராஜ்…. வைரல் ட்வீட்….!!!!!

கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்ற நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவின் இறுதி நாளில் இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்படத் தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் ஒரு இழிவான மற்றும் கொச்சையான திரைப்படம் என்று விமர்சித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் பண்றது பிடிச்சா சப்போர்ட் பண்ணுங்க.. இல்லன்னா வெளியே கொண்டு வந்துடுங்க… ரசிகரின் கேள்வி.. மைனா சர்ச்சைக்குரிய பதில்..!!!

ரசிகரின் கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலை தந்துள்ளார் மைனா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பார்வையாளர்கள் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் ஒரு பகுதி நடந்தது. அப்போது மைனா மற்றும் ரச்சிதாவிடம் கேள்வி கேட்ட ஒருவர் உங்க paid holidays எப்படி இருக்குதுன்னு கேட்டார். மற்றொருவர் மைனா மணிகண்டன் உள்ளிட்டோர் நட்பு என்ற பெயரில் cringe செய்கின்றார்கள் என குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த மீனா நான் பண்றது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காலம் போக போக ரஜினி படங்களை மறைந்திடுவாங்க… எப்பயுமே கமல் தான்… சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல நடிகர்…!!!!

ரஜினி, கமல் திரைப்படங்கள் குறித்து பிரபல நடிகர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்ச நடிகராக வலம் வருகின்றார். ஆனால் ரஜினி தற்போது முன்பு போல் இல்லை, வயதாகிவிட்டது. இனி அவரின் திரைப்படங்கள் ஓடாது என கடுமையாக விமர்சித்தார்கள். இதற்கு பதிலடி தரும் வகையில் ரஜினி தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகின்றார். ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

“ப்ளூ சட்டை மாறனுக்கு போட்டியா போகலாம்”…. முதல்வரை சீண்டிப் பார்த்த சவுக்கு சங்கர்….. செம கடுப்பில் திமுக….!!!!!

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில், பழைய வழக்குகளில் சவுக்கு சங்கரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு சவுக்கு சங்கர் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இவருக்கு ஜாமீன் வழங்கிய போது நீதிமன்றம் முக்கியமான 5 நிபந்தனைகளை விதித்தது. அதாவது தினமும் காலை 10.30 மணி அளவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்க சம்மதத்தோடதான் நான் அப்படி பேசினேன்”…. சர்ச்சை பேச்சுக்கு சதீஷ் விளக்கம்…!!!!!

தர்ஷா குப்தா குறித்து பேசியதற்கு கண்டனம் வலுத்த நிலையில் சதீஷ் விளக்கம் அளித்துள்ளார். பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் செயல்படுத்துங்க – அரசு அதிரடி அறிவிப்பு …!!

சமூகநீதி கொள்கைகள் செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதிக் கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற  மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் தலைமையில் சட்ட நிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பிற அலுவலர்களை உள்ளடக்கிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் மூன்றாவது முறையாக லூலா டி சில்வா அதிபர்… உலகத் தலைவர்கள் வாழ்த்து…!!!!!

பிரேசிலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனோரா மீண்டும் போட்டியுள்ளார். அவருக்கு எதிராக முன்னாள் அதிபரும் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவருமான லூலாடி சில்வா களம் இறங்கியுள்ளார். மேலும் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 11 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் லூலா டி சில்வா 47.9% வாக்குகளும், போல் சனோரா 43.6% வாக்குகளும் பெற்றுள்ளார். பிரேசில் அரசியலமைப்பு சட்டப்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத […]

Categories
மாநில செய்திகள்

“முகம் சுழிக்கும் ஹேஷ்டேக்”…. தட்டி கேட்ட ஷர்மிளா….. வெளுத்து வாங்கிய கஸ்தூரி….. பரபரக்கும் ட்வீட் பதிவுகள்…..!!!!

திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெண்கள் பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ஆண்கள் பெண்களை அவமரியாதியாக பேசினால் அது அவர்கள் வளர்ந்த விதத்தையும் நச்சு சூழலையும் காட்டுகிறது. ‌ ஆண்கள் பெண்ணின் கர்ப்பப்பையை அவமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் தாங்கள் கலைஞரை பின்பற்றுவதாக கூறுகிறார்கள். இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் நடக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“தயவு செய்து தமிழை கொள்ளாதீர்கள்”…. நீங்கள் ஒரு உபதேசம் செய்யலாமா….. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தமிழை வளர்க்க வேண்டும் என்று கூறி பாஜக உள்ளிட்ட கட்சிகள் பதில் குறள் எழுப்பி வருகிறது. அதன்படி நாமக்கலில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டு தமிழ் மொழியை வளர்க்க கோரி குரல் எழுப்பினர். அதுமட்டுமில்லாமல் பாஜகவிற்கு எதிராக போய் பிரச்சாரம் செய்யக்கூடாது, திமுக அரசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சரக்கு, சிகரெட்”…. அசல் கோலாரின் மற்றொரு முகம்‌…. வீடியோவால் ரசிகர்கள் ஷாக்….!!!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதில் 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது இந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் அசல் கோளார். இவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் அனைவரின் முகம் சுளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது இதனால் இவரை பலரும் வெளியில் இருந்து வெறுத்து வருகின்றார்கள்.   Avan fans […]

Categories
தேசிய செய்திகள்

கோர்ட்டில் பெண் வழக்கறிஞர்கள் தலைவாரக் கூடாது….. திடீர் உத்தரவால் வெடித்த சர்ச்சை…..!!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு பெண் வழக்கறிஞர்கள் சீப்பை வைத்து தலை சீவுவதால் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நீதிமன்றத்திற்குள் பெண் வழக்கறிஞர்கள் தலை சீவக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‌ இது குறித்து நீதிமன்ற பதிவாளர் சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை எதிர்த்து மூத்த பெண் வழக்கறிஞர்கள் உட்பட பெண் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்‌. அதோடு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சர்ச்சைகுள்ளானது எனவும் விமர்சித்துள்ளனர். இதன் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் பள்ளி தேர்வு தாளில் இடம்பெற்ற கேள்வி…? பெரும் சர்ச்சை… பள்ளி நிர்வாகம் அளித்த விளக்கம்…!!!!!

பீகார் மாநில பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாநில கல்வித்துறை சார்பில் கடந்த 12 முதல் 18ஆம் தேதி வரை இடைக்கால தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழாம் வகுப்பு ஆங்கில தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த கேள்வியில் பின்வரும் நாடுகளை சேர்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள் என கேட்கப்பட்டிருக்கிறது. அதில் சீனாவை சேர்ந்த மக்கள் சீனர்கள் என அழைக்கப்படுவார்கள் என்ற உதாரணம் கொடுக்கப்பட்டிருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் இருக்காரு”…? சர்ச்சையை ஏற்படுத்திய அன்புச்செழியன்..!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் தற்போதுள்ள முன்னணி ஹீரோக்களில் அதிகமான ரசிகர்களை கொண்டவர்களில் விஜய் அஜித்திற்கு இடையே தான் போட்டி நடைபெற்று வருகின்றது. இதனால் சமூக வலைதளங்களிலும் விஜய் அஜித் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ்த் திரையுலகில் கடந்த பல வருடங்களாக பைனான்சியராக தயாரிப்பாளராக விநியோகஸ்தராக உள்ள மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் நேற்று நடைபெற்ற பிரின்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அடுத்த சர்ச்சையை உருவாக்கும் விதமாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் எல்லாருக்கும் பிடிச்ச […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் ஒரு பெண் தான்… ஆனால் கள்ள உறவு 3 பெண்கள்… இந்து மதத்தினர் பற்றி ஏஐஎம்ஐஎம் தலைவர் சர்ச்சை பேச்சு…!!!!

ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசியின் கட்சி அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் ஆகும். ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் உத்தரபிரதேச மாநில தலைவர் சவுகந்த் அலி நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது இந்து மதத்தினர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மூன்று பெண்களுடன் கள்ள உறவு வைத்திருக்கின்றனர் என்று சர்ச்சை கூறிய விதமாக கருத்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய போது நாங்கள் மூன்று திருமணம் செய்கின்றோம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை பூஜா பிரபல பாலிவுட் நடிகருடன் காதல்” தீயாக பரவிய கிசுகிசு….. உண்மை நிலவரம் என்ன‌‌….?

தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் அடி எடுத்து வைத்த பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா நடித்திருப்பார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் காதல் கிசுகிசுகள் போன்ற சம்பவங்களில் சிக்காமல் இருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமீர்கான்” இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக புகார்…. பாஜக கடும் கண்டனம்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் பட விழாக்கள் மற்றும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் போது சில  சர்ச்சையான கருத்துக்களை பேசி சிக்கிக் கொள்வார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வெளியான லால்சிங் தத்தா திரைப்படத்தைக் கூட ரசிகர்கள் இணையதளத்தில் கடுமையாக புறக்கணித்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அமீர்கான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பர படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு கடும் எதிர்ப்பு….. ஆதிபுருஷ் படத்துக்கு தடையா….? திடீர் பரபரப்பு…..!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ராமாயண காப்பியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தில், பிரபாஸ் ராமனாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் இணையதளத்தில் கேலிக்குள்ளானதோடு, பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆதிபுருஷ் திரைப்படம் ஒரு கார்ட்டூன் திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் வாடைக்கைதாய் விவகாரம்…. சர்ச்சையை ஏற்படுத்திய…. நடிகை கஸ்தூரி டுவிட் பதிவு…!!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளதாக அறிவித் துள்ளார்கள். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன பிறகு வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் இவர்கள் திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தை பெற்றுள்ளது பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி டுவிட்டரில் இது தொடர்பாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ‘மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இரட்டை குழந்தை” சர்ச்சையில் சிக்கிய நயன்-விக்கி…? வெளியான தகவல்…!!!

திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் குழந்தைகளின் பாதங்களை கொஞ்சி முத்தமிட்டபடி இருக்கின்றனர்.  வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன் விக்கி தம்பதியின் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் வாடகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி பிரபலம்…. இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!!

விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பின் மூலம் புகழுக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் வலிமை, பீஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு ஜூ‌ கீப்பர் என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தான் நீண்ட நாளாக காதலித்த பென்சியா என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது புகழ் தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

பாய் பிரண்டு வேணுமா பாய் ஃப்ரெண்ட்?….. பெண்களுக்கு பாய் பிரண்டுகள் சப்ளை…. பரபரப்பை கிளப்பிய மொபைல் செயலி….!!!!

உலகில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. அதன் பலனாக வீட்டில் இருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் முடிக்கும் பல்வேறு வசதிகள் நாளுக்கு நாள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. நமக்கு தேவையான உணவு முதல் அனைத்து பொருட்களும் வீட்டின் வாசலுக்கே வர வைக்க கூடிய அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாம் எப்போது ஆவது தனிமையில் இருந்தால் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு இருந்தால் முதலில் நாம் தேடுவது ஒரு நெருங்கிய […]

Categories
உலகசெய்திகள்

“அமெரிக்காவிற்கு எரிச்சலூட்ட புடின் செய்த செயல்”… சர்ச்சைக்குரிய நபருக்கு அடைக்கலம்…!!!!!

தாங்கள் ஒரு சர்ச்சைக்குரிய நபருக்கு அடைக்கலம் கொடுக்கின்றோம் என்பது தெரியாமல் ஒருவருக்கு உதவ முன்வந்தால் சிக்கலுக்குள்ளாகிய இலங்கை அகதிகளை நினைவு இருக்கலாம். 2016 ஆம் வருடம் Snowden என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகியுள்ளது. அந்த படம் அமெரிக்க அரசின் முக்கிய ரகசியங்களை வெளியிட்ட முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடெனை பற்றிய படமாகும். அந்தப் படத்தில் எட்வர்டுக்கு ஹொங்கொங்கின் சட்டதரணி ஒருவரும் இலங்கை அகதிகள் சிலரும் உதவும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அந்த அகதிகள் சிக்கலுக்கு அழகியுள்ளனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“பாஜக இல்லை திமுகவினர் தான் சிறை செல்ல அஞ்சுவார்கள்”… மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை…!!!!!

முதல்வர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை.  ஆனால் மிசா சட்டத்தில் கைதானது போல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்துள்ளார் மதுரை மற்றும் காரைக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கட்சி நிர்வாகிகளிடம் பேசியுள்ளார். இதனை அடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காயத்ரி எனக்கு பொண்டாட்டி மாதிரி”…. சர்ச்சையில் சிக்கிய பிரபலம்…!!!!!

காயத்ரி எனக்கு பொண்டாட்டி மாதிரி எனக் கூறி கூல் சுரேஷ் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை காயத்ரி நடிப்பில் உருவான மாமனிதன் படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கினார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்தனர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக காயத்ரி நடித்துள்ளார். ஒரு கிராமத்தில் வாழும் பெண் அன்பான மனைவி, இரண்டு குழந்தைகளின் தாய் என நடிப்பில் பட்டைய கிளப்பி இருந்தார். இத்திரைப்படத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“சபையின் கண்ணியத்தை கெடுக்கும் பா ஜனதா எம்எல்ஏக்கள்”… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

உத்திரபிரதேச மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்றுள்ளது. கூட்டத்தின் போது இரண்டு எம்எல்ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சபை நடவடிக்கையின் போது பா ஜனதா எம்எல்ஏ ராகேஷ் கோ சுவாமி மொபைலில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றொருவர் தனது கையில் புகையிலை கொட்டி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தார். இந்த இரண்டு வீடியோவையும் சமஜ்வாடி கட்சி தனது அதிகார ட்விட்டர் மட்டும் பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

“முதல்வரின் நாற்காலியில் அமர்ந்த எம்பி” தந்தையின் இடத்தில் மகன் அமர்ந்த புகைப்படம் வைரல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

மராட்டிய மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் நாற்காலியில் அவருடைய மகன் எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே உட்கார்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போட்டோவில் எம்பி ஸ்ரீகாந்த் உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் பின்னால் மராட்டிய மாநில முதல்வர் என்ற போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் சூப்பர் முதல்வராக மாறி விட்டீர்களா? இந்த செயலுக்காக நீங்கள் மக்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

“நாங்க ஜாதி பார்க்க மாட்டோம்”…. அது வெளியில மட்டும்தான்…. உள்ளுக்குள்ள அப்படி இல்ல…. சர்ச்சையில் சிக்கிய செங்கோட்டையன்….!!!!

தமிழக அரசியலில் அதிக நாட்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்த அதிமுகவின் நிலைமை தற்போது அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் வகையிலேயே இருக்கின்றது. அனைத்து கட்சியினரையும் அதிமுகவை விமர்சித்து பேசும் நிலைக்கு உட்க்கட்சி பூசல் பெருமளவில் கனலாக கொதித்துக் கொண்டிருக்கின்றது. முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து ஓரம் கட்டி,  எடப்பாடி பழனிச்சாமி முழு அதிகாரத்தையும் தனதாக்கி கொண்டார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்கினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கொரியர்கள் பற்றிய சர்ச்சை கருத்து” நடிகர் சிவாவுக்கு இணையதளங்களில் வலுக்கும் எதிர்ப்பு…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும்  சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் டான் படம் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இவர் தற்போது பிரின்ஸ் மற்றும் மாவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள ஒரு தனியார்  பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடம் […]

Categories
உலக செய்திகள்

கோட்டபாயவை நேரில் சந்தித்த ரணில் விக்ரமசிங்கே…. மக்கள் ஆதங்கம்…. எழுந்துள்ள சர்ச்சை…!!!

இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய, நாடு திரும்பிய நிலையில் தற்போதைய  அதிபர் ரணில் விக்ரமசிங்கே, அவரை சந்தித்தது சர்ச்சையாகி இருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி கடுமையாக அதிகரித்ததால், நாட்டு மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராடினர். போராட்டம் தீவிரமடைந்ததால், அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டிலிருந்து தப்பினார். இந்நிலையில், சமீபத்தில் நாடு திரும்பிய அவருக்கு அரசாங்கம்,  பெரிய பங்களா ஒன்றை கொடுத்தது. அவருக்கு, ராணுவ பாதுகாப்பும் வழங்கினர். அதிபர் ரணில் விக்ரமசிங்கே இவற்றை நேரடியாக மேற்பார்வையிட்டார். எனவே, மக்களுக்கு அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அமலா பால் 2-வது திருமணத்தை மறைத்தாரா…?”…. வெளியான ஆதாரங்களால் சர்ச்சை….!!!!!

நடிகை அமலா பால் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை மறைத்து பொய் புகார் அளித்துள்ளதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். சென்ற 2014 ஆம் வருடம் இயக்குனர் ஏ.எல்.விஜய்-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2017 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். இந்த நிலையில் சென்ற 2016ஆம் வருடம் திரைப்பட தொழில் மூலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர்சிங் அவர்களுடன் அமலாபாலுக்கு நட்பு ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மனு கொடுக்க வந்த பெண்….. நான் என்ன கற்பழிக்கவா செய்தேன்?…. பரபரப்பை கிளப்பிய பாஜக எம்எல்ஏ….!!!

பெங்களூரு மகா தேவபுரா தொகுதி பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளிசமீபத்தில் மனு அளிக்க வந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள பாஜக எம்எல்ஏ அரவிந்த், அந்தப் பெண் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவர் ஆக்கிரமிப்பு செய்த வீடு கட்டி உள்ளார். அது பற்றி பேச வந்ததால் தான் கோபமாக பேசினேன், நான் என்ன யாரையும் கற்பழித்து விட்டேனா என திமிராக பேசி மீண்டும் பிரச்சினையில் சிக்கியுள்ளார்.மேலும், அந்த […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி தான் சரக்கு அடிக்கணும் OK…. மாணவர்களுக்கு அட்வைஸ்…. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்….!!!!

சட்டீஸ்கரின் பள்ளி கல்வி அமைச்சர் பிரேம்சாய் சிங் தேகம் தற்போது, 2 சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். சில தினங்களுக்கு முன் வாத்ராப் நகரில் பள்ளி மாணவர்களுக்காக நடந்த போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘மது அருந்துவதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதற்கு அடிமையாகி விடக் கூடாது. மது மக்களை ஒன்றிணைக்கிறது. மதுவை சரியான அளவு தண்ணீருடன் கலந்து குடித்தால் உடலுக்கு ஒரு கெடுதலும் இல்லை,’ என்று பேசினார். அடுத்து மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய […]

Categories

Tech |